நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, April 22, 2012

யாழ் கம்பன் விழா 2012

யாழ்ப்பபாண கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழா 2012 நேற்று (21.04.2012 சனிக்கிழமை) நல்லூர் பரமேஸ்வரி மண்டபத்தில் அரங்கேறியிருந்தது. நிறைய நாட்களுக்கு பின் நல்ல தமிழ்சுவையை நல்லூரிலே ருசிக்க முடிந்தது என்றால் மிகையாகது. உண்மையில் 17 வருடங்களுக்கு பின் இக் கம்பன் விழா யாழ்ப்பாணத்திலே அரங்கேறியுள்ளது.  தனிப்பட்ட சிலரின் காரணங்களுக்காகவும் அரசியல் பிரச்சனையாலும் கம்பன் விழா யாழில் இடம்பெறாமல் இருந்தது. உண்மையில் சிலரின் அவ் நடவடிக்கையால் நாம் வெட்கப்படவேண்டியே உள்ளது.
நடந்தேறிய கம்பன் விழா காலை, மாலை என இரு அமர்வுகளாக நடந்தது. காலை அமர்வில் "பேரழகனான இராமன்" என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் இடம்பெற்றிருந்தது. மாலை நிகழ்வில் " கம்பநாடன் கவிதையோடு காலமெல்லாம் வாழ்ந்திடலாம்" என்ற கவிதையரங்கும் "தவறிழைத்த தந்தையர் குற்றக்கூண்டில்" என்ற வழக்காடு மன்றமும் இடம்பெற்றது. எம் மண் தந்த பேச்சாளர்கள் கவிஞர்களை இம்மேடை மீண்டும் தூசி தட்டி புதுப்பித்துள்ளது என்றால் மிகையாகது. திரு.கம்பவாரிதி, திரு.பாலசண்முகன், திரு.லலீசன், திரு.பிரசாந்தன், திரு.சோ.ப, திரு.மணிமாறன், திரு.ஜெயசீலன், திரு.சிவசிதம்பரம், என எம் பேச்சாளர்களோடு திரு.இராமலிங்கம் மற்றும் திரு.சண்முகவடிவேல் என இந்திய பேச்சாளர்களோடு விழா சூடு பிடித்திருந்தது.
அளவான கூட்டம் அமைதியான அவை என வித்தியாசமான ஒரு உலகத்துக்கே அங்கிருப்பவர்களை அழைத்துச் சென்றிருந்தது. ஆனால் இன்னும் அவை நிறைந்திருக்கும் விழா பற்றிய விளம்பரம் சரியாக செய்யப்படவில்லை. அது ஏன் என்றுதான் தெரியவில்லை??? இனி நாம் கம்பன் கழகத்தால் நிறைய விழாக்களை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இப்படி நடைபெறும் தமிழ் விழாக்களை அரசியல் ஆக்காதீர்கள். கம்பன் விழா போன்ற விழாக்கள் தமிழ் விழாக்கள். இது அரசியல் நிகழ்வுகள் அல்ல. எனவே இப்படியான விழாக்கள் மூலம் தமிழை வளருங்கள்.. அத்தோடு ஏன் இவ்வளவு நாளும் கம்பன் விழா நடைபெறவில்லை என்ற வீண் விதண்டாவாதமும் வேண்டாம். இனியாவது நாம் தமிழர் என்ற ரீதியில் ஒற்றுமையாக தமிழை வளர்ப்போம்.. வெட்டிப்பேச்சுக்களை தவிர்ப்போம்.
மீண்டும் தமிழை அதுவும் நல்ல அழகான தமிழை ருசிக்கத் தந்தமைக்காக அனைவருக்கும் நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.
எனினும் எம் தூய தமிழில் இந்திய தமிழ் கலப்பதை கூடியளவுக்கு தவிர்ப்பது சிறப்பு...