எனது முதல் பதிவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியின் மகிழ்ச்சியுடனும் முதல் பதிவின் தொடர்ச்சியாகவும் இதை தொடரலாம் என்று மனம் சொல்கிறது. காரணம் நண்பர்கள் சொன்னார்கள். எனது முதல் பதிவு சொல்ல வந்த விடயத்தை மேலாக தொட்டுச் சென்றேதே ஒழியே விடயம் விளக்கமாக ஆராயப்படவில்லை என்ற வருத்தங்கள் இருந்தன. எனினும் எனக்கு அதை விளக்கமாக எழுத போய் அது நல்ல அறிவிப்பாளர்களையோ அல்லது நல்ல ஊடகவியலாளர்களையோ தாக்கும் என்ற ஐயப்பாடு இருந்தது. எனினும் எனது நண்பர்களின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் சொல்ல வந்த விடயத்தை மிகவிளக்கமாக எனக்கு தொந்த நடையில் பதிகிறேன்.
உண்மையில் முதலில் எனக்கு பதிவு இடவேண்டும் என்ற ஆசை வந்ததே லோஷன் அண்ணாவின் லோஷன் களம் பார்த்த பிறகே. அதை போலவே எனக்கு இந்த பதிவை இட தைரியம் வந்ததே அவரின் சில பதிவுகளை வாசித்த பிறகே. எனவே எதற்கும் அண்ணா லோஷன் அண்ணாக்கு நன்றி தெரிவித்து பதிவுக்குள் வரலாம் என்று எண்ணுகிறேன்.
ஊடகம் என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல இலகுவாக பிரபல்யம் அடைவதற்கு ஒரு வழி எனலாம். அதற்கு இளைஞர்கள் படும் கஸ்டங்களும் வேதனைகளும் பற்பல. அண்ணா எனக்கு சந்தர்ப்பம் எடுத்து தாங்களேன்? என்று தனியார் ஊடகங்களில் வேலை செய்யும் அறிவிப்பாளர்களை கேட்பது வழமையாகி விட்டது. இதை பயன்படுத்தி ஒரு சில அறிவிப்பாளர்கள் செய்யும் கூத்துகள் பல. மீண்டும் சொல்கிறேன் இலங்கைத் திருநாடு நல்ல பல அறிவிப்பாளர்களை கண்டு இருக்கிறது. கண்டு கொண்டு இருக்கிறது. உண்மையிலே சில அறிவிப்பாளர்களின் பெயர்களை இந்த இடத்தில் குறிப்பிட்டால் மிகையில்லை. அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் , தயானந்த என்று பழம் பெரும் அறிவிப்பாளர்களையும் அண்மையில் சாகித்திய விருது பெற்ற லோஷன் அண்ணாவையும் அதுபோல இளம் வயதில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்ற பதவியை வகிக்கும் நவா அண்ணாவையும் குறிப்பிட்டால் மிகையில்லை. ஆனால் அது போலவே இவ்வாறு குறுகிய சிந்தனை கொண்டவர்களும் வாழ்வதும் வேலை செய்வதும் இந்த கால கட்டத்தில் தான் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
உண்மையில் நான் பதியப் போகும் விடயங்கள் ஊடகங்களில் இருப்;பவர்களுக்கு தெரியும். எனினும் நான் விரிவாக பதியக் காரணம் இனியும் ஒரு ஆண்மகனோ அல்லது பெண்மகளோ பாதிப்படையக்கூடாது. வாழ்க்கை என்பது எவ்வளவு போராட்டம் என்பது அவர்களுக்கு தெரியாது. ( அவர்கள் என்று குறிப்பிடுவது ஒரு சில அறிவிப்பாளர்களை) அவர்கள் தமது நோக்கம் முடிவடைந்தால் சரி என்று வாழ்பவர்கள்.
அறிவிப்பாளர்களுக்கு உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காமையே முக்கியகாரணம் எனலாம். அறிவிப்பாளருக்கும் நேயருக்கும் இடையில் உள்ள இடைவெளி தொடர்ந்து பேணப்படல் வேண்டும். இது பேணப்படாது விடத்து ஏற்படும் சிக்கல்கள் அதிகம். ஒரு நேயரோ அறிவிப்பாளரின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடக்கூடாது. அது போலவே அறிவிப்பாளரும் தனது தனிப்பட்ட விடயங்களை நேயரிடமும் பகிரக்கூடாது. நீங்கள் சொல்வது புரிகிறது. இதை வாசித்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் திருத்துவார்கள் ஐயா. திருத்துவார்கள். நம்புவம். நம்பிக்கை தான் வாழ்க்கை. இல்லையா!.
