நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, April 22, 2012

யாழ் கம்பன் விழா 2012

யாழ்ப்பபாண கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழா 2012 நேற்று (21.04.2012 சனிக்கிழமை) நல்லூர் பரமேஸ்வரி மண்டபத்தில் அரங்கேறியிருந்தது. நிறைய நாட்களுக்கு பின் நல்ல தமிழ்சுவையை நல்லூரிலே ருசிக்க முடிந்தது என்றால் மிகையாகது. உண்மையில் 17 வருடங்களுக்கு பின் இக் கம்பன் விழா யாழ்ப்பாணத்திலே அரங்கேறியுள்ளது.  தனிப்பட்ட சிலரின் காரணங்களுக்காகவும் அரசியல் பிரச்சனையாலும் கம்பன் விழா யாழில் இடம்பெறாமல் இருந்தது. உண்மையில் சிலரின் அவ் நடவடிக்கையால் நாம் வெட்கப்படவேண்டியே உள்ளது.
நடந்தேறிய கம்பன் விழா காலை, மாலை என இரு அமர்வுகளாக நடந்தது. காலை அமர்வில் "பேரழகனான இராமன்" என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் இடம்பெற்றிருந்தது. மாலை நிகழ்வில் " கம்பநாடன் கவிதையோடு காலமெல்லாம் வாழ்ந்திடலாம்" என்ற கவிதையரங்கும் "தவறிழைத்த தந்தையர் குற்றக்கூண்டில்" என்ற வழக்காடு மன்றமும் இடம்பெற்றது. எம் மண் தந்த பேச்சாளர்கள் கவிஞர்களை இம்மேடை மீண்டும் தூசி தட்டி புதுப்பித்துள்ளது என்றால் மிகையாகது. திரு.கம்பவாரிதி, திரு.பாலசண்முகன், திரு.லலீசன், திரு.பிரசாந்தன், திரு.சோ.ப, திரு.மணிமாறன், திரு.ஜெயசீலன், திரு.சிவசிதம்பரம், என எம் பேச்சாளர்களோடு திரு.இராமலிங்கம் மற்றும் திரு.சண்முகவடிவேல் என இந்திய பேச்சாளர்களோடு விழா சூடு பிடித்திருந்தது.
அளவான கூட்டம் அமைதியான அவை என வித்தியாசமான ஒரு உலகத்துக்கே அங்கிருப்பவர்களை அழைத்துச் சென்றிருந்தது. ஆனால் இன்னும் அவை நிறைந்திருக்கும் விழா பற்றிய விளம்பரம் சரியாக செய்யப்படவில்லை. அது ஏன் என்றுதான் தெரியவில்லை??? இனி நாம் கம்பன் கழகத்தால் நிறைய விழாக்களை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இப்படி நடைபெறும் தமிழ் விழாக்களை அரசியல் ஆக்காதீர்கள். கம்பன் விழா போன்ற விழாக்கள் தமிழ் விழாக்கள். இது அரசியல் நிகழ்வுகள் அல்ல. எனவே இப்படியான விழாக்கள் மூலம் தமிழை வளருங்கள்.. அத்தோடு ஏன் இவ்வளவு நாளும் கம்பன் விழா நடைபெறவில்லை என்ற வீண் விதண்டாவாதமும் வேண்டாம். இனியாவது நாம் தமிழர் என்ற ரீதியில் ஒற்றுமையாக தமிழை வளர்ப்போம்.. வெட்டிப்பேச்சுக்களை தவிர்ப்போம்.
மீண்டும் தமிழை அதுவும் நல்ல அழகான தமிழை ருசிக்கத் தந்தமைக்காக அனைவருக்கும் நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.
எனினும் எம் தூய தமிழில் இந்திய தமிழ் கலப்பதை கூடியளவுக்கு தவிர்ப்பது சிறப்பு...

Monday, February 13, 2012

என்னை மறக்கவிடு........


கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.

கலந்து களித்த நாட்களை
களவாடிப் போனது யார்?
களைத்து போனேனடி சகியே...

அன்று உன்னோடு அத்வைதமான
அந்த நல்ல நாட்களை - இன்று
அழித்தெறிந்து போனது யார்?

என் கோபுரக் கனவுகளை
கொல்லியிட்டு
இன்னொரு இதயம் தொட்டு நிற்பவளே.

கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.

கொடிநடையாய் என் நினைவுகளை
போகவிடு
என்னை மறக்கவிடு........

Friday, January 20, 2012

நாங்களும் ஊடகம்தான்


 
 
இந்த பக்கத்தில் வந்த பதிவை பாருங்க. நான் லோஷன் அண்ணா கு  எதிரானவன் இல்லை. அவர் நல்ல அறிவிப்பாளர், நல்ல ஊடகத்தில் இருப்பவர். அதை விட நல்ல பதிவர். LOSHAN ANNA you are GREAT...
எனக்கு கடுப்பு இந்த ஊடகம் என்று சொல்லும் மூஞ்சி பக்கத்தில் தான். ஒருவரை புகழ வேண்டும் என்பதற்காக ஒருவரை குறை கூற கூடாது. இவர்கள் எல்லாம்.............


அன்புள்ள இந்த பக்கத்தின் உரிமையாளரே..
உங்கள் நோக்கங்கள் அறிந்தோம். உங்கள் நடவடிக்கைகள் நாம் அறிவோம். என் பார்வைக்கு நீங்கள்  உங்கள் பாதையில் இருந்து சற்று விலகுவதாக தோன்றுது.
உங்கள் நோக்கம் -  எமது இந்த தளத்தினது ஒரே நோக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய நிகழ்வுகளையும்
யாழ் மண்ணின் நிகழ்வுகளையும் சங்கமிக்கவைப்பதே..அது தவிர வேறு எந்த குறுகிய எண்ணமும் இல்லை...பல்வேறு நாடுகளில் வசிக்கும் எங்கள் உறவுகளே உங்கள் நிகழ்வுகளை காட்சிப்படுத்த முன்வாருங்கள்...வேற்றுமைகள் பேதங்களைக் களைவோம் தமிழராய் ஒன்றிணைவோம்... ( உங்கள் பக்கத்தில் இருந்து )

இப்படியாக இருக்கும் நீங்கள் ...
"இன்று முளைத்த காளான்கள் சரியான தமிழ் உச்சரிக்கக் கூட முடியாதவர்கள் இன்று மேகாபிளாஸ்ற் வைக்கினமாம். "
நானும் லோஷன் அண்ணா ரசிகன் தான். அதற்காக இவ்வாறு இந்த பக்கத்தில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் என்றும் தனி ஸ்டைல். வெற்றி தனி ஸ்டைல். உங்கள் விளம்பரத்துக்காக இதில் தேவை இல்லாத கதை வேண்டாம். ஒருவரும் இங்கே இருந்த போது ஒன்றுமே செய்தது இல்லை.புலம்பெயர்ந்த நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தால் உங்கள் கிரமாத்தை வளருங்கள். இதில் சும்மா கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஊடகத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் ஊடகத்தை வளர்ப்பார்கள். நீங்கள் ஒன்றும் பண்ண தேவை இல்லை . குத்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒரு ஊடகமாக இருங்கள். ஊடக தர்மம் தெரியும் என்று நம்புறன்.
 புலம்பெயர்ந்து சென்று விட்டு எங்கள் மண் என்று கத்துவதில் பயனில்லை. அனைவருக்கும் நாட்டு நிலமை தெரியும். கையில் பேனா கிடைத்தவுடன் எதுவம் எழுதலாம் என்று நினைத்துவிடாதையுங்கோ????

