நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Thursday, December 9, 2010

கொக்குவில் இந்துவின் பழையமாணவர் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளை தமது கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை கடந்த மாதம் 27 ஆம் திகதி கொண்டாடியிருந்தமை அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்பிக்கையில் ( ஆமாங்க! விழாவுக்கான அழைப்புகள் ஒழுங்காக சென்றஅடையவில்லையோ!!! அல்லது அழைக்கப்படவில்லையோ தெரியவில்லை??? விழா நடந்தது பழைய மாணவருக்கு பெரிதாக தெரியாதாம்) நடந்த விடயங்களை பகிரலாம் தானே!!!! நம்ம பாடசாலைதானே... நம்ம முன்னவர்கள், இன்றையவர்கள், எம்முடன் பழகியவர்கள், நம்ம ஆசிரியர்கள் அனைவரையும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்துள் நுழைகிறேன். உண்மையில் பார்க்க சந்தோஷமாகவே இருந்தது. வரவேற்பு வாயிலில் வாழைமரம் அதனோடு கூடிய பழக்குலை பார்க்கும் போது எமது கலாச்சாரங்களுக்கு எமது கல்லூரி என்றும் மறக்காது. என்றும் பின்பற்றும் என்பதற்கு ஒரு அடையாளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனோடு கூடிய நூற்றாண்டு விழாவுக்கான அறிவித்தல் சுவரொட்டி காணப்பட்டது.








மிகவும் மகிழ்ச்சியுடன் உள்நுழையும் போது வாயிலில் மங்களகரமாக நிறைகுடத்துடன் பழையமாணவர் சங்கத்தினர் வரவேற்றனர்.
சந்தோசமாக உள்நுழைந்து மண்டபத்தை பார்த்தேன். . கூடுதலாக வந்திருந்தவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள்தான். ஆனால் மண்டபம் நிறையவில்லையே என்று கவலையாகத்தான் இருந்தது. அனைத்தும் மட்டுபடுத்தப்பட்ட அழைப்புகளா?? அல்லது ஒருவருக்கும் விழா நடைபெறுவது தெரியாதா? உண்மையில் பழைய மாணவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தான். நூற்றாண்டு விழா ஒருமுறைதான் வரும். கொண்டாடும் போது அனைவருக்கும் சொல்லி கொண்டாடுங்களையா??? நிறையப்பேர் எங்கே? எப்ப நடந்தது என்டு கேட்கிறாங்கப்பா???? இவ்விழா அமைதியாக கொண்டாட வேண்டிய விழா இல்லை. ஆடம்பரமாக எமது கல்லூரித்தாயின் மைந்தர்கள் சளைத்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய விழா!. மிக மிக எளிமையாக நடந்தேறிவிட்டது  என்ற கவலை........





                     


நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டபடி சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.
( நம்ம ஆட்கள் நேரம் எண்டால் ம்ம்ம்ம்). மங்கள இசையுடன் ஆரம்பமாகியது. அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதன்பின்னர் பழையமாணவர் சங்க தலைவரின் வரேபேற்புரை இடம்பெற்றது. தலைவர் வரவேற்புடன் தனது ஆதங்கங்களையும் தமது பழைய மாணவர்சங்க வளர்ச்சி பற்றியும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வாத்திய பிருந்தா இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. உண்மையில் பார்வையாளர்களின் அபிமானத்தை பெற்ற நிகழ்ச்சியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அவர்களின் திறமையை பார்த்தவுடன் நிகழ்ச்சிநிரலில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அவர்களின் திறமைக்கு நேரம் அதிகரிக்கப்பட்டது மகிழ்ச்சி தான். பங்குபற்றிய கலைஞர்களை குறிப்பிடும் போது அவர்களில் கூடுதலானோர் வேறு துறை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் என்று கூற முடியாத அளவுக்கு தமது இசையில் உள்ள திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். அவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவிக்கதான் வேண்டும். அவர்களின் பயணம் இத்தோடு நிறைவு பெறாமல் தொடரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்க வேண்டும். அத்தோடு அவர்கள் அனைவரும் எம் பழையமாணவர்கள் என்று கூறுவதில் பெருமை அடையவேண்டும். இவர்களும் எம்மவர்கள்தான் என்பதில் புன்னகையில் புன்னகைப்பதில் மகிழ்ச்சிதான்.
அதனைத் தொடர்ந்து எங்தல அதுதான் நம்ம அதிபர் திரு.அகிலததாஸ் பிரதமவிருந்தினர் உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தமது கல்லூரியில்  வளர்ச்சியில் பழைய மாணவர்களின் பங்களிப்பு மகத்தானது என வாழ்த்தினார். தொடர்ந்தும் அவர்களின் உதவி தேவை என்றும் தெரிவித்தார். உண்மையில் எமது கல்லூரியை பொறுத்தவரையில் பழைய மாணவர்களின் உதவிதான் இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அதனைத் தொடர்ந்து கௌரவ விருந்தினராக வருகை தந்த திரு. பஞ்சலிங்கம் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் தனது மன ஆதங்கத்தை
பழைய மாணவர்கள் முன் கொட்டித்தீர்தார். அவர் கூறியதை கூறுகிறேன்.. " அன்புள்ள மாணவர்களே எமது கல்லூரி நினைவுச் சின்னங்கள் அழிவடைந்தோ அல்லது காணமலோ போய்விட்டதாம். கொஞ்சம் அதை தேடியோ அல்லது பராமரித்தோ தாருங்கள்" என்று குறிப்பிட்டார். உண்மையில் இவ் விடயம் பற்றி தகுதியடையவர்கள் சிந்தியுங்கள். ஏதாவது வழி சொல்லுங்கள்....... அதனை தொடர்ந்து பழைய மாணவர்சங்க செயலாளர் திரு.ஜெகநாதன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இறுதி நிகழ்வாக கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவர்களினால் நடனம் இடம்பெற்றது. உண்மையில் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க நிகழ்வில் எதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது?? இது ஒரு புரியாத புதிராக தான் இருகக்கிறது. நடனத்துறை சார்பாக கொழும்பு மாநகரில் எமது கல்லூரி அன்னையின் மைந்தர்கள் எத்தனை அரங்கேற்றங்களை செய்துள்ளனர் என்று விழா ஒழுங்கு செய்தவர்களுக்கு தெரியவில்லையா?? அல்லது சந்தர்ப்பம் வழங்ப்படவில்லையா?? என்று தெரியவில்லை. உண்மையில் இவ்வாறான நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் தான் பிழை விடுவது வழக்கம். அதுபோலவே நடந்துள்ளது. அதைபோல நிகழ்ச்சி தொகுப்பு கூட வேறு ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளது. எத்தனை திறமையானவர்கள் எமது கல்லூரி சார்ந்தவர்கள் உள்ளனர் என்று தெரியவில்லை போலும். உண்மையில் விழா ஒழுங்கமைப்பாளர்களே! உங்களுக்கு இவ்வாறான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையா?? நீங்களும் மற்றவர்கள் போலும் எம்மவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மறுக்ககிறீர்களா??? (ஏன்பா?? நீங்களுமா???)
அன்புள்ள பழையமாணவர் சங்க கொழும்புக் கிளையினரே!! உங்கள் பணி சிறப்பானது. உங்கள் பணி தொடர்ந்தும் எம் கல்லூரிக்கும் அதாவது உங்கள் கல்லூரிக்கும் தேவை. எனினும் கொஞ்சம் உங்களில் மாற்றம் தேவை. இளைஞர்களுக்கும் உங்கள் இடங்களில் கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுத்துதான் பாருங்களேன். இப்பவும் அந்தக்காலங்களில் இருக்காமல் கொஞ்சம் மாற்றம் தேவை. மாறித்தான் பாருங்களேன்.
அதுபோல கல்லூரியின் பழையவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அதில்நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எமது கால அதிபர் திரு. கமலநாதன் அவர்கள் ( புரியுது சேர் கஸ்டப்பட்டு வீடு கட்டினது  யாரோ!!! வர்ணம் ப+சியவர்களுக்கு பெயர். என்ன செய்ய இதுதான் காலம்) வருகை தந்திருந்தார். அவரை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மகிழ்ச்சிதான்.




அன்புள்ள பழைய மாணவர்களே!! கொஞ்சம் பாடசாலை பக்கமும் எட்டி பாருங்கள். குறை சொல்வது மிக சுலபம் என்று எனக்கும் தெரியும். ஆனால் சுட்டிக்காட்டுவதும் எனது கடமை என நான் அறிவேன். அதை தொடர்ந்துதான் என் புன்னகை புன்னகைத்துள்ளது. இதில் தவறு இல்லை என்றும் நான் அறிவேன். நீங்களும் தான்.   

