நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Wednesday, April 28, 2010

BATTLE OF THE HINDUS 2010

யாழ்ப்பாணத்தின் பெருமைகளினதும் பெறுபேறுகளினதும் பெரும் பங்காளிகளான நூற்றாண்டுப்புகழ் கொண்ட இரு கல்லூரிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரிகள் மோதிக்கொள்ளும் BATTLE OF THE HINDUS 2010 என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போர் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மாபெரும் கிரிக்கெட் சமர் யாழ்ப்பாணத்தின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மகுடமாக விளங்கும் வகையில் இரண்டே ஆண்டுகளில் பெரும் வரவேற்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே மேலும்
புதுபொலிவுடன் மூன்றாவது முறையாக இம்முறை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்களுக்கு   BATTLE OF THE HINDUS 2010 காத்திருக்கிறது .
2010 ஆம் ஆண்டிலேயே கொக்குவில் இந்துக்கல்லூரி தனது நூறாவது ஆண்டிலேயே காலடி எடுத்து வைத்திருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கம் நூறாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ள இத்தருணமானது இரு கல்லூரிகளையும் பொறுத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்படவேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2010 ஆம் ஆண்டுக்கான 3 ஆவது வருடாந்த BATTLE OF THE HINDUS 2010 கிரிக்கெட் சமரானது யாழ் கிரிக்கெட் வரலாற்றில் மீண்டுமொரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 
இதே நேரம் BATTLE OF THE HINDUS 2010 ஆனது கொக்குவில் இந்துக்கல்லூரியின் விஸ்தரிக்கப்பட்ட மைதானத்தில் புதிய ஆடுகளத்தில் இப்போட்டி இடம் பெற இருக்கின்றமை மேலும் போட்டி பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் தூண்டியுள்ளது. அத்தோடு ஐக்கிய சூழலில் நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் பல பழையமாணவர்கள் போட்டியை கண்டுகளிக்க வருகைதருவார்கள் என்பதால் கொக்குவில் இந்துக்கல்லூரி நிர்வாகம் மைதான விரிவாக்கம், பவிலியன் விஸ்தரிப்பு போன்ற பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்துகள் சமரானது 2008 ம் ஆண்டு முதல் முறையாக இரு கல்லூரிகளுக்கும் இடையே கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது. இதில் இரு கல்லூரி வீரர்களும் தமது திறமையை முழுமையாக வெளிபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2009ம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றிருந்த போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.
இதே வேளை கொக்குவில் இந்து கல்லூரி அணியினர் இவ்வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை அணிகளுகிடையான கிரிக்கெட் தொடரின் 3வது பிரிவில் கால் இறுதிவரை முன்னேறி இருந்தனர் அதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினரும் இத்தொடரில் பல அபாரவெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எனவே இந்த 2010 ஆம் ஆண்டிற்கான BATTLE OF THE HINDUS 2010 பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது கிரிக்கெட் அவதானிகளின் எதிர்பார்ப்பாகும். BATTLE OF THE HINDUS 2010 கிரிக்கெட் போட்டிக்கு கொக்குவில் இந்து கல்லூரி அணி சார்பாக கே.நிரோஜன் உம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சார்பாக எஸ். நிருஜனும் தலைமை தாங்கிறார்கள்.

Monday, April 12, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 யாழ் மாவட்டம்......

நடந்து முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை கட்சிகளும் போட்டியிட்டன. எவ்வளவு கட்சிகள்??? முடியல சாமி. மொத்தத்தில் 27 கட்சிகள். கிட்டத்தட்ட 324 வேட்பாளர்கள். உண்மையில் இது தேவைதானா??? தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்த 9 அல்லது 10 வேட்பாளர்களே பாரளுமன்றம் செல்லமுடியும். எனவே அவ்வாறு செல்பவர்களை மிக கூடுதலான வாக்குகளை போட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அனுப்புவதை விடுத்து சுயேட்சை கட்சிகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தது தான் மிச்சம். எப்பதான் நம்ம ஆட்கள் திருந்தப் போறார்களோ தெரியவில்லை. தமிழ் மக்கள் தமிழ் மக்களால் தான் அழியினம் எண்டதுக்கு சிறந்த உதாரணம் இதுதான். இனியாவது திருந்துங்க ஐயா திருந்துங்க.  !!!!!      (பணம் எண்டா பிணமும் வாய் திறக்குமாம். மனுசங்க நாங்க திறக்கமாட்டமா! என்ன விளங்குதா??? )
அன்புள்ள தமிழ் மக்களே!!!
வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் அத்தியாய கடமை. ஒவ்வொருவரினதும் உரிமை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இப் பாரளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் 18 வீதமே வாக்களித்துள்ளனர். உண்மையில் இது வருத்தப்பட கூடிய விடயம். நம் மக்கள் கடந்த ஒரு தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் இவ்வளவு பிரச்சனையும். இனியாவது விழப்படைந்து வாக்களித்திருக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எமது ஏக பிரதிநிதி இவர்தான் என்று தெரிவு செய்து எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.( யாரை ஐயா நாங்க நம்பிறது என்டு நீங்க புலம்புவது விளங்கிறது என்ன செய்ய எல்லாம் நம்ம விதி.)  

