1 வது பதிவு .............
எனது முதலாவது பதிவுடன் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இனி நிச்சயம் உங்களை சந்திப்பேன் என்ற மகிழ்வோடு எனது முதல் பதிவுக்குள் நுழைகிறேன்..
என்னடா முதல்பதிவு பதியலாம் என்ற எண்ண அலைகளுடன் நான் மோதிக்கொண்டேன். அரசியல் போடலாமா என்றால் "ஏன்டா சாமி உயிரோடு இருக்க ஆசையில்லையா? என்று மனது சொல்வது புரிந்தது. என்ன போடலாம் போடலாம் என்று யோசித்த போது மனதில் பட்டதை எழுதுகிறேன். புரிபவர்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி. திருந்தினால் சந்தோசம்.
அன்புள்ள சில ஊடகத்துறை நண்பர்களே..........
உங்கள் நடவடிக்கைகளால் ஊடகத்துறை வெட்கித் தலை குனிகிறது. ஊடகத்துறை என்பது மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது எவ்வளவு அவசியமானது என்று அனைவருக்கும் தொpயும். அதேபோல ஊடகத்துறை மூலம் இப்போது இலகுவாக பிரபல்யம் அடைந்திடலாம். இதை பயன்படுத்தி இடம்பெறும் சில சம்பவங்களால் மனம் வேதனை அடைகிறது. நான் ஊடகத்துறையை நேசிப்பவன் என்பதாலேயே என் முதல் பதிவில் இடுகிறேன். ஊடகத்துறை என்பது தற்போதைய காலகட்டத்தில் இலங்கையை பொறுத்தவரையில் மிக ஆபத்தான காலகட்டம் தான். எனினும் ஊடகத்துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. ஊடகங்கள் என்றால் என்ன? ஊடகங்களின் பங்களிப்பு என்ன? என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் கருத்துகளை முன் வைப்பர். இருப்பினும் இதை பற்றிய விடயங்களை வேறொரு பதிவில் இடுகிறேன்.
எனது பதிவில் இட வந்த விடயத்துக்கு வருகிறேன். நான் தொpவிக்கும் கருத்து ஊடகங்களுக்குள் இருக்கும் சில நன்நடத்தை இல்லாதவர்களுக்காக மட்டும் தான்.
நல்ல ஊடகத்துறை நண்பர்களும் நம் இடையே உள்ளார்கள். நான் தொவிக்கும் கருத்தால் அவர்கள் மனது வருத்தமடைந்தால் மன்னிக்கவும்.
ஆம்.
இலகுவாக பிரபல்யம் அடையலாம் என்று எண்ணி ஊடகங்களுக்கு நுழைய காத்திருக்கும் ஆண்களும் பெண்களும் பல பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். அதிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்பல. குறிப்பாக தனியார் வானோலிகள் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனங்களில் சந்தர்ப்பம் பெற்று தருவதாக இடம் பெறும் மோசடிகள் பல. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். இதில் படுமோசமான விடயம் சில பெண்கள் தமது வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. இவ்வாறு பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
Abdul Hameed போன்ற தலை சிறந்த அறிவிப்பாளர்களை தந்த இலங்கைத் திருநாட்டில் உங்களை போன்றவர்களும் வாழ்வதில் மிகவும் கவலையாக இருக்கிறது. எனவே அன்புள்ள நண்பர்களே இனிமேலோவது தங்கள் செயல்களில் நல்ல நல்ல மாற்றங்களை கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு முதல் பதிவில் இருந்து விடை பெறுகிறேன்.
No comments:
Post a Comment