Sunday, November 21, 2010

வயதொன்றில் புன்னகை

என் புன்னகைக்கு 25-11.2010 ஆம் திகதியுடன் வயது ஒன்றாகிறது. கடந்து வந்து பாதையை பற்றி பார்த்தால் மிகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்தவையும் அதோடு மிகவும் கஸ்டமானதுமாகவே இருந்தது. பல போரட்டங்கள், பல எதிர்பார்ப்புகள் என என் புன்னகை சந்தித்திருந்தமை குறிப்பிட்டு சொல்லலாம். எனினும் ஒவ்வொரு நாளும் எதையாவது சிறிய மாற்றங்களுடன் தான் என் புன்னகை புன்னகைக்கும்.



 நெருப்பில்லாமல் புகையாது. அதுபோல் என் புன்னகையும் விடயமில்லாமல் புன்னகைக்காது. பல விடயங்களை சமூக போக்குடன் என் புன்னகை ஆராய்ந்துள்ளது. அதுபோல் பொழுதுபோக்காகவும் சில விடயங்களை ஆராய்ந்துள்ளது. முற்றுமுழுதாக எனது தனிப்பட்ட கருத்தாகவே என் புன்னகை புன்னகைத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அவ்வாறுதான் புன்னகைக்கும் என்பதில் ஐயமில்லை.
லோசன் அண்ணாவின் "லோசனின் களம்" தான் எனக்கு முதல் தூண்டுதலாக அமைந்திருந்தது. பின் வலைப்பதிவு பற்றிய சிறு தேடல் மூலம் என் புன்னகை இன்று இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.
வயது ஒன்று மிகவும் சந்தோசமாகவே உள்ளது. இவ்வளவு தூரம் வளர உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் புன்னகை என்றும் அனைவருக்கும் நல்ல விடயங்களைதான் பகிரும். அல்லது பொழுதுபோக்கவே அமையும். என்றும் கருத்தாடல் களமாகதான் இருக்கும்.
உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். என் புன்னகையில் ஏதும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றால் சொல்லுங்கள். நிச்சயம் கவனத்தில் எடுக்கப்படும்.
                               Email :-   mathukaran08@gmail.com
                               Face book:- tsmathu31@gmail.com

       நெருப்பில்லாமல் புகையாது. 
      அதுபோல் என் புன்னகையும்  விடயமில்லாமல்  
       புன்னகைக்காது.

Saturday, October 9, 2010

எந்திரன்

எப்ப வரும்? எப்ப வரும்? என்று கேட்டவர்களுக்கு எல்லாம் ஆறுதல் கூறுவதாக ஓக்டோபர் 01 ஆம் திகதி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸாடர் மற்றும் ஐஸ் நடிப்பில் எந்திரன் திரைக்கு வந்தது. படம் வர முதலே ஏகப்பட்ட வரவேற்பு. எதிர்பார்ப்பு. காரணம் சங்கர் இசைப்புயல் சூப்பர்ஸாடர் மற்றும் கலாநிதி மாறன் கூட்டணி. எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா? என்றால் கொஞ்சம் கேள்விக்குறிதான். ஆனால் பிரமாண்டத்துக்கு குறைவில்லை. கொலிவுட் தரத்துக்கு படத்தை கொண்டு சென்றதுக்கு சங்கருக்கு வாழ்த்துக் கூறியே ஆக வேண்டும்.


அதுபோல இசைப்புயலை சொல்லத் தேவையே இல்லை. வழமைபோலவே படத்தில் இசை விளையாடியிருக்கிறது. பிண்ணனி இசை பிரமாதம்.
எந்திரன் படத்தை பற்றி சொல்லவேண்டுமேனில் கதை பரவாயில்லை என்றுதான் சொல்லலாம். ஆனால் பிரமாண்டத்துக்கு குறைவில்லை. சூப்பர்ஸாடர் பற்றி சொல்ல வேண்டுமேனில் வழமைபோல ஸைடல் ஒன்றும் இல்லாமல் ஒரு எளிமையான திறமையான விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். ஐஸ் பற்றி சொல்ல பெரிதாக இல்லை. வழமையான நடிப்பு. பாடல் நடனக் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். எந்திரனில் சில காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ரோபோ வை பரிசோதித்து அனைவரும் கேள்வி கேட்கும் போது ஒருவர் எழுந்து கடவுள் இருக்கிறரா? என்று கேட்கும் போது ரோபா பதில் சொல்லும் நேரம் பார்த்த அனைவருக்கும் உடல் மெய் சிலிர்த்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே ரோபோ வின் காதல் காட்சிகள் அருமை. கருணாஸ் சந்தானம் நகைச்சுவை வாய்க்கவே இல்லை.அதுபோல பட முடிவில் ரோபோவை அழிக்கும் காட்சி நீண்;டு விட்டது என்றுதான் கூறவேண்டும். கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் படம் பிரமாண்டம் தான் என்று சொல்லாம். அதைவிட பாடல்கள் ஒவ்வோன்றும் அருமை. வைரமுத்து வைர வரிகளில் விளையாடியிருக்கிறார்.
எந்திரன் படத்தை பார்த்து விட்டு வரும் போது சுட்டி டிவி பார்க்கிற ஞபாகம் தான் வருகிறது. ஏன்எனில் இப்படி ஒரு பார்வையில் நாங்கள் தமிழ்படங்கள் பார்த்ததில்லை. கார்ட்ன் தான் பார்த்திருக்கிறோம். அதுதான் சுட்டி டிவி பார்த்தது போல் இருந்தது. எனினும் படம் பிரமாண்டம் தான் என்று கூறலாம். கதை என்று பெரிதாக இல்லை. அதுசரி இப்போது எங்கே சினிமாபடங்கள் கதையுடன் வருகிறது?
எந்திரன் பிரமாண்டம். 

Tuesday, August 31, 2010

EX 2010 @ IET


எந்திரவியல் தொழில்நுட்பத்துக்கே முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருக்கும் கட்டுநாயக்காவில் உள்ள எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனம் தமது 25 ஆம் ஆண்டு நிறைவை இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுகிறது. இவ் 25ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக EX 2010 எனும் மிகப் பெரிய கண்காட்சியை வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ் எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தை பற்றி பார்ப்போம் ஆனால்  INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எமது நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று தனது வெள்ளி விழாவில் சிறப்பித்துக் கொண்டு இருக்கிறது. 25 வருடங்களாக சேவையாற்றும் நிறுவனமானது  NDES ( NATIONAL DIPLOMA IN ENGINEERING SCIENCES )  எனும் பட்டத்துடன் வெளியேற்றி வருகிறது. இக் கற்கை நெறியானது NAITA  இன் அணுசரணையுடனும் INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY  இன் வழிகாட்டலில் இயங்குகிறது.
இங்கு  CIVIL, MECHANICAL , ELECTRICAL    எனும் பிரிவுகளில் மாணவர்களுக்கு போதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ் கற்கைநெறி முழுமையாக ஆங்கிலத்தில் போதிப்பதோடும் 4 வருட கற்கைநெறிகளில் 2 1/2 வருடங்கள் தனியே வேலை தளங்களில் பயிற்சியை வழங்குவது குறிப்பிட்டு சொல்ல கூடிய அம்சமாகும்.
மேலதிக விடயங்களுக்கு.....
         WWW.NDES.LK     OR    WWW.IET.EDU.LK   

25ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக EX 2010 எனும் மிகப் பெரிய கண்காட்சியை வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இக் கண்காட்சி முழுமையாக எந்திரவியல் சம்மந்தமாக மட்டும் கொண்டது. அதோடு வேடிக்கைகள் கேளிக்கைகள் என்பவற்றுக்கும் குறையில்லாமல் வருவோரை முழுமையாக ஆச்சரியத்துக்குள்ளாக்கும் என்பதை எவ்வித பயமுமின்றி கூறலாம். அவ்வளத்துக்கு தமது திறமைகளை காட்டுவதற்கு மாணவர்கள் தயாராகி வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சமாகும்.

மேலதிக விடயங்களுக்கு              www.ietex2010.lk


அத்தோடு இவ் 4 நாட்களும் கண்காட்சி தகவல்களை வழங்குவதற்காக 
FM NDES  எனும் வானோலிச் சேவையையும் VISION NDES    எனும் தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இச் சேவை 3 மொழிகளிலும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


எனவே இக் கண்காட்சியை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Saturday, August 7, 2010

வச்சாங்கையா ஆப்பு நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு ஆப்பு!!!!!!!

