நடந்து முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை கட்சிகளும் போட்டியிட்டன. எவ்வளவு கட்சிகள்??? முடியல சாமி. மொத்தத்தில் 27 கட்சிகள். கிட்டத்தட்ட 324 வேட்பாளர்கள். உண்மையில் இது தேவைதானா??? தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்த 9 அல்லது 10 வேட்பாளர்களே பாரளுமன்றம் செல்லமுடியும். எனவே அவ்வாறு செல்பவர்களை மிக கூடுதலான வாக்குகளை போட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அனுப்புவதை விடுத்து சுயேட்சை கட்சிகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தது தான் மிச்சம். எப்பதான் நம்ம ஆட்கள் திருந்தப் போறார்களோ தெரியவில்லை. தமிழ் மக்கள் தமிழ் மக்களால் தான் அழியினம் எண்டதுக்கு சிறந்த உதாரணம் இதுதான். இனியாவது திருந்துங்க ஐயா திருந்துங்க. !!!!! (பணம் எண்டா பிணமும் வாய் திறக்குமாம். மனுசங்க நாங்க திறக்கமாட்டமா! என்ன விளங்குதா??? )
அன்புள்ள தமிழ் மக்களே!!!
வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் அத்தியாய கடமை. ஒவ்வொருவரினதும் உரிமை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இப் பாரளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் 18 வீதமே வாக்களித்துள்ளனர். உண்மையில் இது வருத்தப்பட கூடிய விடயம். நம் மக்கள் கடந்த ஒரு தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் இவ்வளவு பிரச்சனையும். இனியாவது விழப்படைந்து வாக்களித்திருக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எமது ஏக பிரதிநிதி இவர்தான் என்று தெரிவு செய்து எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.( யாரை ஐயா நாங்க நம்பிறது என்டு நீங்க புலம்புவது விளங்கிறது என்ன செய்ய எல்லாம் நம்ம விதி.)
அன்புள்ள தமிழ் மக்களே!!!
வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் அத்தியாய கடமை. ஒவ்வொருவரினதும் உரிமை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இப் பாரளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் 18 வீதமே வாக்களித்துள்ளனர். உண்மையில் இது வருத்தப்பட கூடிய விடயம். நம் மக்கள் கடந்த ஒரு தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் இவ்வளவு பிரச்சனையும். இனியாவது விழப்படைந்து வாக்களித்திருக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எமது ஏக பிரதிநிதி இவர்தான் என்று தெரிவு செய்து எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.( யாரை ஐயா நாங்க நம்பிறது என்டு நீங்க புலம்புவது விளங்கிறது என்ன செய்ய எல்லாம் நம்ம விதி.)
போட்டியிட்ட 15 அரசியல் கட்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே ஆசனங்களை பெற முடிந்தது. மீதி அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தளவு வாக்குகளை பெறமுடியவில்லை. போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்கள் 5 வீத வாக்குகளை கூட பெறமுடியவில்லை பாவம். ( நான் நினைக்கிறேன் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் வாக்களித்திருப்பார்கள் என்டு) இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தேர்தலிலும் காட்டியிருக்கிறார்கள். அன்புள்ள இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களே இனியாவது ஒற்றுமையாக இருங்க. இனியாவது யோசிச்சு செயற்படுங்க. உங்கள் கட்சிக்குள்ளே கழுத்தறுப்பு போட்டி என பல பிரச்சனைகளாம். இனியாவது கட்சியை கொஞ்சம் காப்பாற்ற யோசிங்க. ஒற்றுமையாக இருங்க.
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா 20 501 விருப்பு வாக்குகளுடனும் சுரேஸ் பிரேமச்சந்திரன் 16 425 விருப்பு வாக்குகளுடனும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி 15 311 விருப்பு வாக்குகளுடனும் ஈஸ்வரபாதம் சரவணபவன் 14 961 விருப்பு வாக்குகளுடனும் சிவஞானம் சிறிதரன் 10 057 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் டக்ளஸ் தேவானந்தா 28 585 விருப்பு வாக்குகளுடனும் சில்வேஸ்திரி அலென்ரின் 13 128 விருப்பு வாக்குகளுடனும் சந்திரகுமார் முருகேசு 8 105 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக விஜயகலா மகேஸ்வரன் 7 160 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமாக யாழ் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்த 9 பேர் பாரளுமன்றத்துக்கு செல்கின்றனர்.
இம்முறை டக்ளஸ் தேவானந்தா மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரைத் தவிர மிகுதி அனைவரும் புதியவர்கள். அதில் விசேடமாக மக்களுக்காக வேவையாற்றி உயிரை நீத்த தியாகராஜா மகேஸ்வரனின் பாரியார் விஜயகலா மகேஸ்வரன் பாரளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இனியாவது ஒற்றுமையுடன் சோந்து நின்று மக்களுக்காக சேவையாற்றுவீர்கள் என்று நினைக்கிறேன். இனியும் நம் மக்களை ஏமாற்றிவிடாதீhகள். பாவம் நம் மக்கள். பல இடத்தில் ஏமாந்து போய் நிற்கிறார்கள். இடம்பெயர்வு முகாம் வாழ்வு என்றெல்லாம் பல இடங்களில் துன்பம். எனவே இனியாவது நம் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.........
No comments:
Post a Comment