நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, November 27, 2011

கிரிக்கெட் போட்டியும் மயக்கம் என்ன படமும்

கிரிக்கெட் போட்டி

நேற்று வலைப்பதிவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் கிடைச்சது. உண்மையில் இதை ஒழுங்குபடுத்திய அஸ்வினுக்கு நன்றிகள். மீண்டும் எனக்கு நிறைய நாட்களின் பின் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பமும் கிடைத்தது. உண்மையில் சந்தோசமாக இருந்தது. வலைப்பதிவர்கள் சேர்ந்து ஒரு பிரிவாகவும், அஸ்வின் நண்பர்கள் இன்னொரு அணியாகவும், அத்தோடு மது அண்ணாவின் ( ஐயோ இது நான் இல்லை இன்னொரு மது) நண்பர்கள் என இன்னொரு அணியாகவும் விளையாட தீர்மானித்து அணிக்கு 8 பந்து பரிமாற்றம் என தீர்மானித்து விளையாடினோம். காலநிலையும் நேற்று எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. எனினும் இடையில் மழை வந்து வெருட்டி விட்டு சென்றது.
9.30 க்கு அனைவரையும் ஒன்று கூட அழைப்பு விடப்பட்டு இருந்தது. அதே போல நேரகாலத்துக்கு எல்லாரும் வந்திருந்தாங்க. சொன்னா நம்புங்ககையா!!!! ஒரு மாதிரி எமது வலைப்பதிவு அணியில் நான், மாலவன் அண்ணா, கோபி அண்ணா, அஸ்வின், நிருஜன், கோபி, பகி அண்ணா என எமது அணி நீண்டு கொண்டே சென்றது. ஒரு மாதிரி எமது அணி 11 பேரை சேர்த்துவிட்டது. எனினும் லோசன் அண்ணாவும், மருதமூரான் அண்ணாவும் தான் தாங்கள் முதலாவதாக வரவுதாக அறிவித்ததாக கூறி இருந்ததாக கதைத்தார்கள். ஆனால்........... பகீ அண்ணாவை நாஙகள் மறக்க முடியாது. அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு உள்ளம். இடையில் குளிர்பான உதவிகளை நேரில் வந்து தந்து சென்று இருந்தார் லோசன் அண்ணா. இருவருக்கும் நன்றிகள். அனைத்துப் போட்டிகளிலும் வெல்லுவோம் என்று களமிறங்கிய எமது அணி சிறப்பாக விளையாடிய போதிலும் கிடைத்தது..........................
நேற்றைய போட்டி மூலம் வலைப்பதிவர்கள் தமக்கிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தார்கள். என்றும் வலைப்பதிவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இப்படியே சந்தோசமாக மொக்கை போட்டுட்டே இருக்கனும்................

மயக்கம் என்ன


நேற்று ஈரோஸில் மயக்கம் என்ன படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது. தனுஸ், ரிச்சா நடிப்பில் ஜிவி பிரகாஸின் இசையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி வித்தியாசமாக இருந்தது. தனுஸ் ஒரு புகைப்பிடிப்பாளர். தனக்கென்றொரு நிலையை அடைய துடிக்கும் இளைஞன். தனுஸின் தாய் தந்தை சிறுவயதிலே இறந்துவிட நண்பர்களின் அரவணைப்பிலேயே வளர்கிறான். நடிகை ரிச்சா நண்பனின் DATING GIRL ஆக அறிமுகமாகிகிறாள். அதன் பின் எப்படி தனுஸ்க்கு ஜோடி சேருகிறது என்பது தான் படத்தின் முதல் பாதி கதை. முதல்பாதியில் இருந்து மிக தெளிவாக சில விடயங்களை இயக்குனர் தெளிவுபடுத்துகிறார்.
பெண்கள் மிக தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் நாம் தான் DATING , LOVE என்று வித்தியாசம் தெரியாமல் குழப்பித் திரியிறம். தனுஸ்க்கு ஜோடியாக மாறும்போது சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி இருந்தார் இயக்குனர். படத்தின் மீதி கதையில் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் எவ்வாறு உதவுகிறாள் என்று நகருகிறது. இடையில் பைத்தியமாக மாறும் தனுஸ் நடிப்பில் ஒரு ஜே போட்டே ஆக வேண்டும். சில இடத்தில் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று புரியவே இல்லை. படத்தில் பாடல்களும் பாடல் அமைப்பும் பிரமாதம். ஓட ஓட ஓட தூரம் குறையெல்ல என்ற பாடலும் காட்சி அமைப்பும் பிரமாதம். அத்தோடு பிறைதேடும் .... என்று ஆரம்பிக்கும் மெலடி பாடலும் பிரமாதம் ஜிவி பிரகாஸ் இசை பிரமாதம். உண்மையில் மயக்கம் என்ன படம் மயக்கம் தான்..........

5 comments:

Unknown said...

//அனைத்துப் போட்டிகளிலும் வெல்லுவோம் என்று களமிறங்கிய எமது அணி சிறப்பாக விளையாடிய போதிலும் கிடைத்தது.......................... //
ஓ அப்பிடியா இறங்கினிங்க? சொல்லவே இல்ல

Ashwin-WIN said...

ஹா ஹா ஹா... கிடைத்தது ................
அது இடைவேளியாவே இருக்கட்டும் நல்லது.

MATHUKARAN said...

ஒரு பிள்டப்பு குடுக்கலாம் எண்டா விடமாட்டிங்கள் போல..... எங்கட அணியை பற்றி தெரியல்ல.... நிச்சயம் ஒரு நாள் நாங்களும் வெல்வோம்..............

Unknown said...

போனமுறை வென்றோம்தானே,

MATHUKARAN said...

அது போன வருசம்...............நண்பா!!! இது இந்த வருசம்.......

Post a Comment