நல்லூர் ஆலய பெருந்திருவிழா ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. நல்லூர் ஆலய திருவிழா என்றாலே யாழ் நகரமே விழாக்கோலம் தான். பக்தி, ஆன்மீகம் என்று ஒருபக்கம் இருந்தாலும் கேளிக்கைகள் ,கடைத்தொகுதிகள் என்று குறைவே இல்லை. அதுபோலவே நம் ஊரு பொண்ணுகளுக்கும் குறைவே இல்லை. வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தும் வெளிக்கு வந்துவிடும். அதுபோலவே பொண்ணுகளின் உடைகளுக்கும் குறைவே இல்லை. என்னையா உடுப்பு போடுறாங்க??? முடியல!!!! வீதியில வேறு ஆட்களும் போறவங்க எண்டு தெரியல போல. தாங்கள் தனியத்தான் போகினம் எண்டு நினைப்போ தெரியல.



இதுக்கல்லாம் முடிவு கட்டதான் இம்முறை நல்லூர் ஆலயத்துக்குள் உள்நுழைய வேண்டும் எனில் பெண்ணில் தமிழ் கலாச்சாரம் தெரியவேண்டுமாம். ஆகா!!!! இம்முறை கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்ககலாமோ!!!!!!! பெண்கள் சாறி ,தாவணியுடன் தான் உள்நுழையலாம். இம்முறை கோவிலுக்குள் அதிகம் சனநெருக்கடி குறையும். ஆனால் வெளியில் நல்ல சனநெருக்கடியாக இருக்கும். இம்முறை ஏ9 திறந்திருப்பதால் சனநெருக்கடிக்கு பஞ்சமே இருக்காது. அதுபோலவே அனைத்து கேளிக்கைகள் வேடிக்கைகள் என்று அனைத்துக்கும் பஞ்சமே இருக்காது.

எனினும் இவ்வாறான இடங்களில் தான் தங்கள் கலை கலாச்சாரங்களை பேண வேண்டிய இடங்களாகவும் காக்க வேண்டிய இடங்களாகவும் இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய தருணம். இப் பதிவு வெறும் சின்ன விடயமாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நம் கலாச்சாரங்களை நாமே தான் காப்பற்றவேண்டும். அந்த அந்த இடங்களுக்கு உரிய உடைகளை உடுக்கவேண்டும். நாம் நாமாவே இருந்து விட்டால் பிரச்சனை ஏது???????
                  இனி இப்படிதான் போகலாமோ??????? ஆகா!!!!!!!!!

எனினும் இம்முறை நல்லூரில் அமுலாகும் இச்சட்டம் எவ்வளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இது நம்ம ஊரவர்களுக்கு மட்டும்தானா????? அல்லது பார்ப்பம் பார்ப்பம்........ எனினும் நம்மவர்கள்; ஒழுங்காக இருந்தால் பிரச்சனையே இல்லை.  

                     ஆப்பு கண்ணுக்கு தெரியாதுஎல தெரியாது.............

Monday, July 12, 2010

நூற்றாண்டில் எம் கல்லூரித்தாய்

யாழ்ப்பாணத்தில் புகழ்  பூத்த கல்லூரிகளில் ஒன்றாக மிளிரும் கொக்குவில் இந்து அன்னை தனது 100 வது ஆண்டிலே கால்தடம் பதித்துள்ளாள்.
எமது கொக்குவில் இந்து  அன்னையை பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சோகம் தான். ஒவ்வொரு போராட்டம் தான்.  அதன் வரலாற்றை சுருக்கமாக நோக்கும் போது................  


                                               1910 மாதம் சார்ந்த பாடசாலை முறையின் கீழ் அடங்கிய பாடசாலைகளுள் ஒன்றாக இ. செல்லையா அவர்களின் வழிகாட்டலில் 1910ம் ஆண்டு கொக்குவில் இந்து கல்லூரி தாபிக்கப்பட்டது.1926 கனிஷ்ட இரண்டாம் நிலை பாடசாலையாக மதிப்பீடு செய்யப்பட்டது.1940 சிரேஷ்ட இரண்டாம் நிலை பாடசாலையாக மதிப்பீடு செய்யப்பட்டது.1960ல் அரசாங்கம் கைஏற்கும் வரை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் இயக்குனர் சபையின் நிவாகத்தின் கீழ் இருந்தது.1960ல் அரசாங்கத்தால் கைஏற்கப்பட்ட பின்னர் கல்லூரியின் பெறுபேறுகள் வளர்ச்சி கண்டதுடன் கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் மற்றும் சாரணியம் என்பன ஏனைய யாழ் மாவட்ட பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்சிகண்டது.1961 அதிபர் பேரின்பநாயகத்தின் அயராத முயற்சியினால் முதலாவது இரண்டு மாடி கட்டிடம் கட்டி திறந்துவைக்கப்பட்டது.1972 கல்லூரியின் வடபகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டது.1972 திரு. மகாதேவா அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.1980 திரு.அ. பஞ்சலிங்கம் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.1991 திரு.இ.மகேந்திரன் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.1996 திரு. பொ . கமலநாதன் அவர்கள் அதிபராக பொறுபேற்றார். குறிப்பாக இவர் பௌதீக வளங்களை அதிகரிப்பதில் முனைப்பாக செயற்பட்டார்.2004 மாணிக்கம் சுப்ரமணியத்தின் 13 மில்லியன் நிதி யுதவியுடன் கல்லூரியின் தென் புறத்தில் 3 மாடி 100 ஆண்டு விழா மண்டபம் அமைக்கப்பட்டது.2004 கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு விழாக்குழு ஆரம்பிக்கப்பட்டது.2005 முனைநாள் ஆசிரியர் சினத்தம்பி அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகளின் 20 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் மற்றுமொரு 3 மாடி கட்டிடம் நிறுவப்பட்டது.2007 திரு. அ. அகிலதாஸ் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.2008 இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி களுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர் உத்தியோக பூர்வமாகஆரம்பிக்கப்பட்டது



2010 இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் வளர்ந்துவரும் பாடசாலை கிரிக்கெட் அணிக்கான விருதினை வென்றது

கொக்குவில் இந்துக் கல்லூரி , நூற்றாண்டு விழா நிகழ்வுகள்

திகதி : 16, 17 ,18 ஜூலை 2010
காலை நிகழ்வுகள் : பஞ்சலிங்கம் கேட்போர் கூடம் (மு.ப 8.30 - 12.00 மணி)
மாலை நிகழ்வுகள் : சுப்பிரமணியம் மாலதி திறந்தவெளி அரங்கு ( பி.ப 5.00 - 8.30 மணி)
தலைவர் : திரு அ. அகிலதாஸ் அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி

இந் நிகழ்வுகள் இம் மாதம் 16ம் திகதி முதல் 18ம் திகதி வரை மூன்று நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளாக இடம் பெற இருக்கின்றது. காலை அமர்வுகள் 8.30 முதல் மதியம் 12 மணிவரை கல்லூரியின் பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்திலும், மாலை அமர்வுகள் பி.ப 5.00 - 8.30 மணி வரை கல்லூரி மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுப்பிரமணியம் மாலதி திறந்தவெளி அரங்கிலும் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் வளர்ச்சி பாதையின் பிரதான பங்காளிகளாக இருந்த முனைநாள் அதிபர்களை நினைவுகூரும் பொருட்டும் அவர்களை கௌரவ படுத்தும் நோக்கோடும் நூற்றாண்டு விழா அமர்வுகளுக்கு செல்லையா அரங்கு, கார்திகேசு அரங்கு,நாகலிங்கம் அரங்கு, ஹன்டி பேரின்பநாயகம் அரங்கு, சி.கே.கந்தசாமி அரங்கு மற்றும் மகாதேவா அரங்கு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதே வேளை கொக்குவில் இந்துவின் நூற்றாண்டு பாரம்பரியத்தை நினைவுகூறும் பொருட்டு கல்லூரி விளையாட்டவையும் பழையமாணவ சமூகமும் ஒன்றிணைந்து அழைக்கப்பட்ட யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் 20-20 (T20) கிரிக்கெட் சுற்று போட்டி, கால்பந்தாட்ட, வலைபந்தட்ட, கூடைபந்தட்ட சுற்று போட்டிகள் மற்றும் மரதன் ஓட்டம் என்பவற்றை ஏற்பாடு செய்து நடத்தி இருந்தனர்.

கொக்குவில் இந்து எம் அன்னைக்கு நூற்றாண்டு விழா சிறப்புற நடைபெற அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.................

Sunday, May 30, 2010

யாழ்ப்பாணம் எங்கு நோக்கி?????????

