நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, February 13, 2011

காதலா?? காமமா??

என்ன தலைப்பை பார்த்து யோசிக்கிறீர்களோ? என்னடா இது என்று? ஆனால் யோசிச்சு பார்க்க வேண்டிய விடயம் என்பதால் புன்னகையில் புன்னகைக்கிறது. காதல், காமம்  இரண்டுக்கும் இன்றைய காலகட்டத்தில் வித்தியாசம் இருக்கா? அல்லது காதலுக்காக காமமா?? காமமத்துக்காக காதலா? என்று சிலவேளைகளில் சிந்திக்க தோன்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது சகஐமாகி விட்டது. எந்த வயதிலும் காதல். எவரும் காதல். எங்கும் காதல். எதிலும் காதல் என்றாகி விட்டது. ஆனால் ஜெயிக்கும் காதல் ஒரு சிலவே. உண்மைக் காதல். புனிதமான காதல் ஜோடிகளையும் கண்டு இருக்கிறோம்.



ஆனால் இன்று சிலபேர் காமப்பசியை தீர்க்க காதல் என்ற பாதையை தெரிந்தெடுத்திருப்பது தான் மிகவும் கவலையாக இருக்கு. இப்ப சிலபேருக்கு வயது வரம்பின்றி காமலீலைகளில் ஈடுபடுவதும், ஈடுபட தூண்டுவதும் சகஐமாகி விட்டது. என்ன செய்ய??? நம்ம நாடும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதோ?? அல்லது நம்ம தமிழ் மக்கள் கட்டி காத்த கலாச்சாரம் எங்கு செல்கிறது என்று வருந்துவதோ தெரியவில்லை.
இதிலே சில இளம் வயதினர்தான் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுவது மிகவும் மனம் வருந்துற செயல் பாருங்கோ??




காதலா?, காமமா? ,அல்லது ஒருவர் மீது ஏற்படும் ஒரு வித ஈர்ப்போ??,  இவற்றை பிரித்து அடையாளம் காண தெரியாதவர்களே இவ்வாறான பிரச்சனையில் சிக்குகிறார்கள் என்பதில் ஐயமில்லை. சின்ன வயதில் ஏற்படுவது காதல் என்று சொல்லலாமா? 4 வருட கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்டு 4 வது வருடத்திலே காணாமற் போவதை காதல் என்பதா?? அல்லது தவறிய அழைப்புகள் மூலம் காதலாகி தவறுவதை காதல் என்பதா? பேஸ்புக் மூலம் ஏற்படும் காதலை காதல் என்பதா? உண்மையில் தெரியவில்லை. காதல் ஜோடிகளுக்கு இடையில் இருக்கும் நல்ல புரிந்துணர்வே சிறந்த காதலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவன் தனது வாழ்க்கைப் பாதையை தீர்மானித்த பிறகு ஏற்படும் காதல் சிறந்ததாக இருக்கும் என் நான் நம்புகிறேன்.

காதல் ஒரு அழகான விடயம். காதலையும் காமமத்தையும் இணைக்காதீர்கள். காமப்பசியை தீர்க்க காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்.
                " காதல் கூடாது என்று சொல்ல அது கெட்ட செயல் ஒன்றும் இல்லை"

அன்புள்ள காதலர்களுக்கு இனிய காதலர்;தின வாழ்த்துக்கள்.
அனைவரது காதலும் வெற்றியில் முடிய புன்னகையின் புன்னகையான வாழ்த்துக்கள்

Tuesday, February 8, 2011

என்ன கொடுமை சரவணா????

அடக் கடவுளே! ஏன் தொடர்ந்தும் இப்படி இயற்கை மூலம் நம் மக்களை கஸ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறாய்??????  எம் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும் நினைத்து விட்டான் போலும்!
மழை தொடர்ந்தும் மக்களை விட்டபாடில்லை. தொடர் மழை,  வெள்ளம். என்று மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். தொடர்ந்தும் மக்கள் பாடசாலைகள்,கோவில்கள் என்று பொது இடங்களில் தங்கி இருக்கின்றனர். எனினும் மக்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பது தொடர்ந்தும் மந்த கதியில் தான் இடம்பெறுவது யோசிக்க வேண்டிய விடயம் தான்.

இலங்கையிலே மட்டக்களப்பு மக்கள் என்ன பாவம் செய்தார்களா??? தெரியவில்லை. இயற்கை அழிவுக்கு குறைவே இல்லை. பாவம் அந்த மக்கள். அதே போல் இம்முறை வவுனியா மற்றும் அநுராதபுர மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



நிவாரண பணிகள் இடம்பெற்றாலும் மிகவும் மந்த கதிதான். தேர்தல் காலம் நெருங்குவதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசியல் தலைவர்களின் வருகைக்கும் குறைவில்லையாம். ஆனால் அவர்களும் மற்ற மக்களிடம் பிச்சை கேட்டு பொருட்களைப் பெற்று கொண்டு போய் மக்களிடம் கொடுக்கிறறார்களாம். பின் மறுநாள் பத்தரிகைகளில் பெரிய எழுத்துகளில் செய்தி. இவர் அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார் என்று. ஏன் ஐயா??? இப்படி ஒரு வேலை. இதிலும் உங்களுக்கு ஒரு ........................ விடுங்கையா.... தமிழ் சிங்கள மக்கள் என்று வேறுபாடு இன்றி அனைவரும் உதவி செய்யுங்கள்.
மழை தொடர்ந்த வண்ணமே உள்ளது. வெள்ளம் நிறைகிறது........