அது போலவே இன்னொரு காரணமாக தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை நேயர்களுக்கு வழங்குதலும் நேயர்களின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை பெற்று தேவையில்லாத வீண் பேச்சுகளில் ஈடுபடுவதாலும் பிரச்சனைகள் கிளம்புகின்றன.
அதைவிட கொழும்பு மாநகரம் எங்கு பார்த்தாலும் அறிவிப்பாளர்கள் பயிற்சி நிலையங்கள். ஐயா சாமி நீங்கள் வழங்கும் சான்றிதழை காட்டினால் தான் வானோலி நிலையத்திலோ அல்லது தொலைக்காட்சி நிலையத்திலோ வேலைக்கு சேர்ப்பார்கள் என்று இல்லை. நேர்முகத் தேர்வு வைப்பவர்கள் அதை பற்றி கணக்கெடுக்கிறார்கள் இல்லை. சரி நாங்க விடயத்துக்கு வருவம். இப்படியான பயிற்சி நிலையங்களால் நான் கூறிய சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாகிறது. தமது நிகழ்ச்சியில் தான் சுயபுராணம் பாடுகிறார்கள் என்றால் பயிற்சி நிலையங்களிலும் சுயபுராணம் பாடி தமது நிலையை உயர்த்தி கொண்டு அங்கு கற்கும் மாணவர்களுக்கு நாங்கள்
வானோலி நிலையத்திலோ அல்லது தொலைக்காட்சி நிலையத்திலோ உங்களுக்கு சந்தர்ப்பம் எடுத்து தருகிறோம் என்று ஆசை காட்டி..................... வேண்டாம் ஐயா! மிகுதி வேண்டாம் ஐயா!
அது போலவே அறிவிப்பாளர்கள் தமது சுயபுராணம் பாடுவதை நிறுத்த வேண்டும். சுயபுராணம் பாடி தம்முடன் பிரச்சனையானவர்களை வானலையில் மறைமுகமாக கிண்டலடித்தல் அவர்கள் சம்பந்தமான பாடல் ஒலிபரப்பல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதை தவிர்த்தல் வேண்டும்.
அதை விட தமது மற்றைய சக அறிவிப்பாளர்களை பற்றி மிக கேவலமாக தமது நேயர்களிடம் வதந்தியை பரப்பி விடுவதும் இவர்களின் வேலையாக இருக்கிறது. எனவே இவ்வாறான நம்பிக்கை துரோகிகளுடன் வேலை செய்யும் நல்ல அறிவிப்பாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.
இவ்வாறு பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
அன்புள்ள வாய்ப்பு தேடி அலையும் ஆண்களே! பெண்களே!
அனைவரையும் உடனே நம்பிவிடாதீர்கள். சில நரிகளும் ஊடகத்தினுள் இருக்கிறார்கள்.( நரி என்று குறிப்பிட்டதுக்கு மன்னியுங்கோ. எனக்கு தெரியவில்லை சம்பந்தப்ட்ட அறிவிப்பாளர்களை விழிப்பதற்கு) அவர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். குறிப்பாக பெண்மணிகளே! நீங்கள் தான் கவனம். நான் ஏன் உங்களை விழிப்பாக இருக்க சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்.
இவ்வாறான நாpகள் வேலை செய்யும் நிலையங்களின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரிகளே!
இது உங்களின் கவனத்துக்கும்! ஆனால் ஏற்கனவே சில விடயங்கள் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருப்பட்டதாம் என அறிகிறோம். பரவாயில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட நரிகள் நன்றியுள்ள நாய்களாக மாறட்டும்.
அன்புள்ள நண்பர்களே!
நான் சிறுவன். எனவே மேலே பதியப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை. ஆனால் நான் சொல்ல வந்த விதம் தவறு என்று உணர்ந்தால் மன்னியுங்கோ........
No comments:
Post a Comment