என்ன? தலையங்கத்தை பார்த்து யோசிக்கிறிங்களோ? ஆமாங்க. எனக்கும் தெரியவில்லை யாழ்ப்பாணம் எங்கு நோக்கி பயணிக்கிறது என்று? வடக்கின் வசந்தத்தை நோக்கியா? அல்லது வேறு நாம் சொல்ல முடியாத திசை நோக்கியா? கூறமுடியவில்லை.

4 நாள் விடுதலை. என்ன செய்யலாம் என்றால் வழமையாக அனைவரும் கூறுவது போல ஊருக்கே போகலாம் என்ற முடிவோடு புதன் இரவே பயணிக்கலாம் என்ற முடிவோடு தனியார் பஸ்க்கும் பதிந்து எமது பயணத்தை ஆரம்பித்தோம். பஸ்ஸில் செல்ல பதிந்து கொடுப்பவர்கள் இருக்கிறார்களே??? அவர்களின் புத்தி என்றாலா? அவர்களின் அசைவுக்கும் நாம் தலையசைத்து இரவு 8.30 க்கு பஸ்ஸில் ஏறிய நாம் கொழும்பு மாநகரத்தை விட்டு விலக 11.00 க்கு மேலாகிவிட்டது. எனினும் சாரதியின் சிறந்த வாகன செலுத்தல் திறமை மூலம் நாம் யாழ்ப்பாணத்தை கிட்டத்தட்ட காலை 7.00 அளவில் அடைந்து விட்டோம்.

எனினும் எனக்கு இது யாழ்ப்பாணம் தானா? என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்தவாறே இருந்தது? எங்கு பார்த்தாலும் வெசாக் கொண்டாட்டங்கள் வெசாக் கூடுகள் என்று பலவாறு அடுக்கி கொண்டே போகலாம். எங்கு திரும்பினாலும் சிங்களத்தில் உரையாடும் மக்கள் , நம் மக்கள் என காலை 7.00 க்கே பரபரப்பான நகரமாக மாறியிருக்கிறது.
உண்மையில் இது மகிழ்சசியான விடயம் தான். எப்படி இருந்த நகரம் இப்ப எப்படி மாறியிருக்கிறது!!!. சந்தோசம் தான். எனினும் நமக்கு என்று இருக்கும் பழக்கவழக்கங்களை மாற்றியிருப்பது வருத்தத்தமளிக்கிறது. எப்போதும் நாம் நாமாக இருந்துவிட்டால் பிரச்சனை வராது. 


இப்போ நம் மக்கள் பணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட சக மனிதர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை.
                             "பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்"
                                                                         சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.

என்ன செய்ய? காசு காசு காசு என்று மக்கள் பேய் பிடித்தது போல் அலைகிறார்கள். பணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட சக உறவுகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லை. மனிதர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை. சக நண்பர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை. பணம் இன்று வரும். நாளை போகும். ஆனால் உறவுகளும் நண்பர்களும் தான் நம் இறுதிக்காலம் வரை வருவார்கள். என்று தான் நம் மனிதர்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
 பணத்துக்காக உறவுகளையே தூக்கி எறியும் உறவுகள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இம் மனிதர்கள் இன்றும் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதுதான் பு
ரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு யாழ்மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறார்கள். 


அனைவரும் ஒன்றுபடுங்கள். குடும்பங்களில் ஒற்றுமையை பேணுங்கள். உறவுகள் நண்பர்கள் என்று ஒற்றுமையாக இருங்கள். பணம் சம்பாதியுங்கள். அதைவிட 4 மனிதர்களையாவது வாழ்க்கையில் சம்பாதித்து வையுங்கள். இறுதிக்காலத்திலாவது உதவும்.

நெருப்பில்லாமல் புகையாது.
அப்படியே தான்
என் புன்னகையும் விடயமில்லாமால்
புன்னகைக்காது................  

Sunday, May 9, 2010

அன்னையே உன் பாசத்துக்கு ஈடு இணையேது ......

 

ஈரைந்து மாதங்கள் சுமந்து 

ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று என்னாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடில்லை
ஊண் உறக்கம் மறந்து
எம்மை உயிரைப் போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்
அன்னையே உன் பாசத்துக்கு
ஈடு இணையேது
ஆண்டவன் கூட
மண்டியிடுவான் உன் பாசத்துக்கு..........

  

 

அம்மா..........தனியே இப்போ இருக்கும் போதுதான் தெரிகிறது உன் அருமை. உன் பாசம். உன் அன்பு.....

தன் நலம் கருதாது என் நலம் காக்கும் என் அன்பு தெய்வம் என்
அம்மாவுக்கு இனிமையான வாழ்த்துக்கள்....இன்று போல் என்றும் இன்னும்
நூறாண்டுகள் கடந்து வாழ உன் மகனின்பிரார்த்தனைகள்

 

Wednesday, April 28, 2010

BATTLE OF THE HINDUS 2010

யாழ்ப்பாணத்தின் பெருமைகளினதும் பெறுபேறுகளினதும் பெரும் பங்காளிகளான நூற்றாண்டுப்புகழ் கொண்ட இரு கல்லூரிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரிகள் மோதிக்கொள்ளும் BATTLE OF THE HINDUS 2010 என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போர் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மாபெரும் கிரிக்கெட் சமர் யாழ்ப்பாணத்தின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மகுடமாக விளங்கும் வகையில் இரண்டே ஆண்டுகளில் பெரும் வரவேற்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே மேலும்
புதுபொலிவுடன் மூன்றாவது முறையாக இம்முறை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்களுக்கு   BATTLE OF THE HINDUS 2010 காத்திருக்கிறது .
2010 ஆம் ஆண்டிலேயே கொக்குவில் இந்துக்கல்லூரி தனது நூறாவது ஆண்டிலேயே காலடி எடுத்து வைத்திருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கம் நூறாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ள இத்தருணமானது இரு கல்லூரிகளையும் பொறுத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்படவேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2010 ஆம் ஆண்டுக்கான 3 ஆவது வருடாந்த BATTLE OF THE HINDUS 2010 கிரிக்கெட் சமரானது யாழ் கிரிக்கெட் வரலாற்றில் மீண்டுமொரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 
இதே நேரம் BATTLE OF THE HINDUS 2010 ஆனது கொக்குவில் இந்துக்கல்லூரியின் விஸ்தரிக்கப்பட்ட மைதானத்தில் புதிய ஆடுகளத்தில் இப்போட்டி இடம் பெற இருக்கின்றமை மேலும் போட்டி பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் தூண்டியுள்ளது. அத்தோடு ஐக்கிய சூழலில் நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் பல பழையமாணவர்கள் போட்டியை கண்டுகளிக்க வருகைதருவார்கள் என்பதால் கொக்குவில் இந்துக்கல்லூரி நிர்வாகம் மைதான விரிவாக்கம், பவிலியன் விஸ்தரிப்பு போன்ற பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்துகள் சமரானது 2008 ம் ஆண்டு முதல் முறையாக இரு கல்லூரிகளுக்கும் இடையே கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது. இதில் இரு கல்லூரி வீரர்களும் தமது திறமையை முழுமையாக வெளிபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2009ம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றிருந்த போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.
இதே வேளை கொக்குவில் இந்து கல்லூரி அணியினர் இவ்வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை அணிகளுகிடையான கிரிக்கெட் தொடரின் 3வது பிரிவில் கால் இறுதிவரை முன்னேறி இருந்தனர் அதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினரும் இத்தொடரில் பல அபாரவெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எனவே இந்த 2010 ஆம் ஆண்டிற்கான BATTLE OF THE HINDUS 2010 பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது கிரிக்கெட் அவதானிகளின் எதிர்பார்ப்பாகும். BATTLE OF THE HINDUS 2010 கிரிக்கெட் போட்டிக்கு கொக்குவில் இந்து கல்லூரி அணி சார்பாக கே.நிரோஜன் உம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சார்பாக எஸ். நிருஜனும் தலைமை தாங்கிறார்கள்.

Monday, April 12, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 யாழ் மாவட்டம்......