போட்டியிட்ட 15 அரசியல் கட்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே ஆசனங்களை பெற முடிந்தது. மீதி அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தளவு வாக்குகளை பெறமுடியவில்லை. போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்கள் 5 வீத வாக்குகளை கூட பெறமுடியவில்லை பாவம். ( நான் நினைக்கிறேன் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் வாக்களித்திருப்பார்கள் என்டு) இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தேர்தலிலும் காட்டியிருக்கிறார்கள். அன்புள்ள இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களே  இனியாவது ஒற்றுமையாக இருங்க. இனியாவது யோசிச்சு செயற்படுங்க. உங்கள் கட்சிக்குள்ளே கழுத்தறுப்பு போட்டி என பல பிரச்சனைகளாம். இனியாவது கட்சியை கொஞ்சம் காப்பாற்ற யோசிங்க. ஒற்றுமையாக இருங்க.
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா 20 501 விருப்பு வாக்குகளுடனும் சுரேஸ் பிரேமச்சந்திரன் 16 425 விருப்பு வாக்குகளுடனும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி 15 311 விருப்பு வாக்குகளுடனும் ஈஸ்வரபாதம் சரவணபவன் 14 961 விருப்பு வாக்குகளுடனும் சிவஞானம் சிறிதரன் 10 057 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் டக்ளஸ் தேவானந்தா 28 585 விருப்பு வாக்குகளுடனும் சில்வேஸ்திரி அலென்ரின் 13 128 விருப்பு வாக்குகளுடனும் சந்திரகுமார் முருகேசு 8 105 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக விஜயகலா மகேஸ்வரன் 7 160 விருப்பு வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமாக யாழ் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்த 9 பேர் பாரளுமன்றத்துக்கு செல்கின்றனர்.

இம்முறை    டக்ளஸ் தேவானந்தா மாவை சேனாதிராஜா  சுரேஸ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரைத் தவிர மிகுதி அனைவரும் புதியவர்கள். அதில் விசேடமாக மக்களுக்காக வேவையாற்றி உயிரை நீத்த தியாகராஜா மகேஸ்வரனின் பாரியார்  விஜயகலா மகேஸ்வரன் பாரளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இனியாவது ஒற்றுமையுடன் சோந்து நின்று மக்களுக்காக சேவையாற்றுவீர்கள் என்று நினைக்கிறேன். இனியும் நம் மக்களை ஏமாற்றிவிடாதீhகள். பாவம் நம் மக்கள். பல இடத்தில் ஏமாந்து போய் நிற்கிறார்கள். இடம்பெயர்வு முகாம் வாழ்வு என்றெல்லாம் பல இடங்களில் துன்பம். எனவே இனியாவது நம் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.........

Sunday, April 4, 2010

பாதையை விட்டு போதையை பிடிக்காதீர்..............

நிறைய நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் பதிவுக்குள் கவனம் செலுத்த முடியவில்லை. எனினும் இப்பதிவு கட்டாயம் இட வேண்டிய சூழ்நிலை காரணமாக நேரம் ஓதுக்கி என் பதிவுக்குள் வருகிறேன்.

என்ன தலையங்கத்தை பார்த்து விட்டு கடுமையாக யோசிக்கிறியளோ!!! பாதையை விட்டு போதையை பிடிக்காதீர் என்ற தலையங்கத்தில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. பாதையை விடுத்து போதையை பிடிக்காதீர் என்ற தலையங்கமே இட காரணமே நம்ம மதம் படும்பாடு பற்றி சொல்ல வேண்டுமே என்ற ஆதங்கம் தான். ஏன் இந்து மதத்தில் மட்டும் தான் இப்படி? இந்து மதம் ஓழுங்காக போதனைகளை வழங்கவில்லையா? நிறைய தெய்வங்கள் இருப்பதாலோ தெரியவில்லை? நான் அறிந்தவரை வேறு மதத்தில் இவ்வாறு கேள்விப்படவில்லை.
இந்துமதம் வாழ்க்கையை சிறந்ததாக கொண்டு செல்ல போதனைகளை வழங்கவில்லையா?? ஏன் இவ்வாறான சாமியார்களை நம்பி செல்கிறார்கள்? இவ்வாறான போலிச்சாமியார்கள் நாள்தோறும் அகப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம்ம மக்கள்தான் திருந்தின பாடில்லை.
எனினும் விசயத்துக்கு வருவம். இவ்வாறான சாமியார்களோ? துறவிகளோ? எப்படி இவ்வாறு பிரபல்யம் அடைகிறார்கள்? என்னதான் இவர்களின் பின்ணணி வாழ்க்கைக்கு இருண்டதாக இருந்தாலும் அவர்கள் சொல்ல வந்த விடயங்கள் என்னை பொறுத்தவரைக்கும் வரவேற்க கூடியவைதான். அண்மையில் நம்மவர்களிடையே சிக்கிய போலியாக இனங்காணப்பட்டவர் நித்தியானந்த சுவாமி. காமம் என்ற போர்வைக்குள் சிக்குண்டு தன்னை போலியானவர் என்று காட்டியுள்ளார். உண்மையில் போலிச்சாமியார்கள் அனைவருமே கூடுதலாக காமம் என்ற நிலை மூலமே அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். நித்தியானந்த சவாமி சம்மந்தமான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டது. இவரும் இப்படியா?? எனினும் அவர் நமக்கு கூறிய நல்ல விடயங்களை நம்மால் மறக்கமுடியாது.
நித்தியானந்தரின் அறிவுரையில் இருந்து நான் படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன் படித்துபாருங்களேன்..


