நிறைய நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் பதிவுக்குள் கவனம் செலுத்த முடியவில்லை. எனினும் இப்பதிவு கட்டாயம் இட வேண்டிய சூழ்நிலை காரணமாக நேரம் ஓதுக்கி என் பதிவுக்குள் வருகிறேன்.
என்ன தலையங்கத்தை பார்த்து விட்டு கடுமையாக யோசிக்கிறியளோ!!! பாதையை விட்டு போதையை பிடிக்காதீர் என்ற தலையங்கத்தில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. பாதையை விடுத்து போதையை பிடிக்காதீர் என்ற தலையங்கமே இட காரணமே நம்ம மதம் படும்பாடு பற்றி சொல்ல வேண்டுமே என்ற ஆதங்கம் தான். ஏன் இந்து மதத்தில் மட்டும் தான் இப்படி? இந்து மதம் ஓழுங்காக போதனைகளை வழங்கவில்லையா? நிறைய தெய்வங்கள் இருப்பதாலோ தெரியவில்லை? நான் அறிந்தவரை வேறு மதத்தில் இவ்வாறு கேள்விப்படவில்லை.
இந்துமதம் வாழ்க்கையை சிறந்ததாக கொண்டு செல்ல போதனைகளை வழங்கவில்லையா?? ஏன் இவ்வாறான சாமியார்களை நம்பி செல்கிறார்கள்? இவ்வாறான போலிச்சாமியார்கள் நாள்தோறும் அகப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம்ம மக்கள்தான் திருந்தின பாடில்லை.
எனினும் விசயத்துக்கு வருவம். இவ்வாறான சாமியார்களோ? துறவிகளோ? எப்படி இவ்வாறு பிரபல்யம் அடைகிறார்கள்? என்னதான் இவர்களின் பின்ணணி வாழ்க்கைக்கு இருண்டதாக இருந்தாலும் அவர்கள் சொல்ல வந்த விடயங்கள் என்னை பொறுத்தவரைக்கும் வரவேற்க கூடியவைதான். அண்மையில் நம்மவர்களிடையே சிக்கிய போலியாக இனங்காணப்பட்டவர் நித்தியானந்த சுவாமி. காமம் என்ற போர்வைக்குள் சிக்குண்டு தன்னை போலியானவர் என்று காட்டியுள்ளார். உண்மையில் போலிச்சாமியார்கள் அனைவருமே கூடுதலாக காமம் என்ற நிலை மூலமே அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். நித்தியானந்த சவாமி சம்மந்தமான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டது. இவரும் இப்படியா?? எனினும் அவர் நமக்கு கூறிய நல்ல விடயங்களை நம்மால் மறக்கமுடியாது.
நித்தியானந்தரின் அறிவுரையில் இருந்து நான் படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன் படித்துபாருங்களேன்..
ரோஜாவின் அழகுக்கு ஆசைப்படுகிறிர்களா???
அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.
அரவணைப்புக்கு ஆசைப்படுகிறீர்களா??....
சிறு அடிக்கும் பெரும் அதட்டலுக்கும் கூடத் தயாராக இருக்க வேண்டும்.
தயாராக இருக்கிறீர்களா?... சிந்தியுங்கள்.
காதலர்களுக்கு
'காதல் காலம்"
எப்போதுமே இனிக்க காரணம்
அந்த காலங்களில்
ரோஜாவின் முட்கள்
இதயத்தை குத்துவதில்லை.
சிவப்பு ரோஜா வெள்ளை ரோஜாவைப் பார்த்து மயங்கியும்
வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவைப் பார்த்து மயங்கியும்
இருப்பது மனசுக்கு இதமாகத்தான் இருக்கும்.
எந்த உறவும் முதலில் இனிக்க இதுதான் காரணம்.
முள் குத்தும்போதுதான் மயக்கம் தெளிகிறது.
நம்மவரின் சில கெட்ட குணங்கள் தெரியும் போதுதான்.... இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது.
மனதிலிருந்து துக்கம் சொட்டு சொட்டாய் கசிகிறது.
ரோஜாவை நேசித்த நீங்கள் அதன் முட்களை மட்டும் வெறுத்தால் எப்படி???
முள்ளில்லாத ரோஜா உலகில் இல்லை. நீங்களும் முட்களுள்ள ஒரு ரோஜா தானே..
ரோஜாவை முட்களோடு நேசியுங்கள்.
அதுதான் ரோஜாவுக்கு நீங்கள் தரும் மரியாதை.
இது நித்தியானந்த சுவாமியின் அறிவுரையில் நான் படித்ததில் பிடித்ததை உங்களோடு பகிர்ந்துள்ளேன். பாருங்களேன் எவ்வளவு இலகுவாக அனைவருக்கும் விளங்க கூடிய வகையில் தனது சொல்லியிருக்கிறார். ஆனால் காமம் என்ற வலையில் சிக்கி தனது நல்ல பெயரை கெடுத்துவிட்டார். எனினும் உலகில் ஆசையில்லாத மனிதர்கள் இருக்கிறார்களா? அந்த கடவுளுக்கே ஆசையிருக்கிறது. ஏன் இந்த நித்தியானந்தர் மட்டும் என்ன விதிவிலக்கா???? அனைவரும் ஆறறிவு உள்ள மனிதர்கள் தான். ஆனால் அவர் தனது சிந்தனையை கூற எமது மதத்தை பயன்படுத்திய விதம்தான் பிழை என்று கூறமுடியும். நல்ல சிந்தனைகளை கூறினாலும் ஒருவிதத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.
எனினும் அவர் கூறிய விடயங்கள் சிறந்தவையாக இருக்கிறது. பொதுவாக கடவுளின் அவதாரங்கள் என்று பக்தர்களால் அழைக்கப்படுவாகள் பலர் இருக்கிறார்கள். அவாகளின் படங்களை வீட்டில் பெரிதாக மாட்டி நாம் அவர்களின் பக்தர்கள் என்று கூறுவதிலே ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களின் சிந்தனையை பாருங்கள். அவர்கள் கூறிய விடயங்களை பாருங்கள். அதை நம் வாழ்வில் கடைபிடிக்க பாருங்கள். நம் வாழ்வாவது மேம்படும். சும்மா வெட்டி பேச்சு பேசுவதில் பயனில்லை.
பாதையை விட்டுவிட்டு போதையை பிடிக்காதீர் அவர்களட காட்டிய பாதையை பாருங்கள். வாழ்வு மேம்படும்.
No comments:
Post a Comment