நடந்து முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை கட்சிகளும் போட்டியிட்டன. எவ்வளவு கட்சிகள்??? முடியல சாமி. மொத்தத்தில் 27 கட்சிகள். கிட்டத்தட்ட 324 வேட்பாளர்கள். உண்மையில் இது தேவைதானா??? தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்த 9 அல்லது 10 வேட்பாளர்களே பாரளுமன்றம் செல்லமுடியும். எனவே அவ்வாறு செல்பவர்களை மிக கூடுதலான வாக்குகளை போட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அனுப்புவதை விடுத்து சுயேட்சை கட்சிகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தது தான் மிச்சம். எப்பதான் நம்ம ஆட்கள் திருந்தப் போறார்களோ தெரியவில்லை. தமிழ் மக்கள் தமிழ் மக்களால் தான் அழியினம் எண்டதுக்கு சிறந்த உதாரணம் இதுதான். இனியாவது திருந்துங்க ஐயா திருந்துங்க.  !!!!!      (பணம் எண்டா பிணமும் வாய் திறக்குமாம். மனுசங்க நாங்க திறக்கமாட்டமா! என்ன விளங்குதா??? )
அன்புள்ள தமிழ் மக்களே!!!
வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் அத்தியாய கடமை. ஒவ்வொருவரினதும் உரிமை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இப் பாரளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் 18 வீதமே வாக்களித்துள்ளனர். உண்மையில் இது வருத்தப்பட கூடிய விடயம். நம் மக்கள் கடந்த ஒரு தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் இவ்வளவு பிரச்சனையும். இனியாவது விழப்படைந்து வாக்களித்திருக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எமது ஏக பிரதிநிதி இவர்தான் என்று தெரிவு செய்து எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.( யாரை ஐயா நாங்க நம்பிறது என்டு நீங்க புலம்புவது விளங்கிறது என்ன செய்ய எல்லாம் நம்ம விதி.)  

போட்டியிட்ட 15 அரசியல் கட்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே ஆசனங்களை பெற முடிந்தது. மீதி அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தளவு வாக்குகளை பெறமுடியவில்லை. போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்கள் 5 வீத வாக்குகளை கூட பெறமுடியவில்லை பாவம். ( நான் நினைக்கிறேன் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் வாக்களித்திருப்பார்கள் என்டு) இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தேர்தலிலும் காட்டியிருக்கிறார்கள். அன்புள்ள இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களே  இனியாவது ஒற்றுமையாக இருங்க. இனியாவது யோசிச்சு செயற்படுங்க. உங்கள் கட்சிக்குள்ளே கழுத்தறுப்பு போட்டி என பல பிரச்சனைகளாம். இனியாவது கட்சியை கொஞ்சம் காப்பாற்ற யோசிங்க. ஒற்றுமையாக இருங்க.
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா 20 501 விருப்பு வாக்குகளுடனும் சுரேஸ் பிரேமச்சந்திரன் 16 425 விருப்பு வாக்குகளுடனும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி 15 311 விருப்பு வாக்குகளுடனும் ஈஸ்வரபாதம் சரவணபவன் 14 961 விருப்பு வாக்குகளுடனும் சிவஞானம் சிறிதரன் 10 057 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் டக்ளஸ் தேவானந்தா 28 585 விருப்பு வாக்குகளுடனும் சில்வேஸ்திரி அலென்ரின் 13 128 விருப்பு வாக்குகளுடனும் சந்திரகுமார் முருகேசு 8 105 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக விஜயகலா மகேஸ்வரன் 7 160 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமாக யாழ் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்த 9 பேர் பாரளுமன்றத்துக்கு செல்கின்றனர்.

இம்முறை    டக்ளஸ் தேவானந்தா மாவை சேனாதிராஜா  சுரேஸ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரைத் தவிர மிகுதி அனைவரும் புதியவர்கள். அதில் விசேடமாக மக்களுக்காக வேவையாற்றி உயிரை நீத்த தியாகராஜா மகேஸ்வரனின் பாரியார்  விஜயகலா மகேஸ்வரன் பாரளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இனியாவது ஒற்றுமையுடன் சோந்து நின்று மக்களுக்காக சேவையாற்றுவீர்கள் என்று நினைக்கிறேன். இனியும் நம் மக்களை ஏமாற்றிவிடாதீhகள். பாவம் நம் மக்கள். பல இடத்தில் ஏமாந்து போய் நிற்கிறார்கள். இடம்பெயர்வு முகாம் வாழ்வு என்றெல்லாம் பல இடங்களில் துன்பம். எனவே இனியாவது நம் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.........

Sunday, April 4, 2010

பாதையை விட்டு போதையை பிடிக்காதீர்..............

நிறைய நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் பதிவுக்குள் கவனம் செலுத்த முடியவில்லை. எனினும் இப்பதிவு கட்டாயம் இட வேண்டிய சூழ்நிலை காரணமாக நேரம் ஓதுக்கி என் பதிவுக்குள் வருகிறேன்.

என்ன தலையங்கத்தை பார்த்து விட்டு கடுமையாக யோசிக்கிறியளோ!!! பாதையை விட்டு போதையை பிடிக்காதீர் என்ற தலையங்கத்தில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. பாதையை விடுத்து போதையை பிடிக்காதீர் என்ற தலையங்கமே இட காரணமே நம்ம மதம் படும்பாடு பற்றி சொல்ல வேண்டுமே என்ற ஆதங்கம் தான். ஏன் இந்து மதத்தில் மட்டும் தான் இப்படி? இந்து மதம் ஓழுங்காக போதனைகளை வழங்கவில்லையா? நிறைய தெய்வங்கள் இருப்பதாலோ தெரியவில்லை? நான் அறிந்தவரை வேறு மதத்தில் இவ்வாறு கேள்விப்படவில்லை.
இந்துமதம் வாழ்க்கையை சிறந்ததாக கொண்டு செல்ல போதனைகளை வழங்கவில்லையா?? ஏன் இவ்வாறான சாமியார்களை நம்பி செல்கிறார்கள்? இவ்வாறான போலிச்சாமியார்கள் நாள்தோறும் அகப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம்ம மக்கள்தான் திருந்தின பாடில்லை.
எனினும் விசயத்துக்கு வருவம். இவ்வாறான சாமியார்களோ? துறவிகளோ? எப்படி இவ்வாறு பிரபல்யம் அடைகிறார்கள்? என்னதான் இவர்களின் பின்ணணி வாழ்க்கைக்கு இருண்டதாக இருந்தாலும் அவர்கள் சொல்ல வந்த விடயங்கள் என்னை பொறுத்தவரைக்கும் வரவேற்க கூடியவைதான். அண்மையில் நம்மவர்களிடையே சிக்கிய போலியாக இனங்காணப்பட்டவர் நித்தியானந்த சுவாமி. காமம் என்ற போர்வைக்குள் சிக்குண்டு தன்னை போலியானவர் என்று காட்டியுள்ளார். உண்மையில் போலிச்சாமியார்கள் அனைவருமே கூடுதலாக காமம் என்ற நிலை மூலமே அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். நித்தியானந்த சவாமி சம்மந்தமான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டது. இவரும் இப்படியா?? எனினும் அவர் நமக்கு கூறிய நல்ல விடயங்களை நம்மால் மறக்கமுடியாது.
நித்தியானந்தரின் அறிவுரையில் இருந்து நான் படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன் படித்துபாருங்களேன்..


ரோஜாவின் அழகுக்கு ஆசைப்படுகிறிர்களா???

அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.
அரவணைப்புக்கு ஆசைப்படுகிறீர்களா??....
சிறு அடிக்கும் பெரும் அதட்டலுக்கும் கூடத் தயாராக இருக்க வேண்டும்.
தயாராக இருக்கிறீர்களா?... சிந்தியுங்கள்.
காதலர்களுக்கு
'காதல் காலம்"
எப்போதுமே இனிக்க காரணம்
அந்த காலங்களில்
ரோஜாவின் முட்கள்
இதயத்தை குத்துவதில்லை.
சிவப்பு ரோஜா வெள்ளை ரோஜாவைப் பார்த்து மயங்கியும்
வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவைப் பார்த்து மயங்கியும்
இருப்பது மனசுக்கு இதமாகத்தான் இருக்கும்.


எந்த உறவும் முதலில் இனிக்க இதுதான் காரணம்.
முள் குத்தும்போதுதான் மயக்கம் தெளிகிறது.
நம்மவரின் சில கெட்ட குணங்கள் தெரியும் போதுதான்.... இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது.
மனதிலிருந்து துக்கம் சொட்டு சொட்டாய் கசிகிறது.
ரோஜாவை நேசித்த நீங்கள் அதன் முட்களை மட்டும் வெறுத்தால் எப்படி???
முள்ளில்லாத ரோஜா உலகில் இல்லை. நீங்களும் முட்களுள்ள ஒரு ரோஜா தானே..
ரோஜாவை முட்களோடு நேசியுங்கள்.
அதுதான் ரோஜாவுக்கு நீங்கள் தரும் மரியாதை.