Wednesday, January 11, 2012

வவுனியா - யாழ்ப்பாணம் Route No 87/3

வவுனியா - யாழ்ப்பாணம் பஸ் பயணம். வாழ்க்கையில் இனியும் அனுபவிக்க நினைக்காத ஒரு துன்பம். கொழும்பிலிருந்து ஒருநாள் காலையில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். 10 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து வவுனியா பஸ் ஏறி ஒருமாதிரி ஒரு இருக்கையை பிடித்து பஸ் பயணம் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் பஸ்ஸில் செல்வது என்றால் ஒரு வெறுப்பான விடயம். இதற்காகவே நிறையநாட்கள்  வீடு  செல்லாமல் இருந்தது உண்டு. எனினும் 7 மணித்தியால பயணம் வவுனியா வரை. இடையில் உணவுக்காக ஒரு நிறுத்தம் என்று வவுனியாவரை சுமுகமாகவே இருந்தது.
வவுனியா போய் சேர கிட்டத்தட்ட 4 மணி ஆகிவிட்டது. போய் இறங்கியவுடன் யாழ்ப்பாண பஸ் "வாங்க வாங்க என்று யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தது. பஸ்க்குப் போனால் ஏறி நிற்க கூட இடமில்லை. மந்தையில் ஆடு மாடுகளை அடைத்தது போல்  அடைத்திருக்கிறார்கள். பஸ் கிளினர் " தம்பி வாங்க தம்பி வாங்க இடம் இருக்கு. ஏறுங்க ஏறுங்க" என்ற நச்சரிப்புடன் நானும் கெதியாக போய் சேர வேண்டிய அவசரத்தில் ஒரு மாதிரி மற்றவங்களின் கால்களை மிதிச்சு ஏறியாச்சு. பஸ்ஸில் பாட்டுக்கு மட்டும் குறைவில்லை. யாழ்ப்பாணம் அச்சுவேலி பஸ்ஸில் ஒலிப்பது போல் ஒலித்தது. நான் நின்ற நிலைக்கு பாட்டு பயங்கர கடுப்பாய் இருந்தது. ஒரு மாதிரி பஸ் பயணிக்க ஆரம்பித்தது. இன்னும் 4 மணித்தியாலம் பயணிக்க வேண்டுமே என்று நினைக்க அலுப்பாய் இருந்தது. 7 மணித்தியால பயணம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த 4 மணித்தியால பயணம் .............

உண்மையில் எங்கட ஆட்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்ய தெரியாது என்பது வெளிப்படை உண்மை.   பஸ்ஸில் ஏறத் தெரியாது. பஸ்ஸில் நிற்கத் தெரியாது. இறங்குபவர்களுக்கு இடம் விட்டுத்தர தெரியாது. என்று பலவற்றை சொல்லலாம். பயணிகளோ ஒருவரின் கால் மேல் ஒருவர் என மிதிச்சப்படி நிற்கிறார்கள். ஆனால் இடம் இருக்கு ஏறுங்க என்ற கிளினரின் சத்தத்தை கேட்கும் போது போய் அறைய வேண்டும் போல் இருந்தது. பலபேர் காலை மிதிச்சு செல்வது தெரிகிறது. மிதிப்பவர்களும் ஒன்றுமே தெரியாது போல் செல்வதும் வேடிக்கையாக இருந்தது. அதோடு பஸ்க்குள் சில பெண்கள் போடும் மொக்கை இருக்கே... ஐயோ.. தாமும் பஸ்க்குள் இருக்கம் என்று காட்ட... அதோடு கிளினர் ஏதாவது சொல்ல அவர்கள் ஏதாவது சொல்ல என்று... கொழும்பு - வவுனியா பஸ் பிரயாணத்தையும் வவுனியா யாழ்ப்பாணம் பஸ் பிரயாணத்தையும் ஒப்பிடும் போது கடுப்பாக இருக்கும் எப்பதான் நாம் திருந்தப்போறம் எண்டு தெரியாது????????