நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Wednesday, April 28, 2010

BATTLE OF THE HINDUS 2010

யாழ்ப்பாணத்தின் பெருமைகளினதும் பெறுபேறுகளினதும் பெரும் பங்காளிகளான நூற்றாண்டுப்புகழ் கொண்ட இரு கல்லூரிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரிகள் மோதிக்கொள்ளும் BATTLE OF THE HINDUS 2010 என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போர் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மாபெரும் கிரிக்கெட் சமர் யாழ்ப்பாணத்தின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மகுடமாக விளங்கும் வகையில் இரண்டே ஆண்டுகளில் பெரும் வரவேற்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே மேலும்
புதுபொலிவுடன் மூன்றாவது முறையாக இம்முறை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்களுக்கு   BATTLE OF THE HINDUS 2010 காத்திருக்கிறது .
2010 ஆம் ஆண்டிலேயே கொக்குவில் இந்துக்கல்லூரி தனது நூறாவது ஆண்டிலேயே காலடி எடுத்து வைத்திருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கம் நூறாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ள இத்தருணமானது இரு கல்லூரிகளையும் பொறுத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்படவேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2010 ஆம் ஆண்டுக்கான 3 ஆவது வருடாந்த BATTLE OF THE HINDUS 2010 கிரிக்கெட் சமரானது யாழ் கிரிக்கெட் வரலாற்றில் மீண்டுமொரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 
இதே நேரம் BATTLE OF THE HINDUS 2010 ஆனது கொக்குவில் இந்துக்கல்லூரியின் விஸ்தரிக்கப்பட்ட மைதானத்தில் புதிய ஆடுகளத்தில் இப்போட்டி இடம் பெற இருக்கின்றமை மேலும் போட்டி பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் தூண்டியுள்ளது. அத்தோடு ஐக்கிய சூழலில் நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் பல பழையமாணவர்கள் போட்டியை கண்டுகளிக்க வருகைதருவார்கள் என்பதால் கொக்குவில் இந்துக்கல்லூரி நிர்வாகம் மைதான விரிவாக்கம், பவிலியன் விஸ்தரிப்பு போன்ற பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்துகள் சமரானது 2008 ம் ஆண்டு முதல் முறையாக இரு கல்லூரிகளுக்கும் இடையே கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது. இதில் இரு கல்லூரி வீரர்களும் தமது திறமையை முழுமையாக வெளிபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2009ம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றிருந்த போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.
இதே வேளை கொக்குவில் இந்து கல்லூரி அணியினர் இவ்வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை அணிகளுகிடையான கிரிக்கெட் தொடரின் 3வது பிரிவில் கால் இறுதிவரை முன்னேறி இருந்தனர் அதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினரும் இத்தொடரில் பல அபாரவெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எனவே இந்த 2010 ஆம் ஆண்டிற்கான BATTLE OF THE HINDUS 2010 பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது கிரிக்கெட் அவதானிகளின் எதிர்பார்ப்பாகும். BATTLE OF THE HINDUS 2010 கிரிக்கெட் போட்டிக்கு கொக்குவில் இந்து கல்லூரி அணி சார்பாக கே.நிரோஜன் உம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சார்பாக எஸ். நிருஜனும் தலைமை தாங்கிறார்கள்.

No comments:

Post a Comment