இது நித்தியானந்த சுவாமியின் அறிவுரையில் நான் படித்ததில் பிடித்ததை உங்களோடு பகிர்ந்துள்ளேன். பாருங்களேன் எவ்வளவு இலகுவாக அனைவருக்கும் விளங்க கூடிய வகையில் தனது சொல்லியிருக்கிறார். ஆனால் காமம் என்ற வலையில் சிக்கி தனது நல்ல பெயரை கெடுத்துவிட்டார். எனினும் உலகில் ஆசையில்லாத மனிதர்கள் இருக்கிறார்களா? அந்த கடவுளுக்கே ஆசையிருக்கிறது. ஏன் இந்த நித்தியானந்தர் மட்டும் என்ன விதிவிலக்கா???? அனைவரும் ஆறறிவு உள்ள மனிதர்கள் தான். ஆனால் அவர் தனது சிந்தனையை கூற எமது மதத்தை பயன்படுத்திய விதம்தான் பிழை என்று கூறமுடியும். நல்ல சிந்தனைகளை கூறினாலும் ஒருவிதத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.
எனினும் அவர் கூறிய விடயங்கள் சிறந்தவையாக இருக்கிறது. பொதுவாக கடவுளின் அவதாரங்கள் என்று பக்தர்களால் அழைக்கப்படுவாகள் பலர் இருக்கிறார்கள். அவாகளின் படங்களை வீட்டில் பெரிதாக மாட்டி நாம் அவர்களின் பக்தர்கள் என்று கூறுவதிலே ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களின் சிந்தனையை பாருங்கள். அவர்கள் கூறிய விடயங்களை பாருங்கள். அதை நம் வாழ்வில் கடைபிடிக்க பாருங்கள். நம் வாழ்வாவது மேம்படும். சும்மா வெட்டி பேச்சு பேசுவதில் பயனில்லை.
பாதையை விட்டுவிட்டு போதையை பிடிக்காதீர் அவர்களட காட்டிய பாதையை பாருங்கள். வாழ்வு மேம்படும்.

Sunday, February 7, 2010

காதல் காதல் காதல்


பெப்ரவரி 14 வந்தால் சரி. நம்ம ஆட்களுக்கு சொல்ல வேண்டுமா? எங்கு பார்த்தலும் நான் உன்னை காதலிக்கிறேன். I LOVE YOU . மம உயட்ட ஆதரிய...... என்ற வாசகங்கள் தான். காதல் வாசகங்களால் கறுப்பு நிற தார் வீதி வண்ணமயமாக ஜொலிக்குதய்யா! அதுபோலத்தான் SMS, MMS மற்றும் FACEBOOK போன்றவையை சொல்லவா வேண்டும்!


"எங்கும் காதல். எதிலும் காதல்.
             காதல் இல்லையே     சாதல்"
          என்ற வரி தான் ஞபாகம் வருகிறது. நீங்கள் நினைப்பது புரிகிறது. மது காதலை பற்றி எழுதுகிறானே இவனும் காதலில் சிக்கி கொண்டானோ? என்று புலம்புவது தெரிகிறது. எனினும் நான் ஏன் நண்பர்களுக்கு பொய் சொல்ல வேண்டும். உண்மையை கூறுகிறேன் உண்மையில் நான் ஒருவரையும் காதலிக்கவில்லை.

காதல் ஒரு இனிமையான விடயம். காதல் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்தியும் இருக்கிறது. அது போல தாழ்த்தியும் இருக்கிறது.(ஆமாம். காதலிக்கும் போது பணக்கார பையனையோ அல்லது பொண்ணையோ பார்த்தால் வாழ்க்கையில் உயரலாம் தானே. என்ன? )

இன்றைய பலரின் காதல் கேள்விக் குறியாகியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம் சரியான அதாவது தக்க வயதில் காதல் கொள்ளாமை. இது தான் பலரின் பிரச்சனை. பாடசாலைக் காலத்தில் தொடங்கி விடும் காதல். இக் காலத்தில் வரும் காதல் நிலைத்தது என்று வரலாறு இல்லை. எங்காயவது ஒன்றிரண்டு வென்றிருக்கலாம். புரியாத வயதில் வரும் காதல் புரியாத புதிர் ஆகிவிடும். நண்பர்களே ஜாக்கிரதை. நிறைய பேரின் வாழ்க்கை இவ்வாறு தான் அழிந்து போய் நிற்கிறது. புரியாத வயதில் காதல் கொண்டு அது தோல்வியில் முடிந்தவுடன் காதல் என்னை அழித்துவிட்டது என்று புலம்புவது. என்ன நியாயம் ஐயா! எனவே காதல் கொள்பவர்களுக்கும் காதல் தோல்வி என்று புலம்புவர்களுக்கும் இது ஒரு அறிவுரையாக இருக்கட்டும்.

அடுத்த பிரதான காரணம் காதலர்கள் தம்மிடையே புரிந்துணர்வு இல்லாமையே காரணம். இந்த புரிந்துணர்வு என்ற விடயத்துக்குள்ளேயே சந்தேகம் என்பதை இணைக்கலாம். அன்புள்ள காதலர்களே! நீங்கள் உங்கள் காதலில் சந்தேகம் கொள்ளாதீர்கள். நீங்கள் நல்ல புரிந்துணர்வுடன் காதலியுங்கள். நிச்சயம் உங்கள் காதல் வெல்லும்.

அன்புள்ள காதலர்களே! நீங்கள் உங்கள் காதலில் நம்பிக்கை வையுங்கள்.
 நீங்கள் வாழ்க்கையில் காதல் வைத்திருங்கள்.
ஆனால் காதலே வாழ்க்கை ஆக்காதீர்கள்.
( இது எப்படி இருக்கு!!!!!! சும்மா அதிருதில்ல!!)

காதல் தோல்வி என்று புலம்பும் நண்பர்களே! உங்கள் காதலில் நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் இல்லாது போயிருக்கலாம். திருத்த முடிந்தால் திருத்துங்கள். காதல் கை நழுவி சென்று இருந்தால் இருந்து யோசிக்காமல் உங்கள் வாழ்க்கையை மேலே கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை காதலிலே முடிவடைவதில்லை. அதை விட வாழ்க்கையில் அழகான நிறைய தருணங்கள் உண்டு. அவற்றை அனுபவியுங்கள்.

அதை விட பெரிய கொடுமை காதலர்கள் படும்பாடு இருக்குதே! அப்பா தாங்கவே முடியாது!!!!!!. அவங்க அடிக்கிற லூட்டியும் லொள்ளும் முடியல. நிம்மதியாக இருக்கலாம் என்று BEACH க்கு போன முடியல. கொஞ்சம் சுத்தி பாருங்கையா! ஆட்கள் நடமாட்டம் இருக்கு. Beach, Park என்று ஆரம்பிச்சு இப்ப பஸ்ஸையும் விடுறாங்க இல்ல. முடியல்லை உங்க லொள்ளு தாங்க முடியல ஐயா.

அதைவிட பெரிய கொடுமை handphone. யார் ஐயா இந்த handphone  கண்டு பிடிச்சது? கண்டு பிடிச்சவனுக்கு கூட இத்தனை calls வந்திராதுப்பா. வந்திராது. அதை விட sms பெரிய கொடுமை. ஒருவர் காதலிக்கிறாரோ? இல்லையோ என்று phone message type pad  இல் வைச்சு பிடிச்சிடலாம். என்ன கேவலாம இருக்கோ அவ்வளவுக்கு அவரது காதலின் ஆழம். ஐயோ! ஐயோ! நீங்கள் நினைப்பது புரிகிறது. காதலித்து பாரு அதன் அருமை புரியும்? என்று. சரி சரி. நிச்சயம் சந்தர்ப்பம் கிடைச்சா உங்களோட அந்த இனிய உணர்வையும் பகிர்ந்துக்கிறேன். நம்புங்க ஐயா நம்புங்க.

இன்னும் கொஞ்சப்பேர் நம்மிடையே இருக்கினம். கட்சித்தாவல்களையே தம் வாழ்க்கையாக கொண்டவர்கள். ( கட்சித்தாவல் என்று குறிப்பிடுவது உங்களுக்கு விளங்கும் தானே!) இவர்கள் எப்போதும் திருந்தப் போவதில்லை.

" காதல் கூடாது என்று சொல்ல
       அது கெட்ட செயல் ஒன்றும் இல்லை"

அன்புள்ள காதலர்களுக்கு இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.

அனைவரது காதலும் வெற்றியில் முடிய வாழ்த்துக்கள்.
 
 
நன்றி வலைப்பதிவு நண்பர்களே. நன்றி. எனக்கும் எங்கள் பதிவில் இடம் தந்ததுக்கு நன்றி
 

Wednesday, January 27, 2010

ஏ9 பாதையும் யாழ்ப்பாணமும்

முடியல! ஐயா! முடியல. என்ன கொடுமை சரவணா? எப்படி இருந்த யாழ்ப்பாணம் இப்படி ஆகிடிச்சே! ஏங்க நான் வளர்ச்சியை சொன்னன்.நம்புங்கையா?

