நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Wednesday, January 11, 2012

வவுனியா - யாழ்ப்பாணம் Route No 87/3

வவுனியா - யாழ்ப்பாணம் பஸ் பயணம். வாழ்க்கையில் இனியும் அனுபவிக்க நினைக்காத ஒரு துன்பம். கொழும்பிலிருந்து ஒருநாள் காலையில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். 10 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து வவுனியா பஸ் ஏறி ஒருமாதிரி ஒரு இருக்கையை பிடித்து பஸ் பயணம் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் பஸ்ஸில் செல்வது என்றால் ஒரு வெறுப்பான விடயம். இதற்காகவே நிறையநாட்கள்  வீடு  செல்லாமல் இருந்தது உண்டு. எனினும் 7 மணித்தியால பயணம் வவுனியா வரை. இடையில் உணவுக்காக ஒரு நிறுத்தம் என்று வவுனியாவரை சுமுகமாகவே இருந்தது.
வவுனியா போய் சேர கிட்டத்தட்ட 4 மணி ஆகிவிட்டது. போய் இறங்கியவுடன் யாழ்ப்பாண பஸ் "வாங்க வாங்க என்று யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தது. பஸ்க்குப் போனால் ஏறி நிற்க கூட இடமில்லை. மந்தையில் ஆடு மாடுகளை அடைத்தது போல்  அடைத்திருக்கிறார்கள். பஸ் கிளினர் " தம்பி வாங்க தம்பி வாங்க இடம் இருக்கு. ஏறுங்க ஏறுங்க" என்ற நச்சரிப்புடன் நானும் கெதியாக போய் சேர வேண்டிய அவசரத்தில் ஒரு மாதிரி மற்றவங்களின் கால்களை மிதிச்சு ஏறியாச்சு. பஸ்ஸில் பாட்டுக்கு மட்டும் குறைவில்லை. யாழ்ப்பாணம் அச்சுவேலி பஸ்ஸில் ஒலிப்பது போல் ஒலித்தது. நான் நின்ற நிலைக்கு பாட்டு பயங்கர கடுப்பாய் இருந்தது. ஒரு மாதிரி பஸ் பயணிக்க ஆரம்பித்தது. இன்னும் 4 மணித்தியாலம் பயணிக்க வேண்டுமே என்று நினைக்க அலுப்பாய் இருந்தது. 7 மணித்தியால பயணம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த 4 மணித்தியால பயணம் .............

உண்மையில் எங்கட ஆட்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்ய தெரியாது என்பது வெளிப்படை உண்மை.   பஸ்ஸில் ஏறத் தெரியாது. பஸ்ஸில் நிற்கத் தெரியாது. இறங்குபவர்களுக்கு இடம் விட்டுத்தர தெரியாது. என்று பலவற்றை சொல்லலாம். பயணிகளோ ஒருவரின் கால் மேல் ஒருவர் என மிதிச்சப்படி நிற்கிறார்கள். ஆனால் இடம் இருக்கு ஏறுங்க என்ற கிளினரின் சத்தத்தை கேட்கும் போது போய் அறைய வேண்டும் போல் இருந்தது. பலபேர் காலை மிதிச்சு செல்வது தெரிகிறது. மிதிப்பவர்களும் ஒன்றுமே தெரியாது போல் செல்வதும் வேடிக்கையாக இருந்தது. அதோடு பஸ்க்குள் சில பெண்கள் போடும் மொக்கை இருக்கே... ஐயோ.. தாமும் பஸ்க்குள் இருக்கம் என்று காட்ட... அதோடு கிளினர் ஏதாவது சொல்ல அவர்கள் ஏதாவது சொல்ல என்று... கொழும்பு - வவுனியா பஸ் பிரயாணத்தையும் வவுனியா யாழ்ப்பாணம் பஸ் பிரயாணத்தையும் ஒப்பிடும் போது கடுப்பாக இருக்கும் எப்பதான் நாம் திருந்தப்போறம் எண்டு தெரியாது????????

No comments:

Post a Comment