நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Monday, July 12, 2010

நூற்றாண்டில் எம் கல்லூரித்தாய்

யாழ்ப்பாணத்தில் புகழ்  பூத்த கல்லூரிகளில் ஒன்றாக மிளிரும் கொக்குவில் இந்து அன்னை தனது 100 வது ஆண்டிலே கால்தடம் பதித்துள்ளாள்.
எமது கொக்குவில் இந்து  அன்னையை பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சோகம் தான். ஒவ்வொரு போராட்டம் தான்.  அதன் வரலாற்றை சுருக்கமாக நோக்கும் போது................  


                                               1910 மாதம் சார்ந்த பாடசாலை முறையின் கீழ் அடங்கிய பாடசாலைகளுள் ஒன்றாக இ. செல்லையா அவர்களின் வழிகாட்டலில் 1910ம் ஆண்டு கொக்குவில் இந்து கல்லூரி தாபிக்கப்பட்டது.1926 கனிஷ்ட இரண்டாம் நிலை பாடசாலையாக மதிப்பீடு செய்யப்பட்டது.1940 சிரேஷ்ட இரண்டாம் நிலை பாடசாலையாக மதிப்பீடு செய்யப்பட்டது.1960ல் அரசாங்கம் கைஏற்கும் வரை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் இயக்குனர் சபையின் நிவாகத்தின் கீழ் இருந்தது.1960ல் அரசாங்கத்தால் கைஏற்கப்பட்ட பின்னர் கல்லூரியின் பெறுபேறுகள் வளர்ச்சி கண்டதுடன் கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் மற்றும் சாரணியம் என்பன ஏனைய யாழ் மாவட்ட பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்சிகண்டது.1961 அதிபர் பேரின்பநாயகத்தின் அயராத முயற்சியினால் முதலாவது இரண்டு மாடி கட்டிடம் கட்டி திறந்துவைக்கப்பட்டது.1972 கல்லூரியின் வடபகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டது.1972 திரு. மகாதேவா அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.1980 திரு.அ. பஞ்சலிங்கம் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.1991 திரு.இ.மகேந்திரன் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.1996 திரு. பொ . கமலநாதன் அவர்கள் அதிபராக பொறுபேற்றார். குறிப்பாக இவர் பௌதீக வளங்களை அதிகரிப்பதில் முனைப்பாக செயற்பட்டார்.2004 மாணிக்கம் சுப்ரமணியத்தின் 13 மில்லியன் நிதி யுதவியுடன் கல்லூரியின் தென் புறத்தில் 3 மாடி 100 ஆண்டு விழா மண்டபம் அமைக்கப்பட்டது.2004 கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு விழாக்குழு ஆரம்பிக்கப்பட்டது.2005 முனைநாள் ஆசிரியர் சினத்தம்பி அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகளின் 20 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் மற்றுமொரு 3 மாடி கட்டிடம் நிறுவப்பட்டது.2007 திரு. அ. அகிலதாஸ் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.2008 இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி களுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர் உத்தியோக பூர்வமாகஆரம்பிக்கப்பட்டது



2010 இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் வளர்ந்துவரும் பாடசாலை கிரிக்கெட் அணிக்கான விருதினை வென்றது

கொக்குவில் இந்துக் கல்லூரி , நூற்றாண்டு விழா நிகழ்வுகள்

திகதி : 16, 17 ,18 ஜூலை 2010
காலை நிகழ்வுகள் : பஞ்சலிங்கம் கேட்போர் கூடம் (மு.ப 8.30 - 12.00 மணி)
மாலை நிகழ்வுகள் : சுப்பிரமணியம் மாலதி திறந்தவெளி அரங்கு ( பி.ப 5.00 - 8.30 மணி)
தலைவர் : திரு அ. அகிலதாஸ் அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி

இந் நிகழ்வுகள் இம் மாதம் 16ம் திகதி முதல் 18ம் திகதி வரை மூன்று நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளாக இடம் பெற இருக்கின்றது. காலை அமர்வுகள் 8.30 முதல் மதியம் 12 மணிவரை கல்லூரியின் பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்திலும், மாலை அமர்வுகள் பி.ப 5.00 - 8.30 மணி வரை கல்லூரி மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுப்பிரமணியம் மாலதி திறந்தவெளி அரங்கிலும் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் வளர்ச்சி பாதையின் பிரதான பங்காளிகளாக இருந்த முனைநாள் அதிபர்களை நினைவுகூரும் பொருட்டும் அவர்களை கௌரவ படுத்தும் நோக்கோடும் நூற்றாண்டு விழா அமர்வுகளுக்கு செல்லையா அரங்கு, கார்திகேசு அரங்கு,நாகலிங்கம் அரங்கு, ஹன்டி பேரின்பநாயகம் அரங்கு, சி.கே.கந்தசாமி அரங்கு மற்றும் மகாதேவா அரங்கு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதே வேளை கொக்குவில் இந்துவின் நூற்றாண்டு பாரம்பரியத்தை நினைவுகூறும் பொருட்டு கல்லூரி விளையாட்டவையும் பழையமாணவ சமூகமும் ஒன்றிணைந்து அழைக்கப்பட்ட யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் 20-20 (T20) கிரிக்கெட் சுற்று போட்டி, கால்பந்தாட்ட, வலைபந்தட்ட, கூடைபந்தட்ட சுற்று போட்டிகள் மற்றும் மரதன் ஓட்டம் என்பவற்றை ஏற்பாடு செய்து நடத்தி இருந்தனர்.

கொக்குவில் இந்து எம் அன்னைக்கு நூற்றாண்டு விழா சிறப்புற நடைபெற அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.................