நல்லூர் ஆலய பெருந்திருவிழா ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. நல்லூர் ஆலய திருவிழா என்றாலே யாழ் நகரமே விழாக்கோலம் தான். பக்தி, ஆன்மீகம் என்று ஒருபக்கம் இருந்தாலும் கேளிக்கைகள் ,கடைத்தொகுதிகள் என்று குறைவே இல்லை. அதுபோலவே நம் ஊரு பொண்ணுகளுக்கும் குறைவே இல்லை. வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தும் வெளிக்கு வந்துவிடும். அதுபோலவே பொண்ணுகளின் உடைகளுக்கும் குறைவே இல்லை. என்னையா உடுப்பு போடுறாங்க??? முடியல!!!! வீதியில வேறு ஆட்களும் போறவங்க எண்டு தெரியல போல. தாங்கள் தனியத்தான் போகினம் எண்டு நினைப்போ தெரியல.
இதுக்கல்லாம் முடிவு கட்டதான் இம்முறை நல்லூர் ஆலயத்துக்குள் உள்நுழைய வேண்டும் எனில் பெண்ணில் தமிழ் கலாச்சாரம் தெரியவேண்டுமாம். ஆகா!!!! இம்முறை கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்ககலாமோ!!!!!!! பெண்கள் சாறி ,தாவணியுடன் தான் உள்நுழையலாம். இம்முறை கோவிலுக்குள் அதிகம் சனநெருக்கடி குறையும். ஆனால் வெளியில் நல்ல சனநெருக்கடியாக இருக்கும். இம்முறை ஏ9 திறந்திருப்பதால் சனநெருக்கடிக்கு பஞ்சமே இருக்காது. அதுபோலவே அனைத்து கேளிக்கைகள் வேடிக்கைகள் என்று அனைத்துக்கும் பஞ்சமே இருக்காது.
எனினும் இவ்வாறான இடங்களில் தான் தங்கள் கலை கலாச்சாரங்களை பேண வேண்டிய இடங்களாகவும் காக்க வேண்டிய இடங்களாகவும் இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய தருணம். இப் பதிவு வெறும் சின்ன விடயமாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நம் கலாச்சாரங்களை நாமே தான் காப்பற்றவேண்டும். அந்த அந்த இடங்களுக்கு உரிய உடைகளை உடுக்கவேண்டும். நாம் நாமாவே இருந்து விட்டால் பிரச்சனை ஏது???????
இனி இப்படிதான் போகலாமோ??????? ஆகா!!!!!!!!!எனினும் இம்முறை நல்லூரில் அமுலாகும் இச்சட்டம் எவ்வளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இது நம்ம ஊரவர்களுக்கு மட்டும்தானா????? அல்லது பார்ப்பம் பார்ப்பம்........ எனினும் நம்மவர்கள்; ஒழுங்காக இருந்தால் பிரச்சனையே இல்லை.
ஆப்பு கண்ணுக்கு தெரியாதுஎல தெரியாது.............
1 comment:
ok cool brother
Post a Comment