திறந்தவெளி சிறைச்சாலையாக அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை ஏ9 பாதை திறந்து வைத்தவுடன் இப்போது குட்டி சிங்கப்பூர் ஆகிவிட்டது. வீதியோரக் கடைகளுக்கு பஞ்சமேயில்லை. எவ்வளவு வாகனங்கள்! எத்தனை மக்கள்! எத்தனை கடைகள்! உண்மையில் யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது மிக வியப்பாக இருக்கிறது. நல்லூர்த் திருவிழாவை விட மிக அதிகமான சன நெருக்கடியை யாழ் நகர் புறங்களில் அவதானிக்கமுடிகிறது.
உண்மையிலே எவ்வளவு காலங்கள்? நிறைய பிரச்சனைகள்? நாள்தோறும் ஏதாவது இன்னல்கள். அத்தனையும் முடிவுக்கு வந்து இப்போது கொஞ்சம் பிரச்சனைகள் இல்லாது வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வடக்குக்கும் தெற்குக்கும் இடையான இணைப்புபாலமாக இருந்த ஏ9 பாதையும் திறந்தாச்சு. 24 மணிநேரமும் பயணிக்க கூடிய வகையில் பாதையும் திறந்தாச்சு.



நாள்தோறும் யாழ்ப்பாணத்துக்கு வந்து குவியும் வாகனங்கள், மக்கள், பொருட்கள், என யாழ் நகரமே வியந்து நிற்கிறது. பெரிய நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தில் வந்து தமது முதலீட்டை இடுவது மகிழ்ச்சி தான். அதுபோல தாங்கள் யாழில் வேலையற்று தவிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவீர்களானல் உங்கள் வருகையால் அவர்களின் வாழ்க்கையும் நம்பிக்கை ஒளியூட்டும். அன்புள்ள நிறுவனங்களின் தவைவர்களே இதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

அதைவிட யாழுக்கு வந்து குவியும் மக்கள் தொகையை கண்டு வியந்து நிற்கிறது யாழ் சமூகம். இன மத பேதமின்றி உங்கள் வருகையை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். வாருங்கள். யாழ் மக்களுடன் பழகிப் பாருங்கள். எவ்வளவோ இன்னல்களையும் அனுபவித்து எவ்வளவு சந்தோசமாக உங்களை வரவேற்பதை பாருங்கள். உபசரித்து மகிழ்வதில் தமிழ் மக்களை தவிர இந்த பாரினுள் எவரும் இல்லை என்று உணர்த்துகிறார்கள். பாருங்கையா! பாருங்க!
இவற்றோடு வந்து குவியும் பொருட்கள். ஐயோ! வீதியோரக் கடைகளின் வருகை அதிகரிப்பால் யாழப்பாண கடை முதலாளிகள் மனம் கலங்கிப்போய் உள்ளனர். அவர்களையும் கொஞ்சம் எட்டி பாருங்க அன்புள்ள எம் உறவுகளே. எமக்கும் விளங்கிறது விலை வித்தியாசங்கள். யார் யாரைத் தான் நோக! என்ன செய்ய? யாழப்பாணத்துக்கு என்று உள்ள சில பொருட்களை கூட நீங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வந்து விற்பது மனதுக்கு மிக வேதனை அளிக்கிறது. அதிலும் நீங்கள் பலாப்பழம் கூட தென்னிலங்கையில் இருந்து கொண்டு வருவது மிக மன வேதனையாக இருக்கிறது. அன்புள்ள வீதியோர வியாபாரிகளே! கொஞ்சம் யாழ்ப்பாண பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்! பாவம் ஐயா! நம்ஊர் வியாபாரிகள்.


அன்புள்ள சுற்றுலா பயணிகளே! யாழ்ப்பாணம் அழகான பிரதேசம். வந்தோரை வாழ வைக்கும் நம்ம ஊர். எனவே அழகான ஊரை அசுத்தப்படுத்தாதீர். ஏ9 பாதை திறந்தவுடன் யாழ்ப்பாணத்தை பார்க்க டெங்கு நுளம்புக்கு கூட ஆசை வந்திட்டு போல. ஏய் டெங்கு நுளம்பே! உன்னால் 17 பேரை உட்கொண்டு விட்டாய். இன்னுமா தீரவில்லை உன் பசி. நிறுத்து. காணும் உன் விளையாட்டு.

உண்மையிலே ஏ9 பாதை திறப்பு யாழ்ப்பாண மக்களை பொறுத்த வரையில் மிக அவசிய தேவை ஒன்றாகும். பாதை திறந்தவுடன் இலகுவாக தென்னிலங்கையுடனான தொடர்பை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அத்தோடு அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்துப் பொருட்களும் பெற்றுக் கொள்ளவதோடும் நியாய விலைகளில் கிடைப்பதும் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. அத்தோடு உங்களோடு சேர்ந்து நானும் யாழ்தேவியை புகையிரதத்தை யாழ்ப்பாணத்துக்கு எதிர்பார்த்தப்படி...........................................









குறிப்பு:

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எனது பதிவுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் தவறுகளை இயன்றவரை திருத்த முயற்சிக்கிறேன். தொடர்ந்து எனது வலைப்பதிவிற்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு........

Saturday, January 23, 2010

முடியல சாமி முடியல !!!!!!!!

நன்றி. நண்பர்களே. நன்றி.



எனது முதல் பதிவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியின் மகிழ்ச்சியுடனும் முதல் பதிவின் தொடர்ச்சியாகவும் இதை தொடரலாம் என்று மனம் சொல்கிறது. காரணம் நண்பர்கள் சொன்னார்கள். எனது முதல் பதிவு சொல்ல வந்த விடயத்தை மேலாக தொட்டுச் சென்றேதே ஒழியே விடயம் விளக்கமாக ஆராயப்படவில்லை என்ற வருத்தங்கள் இருந்தன. எனினும் எனக்கு அதை விளக்கமாக எழுத போய் அது நல்ல அறிவிப்பாளர்களையோ அல்லது நல்ல ஊடகவியலாளர்களையோ தாக்கும் என்ற ஐயப்பாடு இருந்தது. எனினும் எனது நண்பர்களின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் சொல்ல வந்த விடயத்தை மிகவிளக்கமாக எனக்கு தொந்த நடையில் பதிகிறேன்.



உண்மையில் முதலில் எனக்கு பதிவு இடவேண்டும் என்ற ஆசை வந்ததே லோஷன் அண்ணாவின் லோஷன் களம் பார்த்த பிறகே. அதை போலவே எனக்கு இந்த பதிவை இட தைரியம் வந்ததே அவரின் சில பதிவுகளை வாசித்த பிறகே. எனவே எதற்கும் அண்ணா லோஷன் அண்ணாக்கு நன்றி தெரிவித்து பதிவுக்குள் வரலாம் என்று எண்ணுகிறேன்.
ஊடகம் என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல இலகுவாக பிரபல்யம் அடைவதற்கு ஒரு வழி எனலாம். அதற்கு இளைஞர்கள் படும் கஸ்டங்களும் வேதனைகளும் பற்பல. அண்ணா எனக்கு சந்தர்ப்பம் எடுத்து தாங்களேன்? என்று தனியார் ஊடகங்களில் வேலை செய்யும் அறிவிப்பாளர்களை கேட்பது வழமையாகி விட்டது. இதை பயன்படுத்தி ஒரு சில அறிவிப்பாளர்கள் செய்யும் கூத்துகள் பல. மீண்டும் சொல்கிறேன் இலங்கைத் திருநாடு நல்ல பல அறிவிப்பாளர்களை கண்டு இருக்கிறது. கண்டு கொண்டு இருக்கிறது. உண்மையிலே சில அறிவிப்பாளர்களின் பெயர்களை இந்த இடத்தில் குறிப்பிட்டால் மிகையில்லை. அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி  சண்முகம் ,  தயானந்த  என்று பழம் பெரும் அறிவிப்பாளர்களையும் அண்மையில் சாகித்திய விருது பெற்ற லோஷன் அண்ணாவையும் அதுபோல இளம் வயதில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்ற பதவியை வகிக்கும் நவா அண்ணாவையும் குறிப்பிட்டால் மிகையில்லை. ஆனால் அது போலவே இவ்வாறு குறுகிய சிந்தனை கொண்டவர்களும் வாழ்வதும் வேலை செய்வதும் இந்த கால கட்டத்தில் தான் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.