ரோஜாவின் அழகுக்கு ஆசைப்படுகிறிர்களா???

அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.
அரவணைப்புக்கு ஆசைப்படுகிறீர்களா??....
சிறு அடிக்கும் பெரும் அதட்டலுக்கும் கூடத் தயாராக இருக்க வேண்டும்.
தயாராக இருக்கிறீர்களா?... சிந்தியுங்கள்.
காதலர்களுக்கு
'காதல் காலம்"
எப்போதுமே இனிக்க காரணம்
அந்த காலங்களில்
ரோஜாவின் முட்கள்
இதயத்தை குத்துவதில்லை.
சிவப்பு ரோஜா வெள்ளை ரோஜாவைப் பார்த்து மயங்கியும்
வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவைப் பார்த்து மயங்கியும்
இருப்பது மனசுக்கு இதமாகத்தான் இருக்கும்.


எந்த உறவும் முதலில் இனிக்க இதுதான் காரணம்.
முள் குத்தும்போதுதான் மயக்கம் தெளிகிறது.
நம்மவரின் சில கெட்ட குணங்கள் தெரியும் போதுதான்.... இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது.
மனதிலிருந்து துக்கம் சொட்டு சொட்டாய் கசிகிறது.
ரோஜாவை நேசித்த நீங்கள் அதன் முட்களை மட்டும் வெறுத்தால் எப்படி???
முள்ளில்லாத ரோஜா உலகில் இல்லை. நீங்களும் முட்களுள்ள ஒரு ரோஜா தானே..
ரோஜாவை முட்களோடு நேசியுங்கள்.
அதுதான் ரோஜாவுக்கு நீங்கள் தரும் மரியாதை.



இது நித்தியானந்த சுவாமியின் அறிவுரையில் நான் படித்ததில் பிடித்ததை உங்களோடு பகிர்ந்துள்ளேன். பாருங்களேன் எவ்வளவு இலகுவாக அனைவருக்கும் விளங்க கூடிய வகையில் தனது சொல்லியிருக்கிறார். ஆனால் காமம் என்ற வலையில் சிக்கி தனது நல்ல பெயரை கெடுத்துவிட்டார். எனினும் உலகில் ஆசையில்லாத மனிதர்கள் இருக்கிறார்களா? அந்த கடவுளுக்கே ஆசையிருக்கிறது. ஏன் இந்த நித்தியானந்தர் மட்டும் என்ன விதிவிலக்கா???? அனைவரும் ஆறறிவு உள்ள மனிதர்கள் தான். ஆனால் அவர் தனது சிந்தனையை கூற எமது மதத்தை பயன்படுத்திய விதம்தான் பிழை என்று கூறமுடியும். நல்ல சிந்தனைகளை கூறினாலும் ஒருவிதத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.
எனினும் அவர் கூறிய விடயங்கள் சிறந்தவையாக இருக்கிறது. பொதுவாக கடவுளின் அவதாரங்கள் என்று பக்தர்களால் அழைக்கப்படுவாகள் பலர் இருக்கிறார்கள். அவாகளின் படங்களை வீட்டில் பெரிதாக மாட்டி நாம் அவர்களின் பக்தர்கள் என்று கூறுவதிலே ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களின் சிந்தனையை பாருங்கள். அவர்கள் கூறிய விடயங்களை பாருங்கள். அதை நம் வாழ்வில் கடைபிடிக்க பாருங்கள். நம் வாழ்வாவது மேம்படும். சும்மா வெட்டி பேச்சு பேசுவதில் பயனில்லை.
பாதையை விட்டுவிட்டு போதையை பிடிக்காதீர் அவர்களட காட்டிய பாதையை பாருங்கள். வாழ்வு மேம்படும்.