உண்மையில் நான் பதியப் போகும் விடயங்கள் ஊடகங்களில் இருப்;பவர்களுக்கு தெரியும். எனினும் நான் விரிவாக பதியக் காரணம் இனியும் ஒரு ஆண்மகனோ அல்லது பெண்மகளோ பாதிப்படையக்கூடாது. வாழ்க்கை என்பது எவ்வளவு போராட்டம் என்பது அவர்களுக்கு தெரியாது. ( அவர்கள் என்று குறிப்பிடுவது ஒரு சில அறிவிப்பாளர்களை) அவர்கள் தமது நோக்கம் முடிவடைந்தால் சரி என்று வாழ்பவர்கள்.







அறிவிப்பாளர்களுக்கு உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காமையே முக்கியகாரணம் எனலாம். அறிவிப்பாளருக்கும் நேயருக்கும் இடையில் உள்ள இடைவெளி தொடர்ந்து பேணப்படல் வேண்டும். இது பேணப்படாது விடத்து ஏற்படும் சிக்கல்கள் அதிகம். ஒரு நேயரோ அறிவிப்பாளரின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடக்கூடாது. அது போலவே அறிவிப்பாளரும் தனது தனிப்பட்ட விடயங்களை நேயரிடமும் பகிரக்கூடாது. நீங்கள் சொல்வது புரிகிறது. இதை வாசித்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் திருத்துவார்கள் ஐயா. திருத்துவார்கள். நம்புவம். நம்பிக்கை தான் வாழ்க்கை. இல்லையா!.


அது போலவே இன்னொரு காரணமாக தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை நேயர்களுக்கு வழங்குதலும் நேயர்களின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை பெற்று தேவையில்லாத வீண் பேச்சுகளில் ஈடுபடுவதாலும் பிரச்சனைகள் கிளம்புகின்றன.


அதைவிட கொழும்பு மாநகரம் எங்கு பார்த்தாலும் அறிவிப்பாளர்கள் பயிற்சி நிலையங்கள். ஐயா சாமி நீங்கள் வழங்கும் சான்றிதழை காட்டினால் தான் வானோலி நிலையத்திலோ அல்லது தொலைக்காட்சி நிலையத்திலோ வேலைக்கு சேர்ப்பார்கள் என்று இல்லை. நேர்முகத் தேர்வு வைப்பவர்கள் அதை பற்றி கணக்கெடுக்கிறார்கள் இல்லை. சரி  நாங்க விடயத்துக்கு வருவம். இப்படியான பயிற்சி நிலையங்களால் நான் கூறிய சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாகிறது. தமது நிகழ்ச்சியில் தான் சுயபுராணம் பாடுகிறார்கள் என்றால் பயிற்சி நிலையங்களிலும் சுயபுராணம் பாடி தமது நிலையை உயர்த்தி கொண்டு அங்கு கற்கும் மாணவர்களுக்கு நாங்கள்


வானோலி நிலையத்திலோ அல்லது தொலைக்காட்சி நிலையத்திலோ உங்களுக்கு சந்தர்ப்பம் எடுத்து தருகிறோம் என்று ஆசை காட்டி..................... வேண்டாம் ஐயா! மிகுதி வேண்டாம் ஐயா!


அது போலவே அறிவிப்பாளர்கள் தமது சுயபுராணம் பாடுவதை நிறுத்த வேண்டும். சுயபுராணம் பாடி தம்முடன் பிரச்சனையானவர்களை வானலையில் மறைமுகமாக கிண்டலடித்தல் அவர்கள் சம்பந்தமான பாடல் ஒலிபரப்பல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதை தவிர்த்தல் வேண்டும்.


அதை விட தமது மற்றைய சக அறிவிப்பாளர்களை பற்றி மிக கேவலமாக தமது நேயர்களிடம் வதந்தியை பரப்பி விடுவதும் இவர்களின் வேலையாக இருக்கிறது. எனவே இவ்வாறான நம்பிக்கை துரோகிகளுடன் வேலை செய்யும் நல்ல அறிவிப்பாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.


இவ்வாறு பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.


அன்புள்ள வாய்ப்பு தேடி அலையும் ஆண்களே! பெண்களே!


அனைவரையும் உடனே நம்பிவிடாதீர்கள். சில நரிகளும் ஊடகத்தினுள் இருக்கிறார்கள்.( நரி என்று குறிப்பிட்டதுக்கு மன்னியுங்கோ. எனக்கு தெரியவில்லை சம்பந்தப்ட்ட அறிவிப்பாளர்களை விழிப்பதற்கு) அவர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். குறிப்பாக பெண்மணிகளே! நீங்கள் தான் கவனம். நான் ஏன் உங்களை விழிப்பாக இருக்க சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்.


இவ்வாறான நாpகள் வேலை செய்யும் நிலையங்களின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரிகளே!


இது உங்களின் கவனத்துக்கும்! ஆனால் ஏற்கனவே சில விடயங்கள் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருப்பட்டதாம் என அறிகிறோம். பரவாயில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட நரிகள் நன்றியுள்ள நாய்களாக மாறட்டும்.






அன்புள்ள நண்பர்களே!


நான் சிறுவன். எனவே மேலே பதியப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை. ஆனால் நான் சொல்ல வந்த விதம் தவறு என்று உணர்ந்தால் மன்னியுங்கோ........





Friday, January 22, 2010

1 வது பதிவு .............


1 வது பதிவு .............




எனது முதலாவது பதிவுடன் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இனி நிச்சயம் உங்களை சந்திப்பேன் என்ற மகிழ்வோடு எனது முதல் பதிவுக்குள் நுழைகிறேன்..



என்னடா முதல்பதிவு பதியலாம் என்ற எண்ண அலைகளுடன் நான் மோதிக்கொண்டேன். அரசியல் போடலாமா என்றால் "ஏன்டா சாமி உயிரோடு இருக்க ஆசையில்லையா? என்று மனது சொல்வது புரிந்தது. என்ன போடலாம் போடலாம் என்று யோசித்த போது மனதில் பட்டதை எழுதுகிறேன். புரிபவர்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி. திருந்தினால் சந்தோசம்.



அன்புள்ள சில ஊடகத்துறை நண்பர்களே..........
 உங்கள் நடவடிக்கைகளால் ஊடகத்துறை வெட்கித் தலை குனிகிறது. ஊடகத்துறை என்பது மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது எவ்வளவு அவசியமானது என்று அனைவருக்கும் தொpயும். அதேபோல ஊடகத்துறை மூலம் இப்போது இலகுவாக பிரபல்யம் அடைந்திடலாம். இதை பயன்படுத்தி இடம்பெறும் சில சம்பவங்களால் மனம் வேதனை அடைகிறது. நான் ஊடகத்துறையை நேசிப்பவன் என்பதாலேயே என் முதல் பதிவில் இடுகிறேன். ஊடகத்துறை என்பது தற்போதைய காலகட்டத்தில் இலங்கையை பொறுத்தவரையில் மிக ஆபத்தான காலகட்டம் தான். எனினும் ஊடகத்துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. ஊடகங்கள் என்றால் என்ன? ஊடகங்களின் பங்களிப்பு என்ன? என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் கருத்துகளை முன் வைப்பர். இருப்பினும் இதை பற்றிய விடயங்களை வேறொரு பதிவில் இடுகிறேன்.

எனது பதிவில் இட வந்த விடயத்துக்கு வருகிறேன். நான் தொpவிக்கும் கருத்து ஊடகங்களுக்குள் இருக்கும் சில நன்நடத்தை இல்லாதவர்களுக்காக மட்டும் தான்.

நல்ல ஊடகத்துறை நண்பர்களும் நம் இடையே உள்ளார்கள். நான் தொவிக்கும் கருத்தால் அவர்கள் மனது வருத்தமடைந்தால் மன்னிக்கவும்.

ஆம்.

இலகுவாக பிரபல்யம் அடையலாம் என்று எண்ணி ஊடகங்களுக்கு நுழைய காத்திருக்கும் ஆண்களும் பெண்களும் பல பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். அதிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்பல. குறிப்பாக தனியார் வானோலிகள் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனங்களில் சந்தர்ப்பம் பெற்று தருவதாக இடம் பெறும் மோசடிகள் பல. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். இதில் படுமோசமான விடயம் சில பெண்கள் தமது வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. இவ்வாறு பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

Abdul Hameed போன்ற தலை சிறந்த அறிவிப்பாளர்களை தந்த இலங்கைத் திருநாட்டில் உங்களை போன்றவர்களும் வாழ்வதில் மிகவும் கவலையாக இருக்கிறது. எனவே அன்புள்ள நண்பர்களே இனிமேலோவது தங்கள் செயல்களில் நல்ல நல்ல மாற்றங்களை கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு முதல் பதிவில் இருந்து விடை பெறுகிறேன்.