நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Friday, December 30, 2011

2011 GOOD BYE

2011 ஆம் ஆண்டு முடிவடைந்து 2012 பிரவேசிக்க காத்து இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கிறது. பார்ப்பம் என்ன மாதிரி அமையப்போகுது என்று..??
2011 உண்மையில் பல ஏற்றங்கள் அதைவிட எதிர்பார்காத ஏமாற்றங்கள். கடந்து செல்லும் ஆண்டு எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு படிப்பினையை தந்ததிருந்தது. இந்த வருடம் தை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பமாகியிருந்தது. தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை யாழ்ப்பாணம் கட்டிடவியல் திணைக்களத்தில் கள பயிற்சிக்காக பணியாற்றியமை ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். பயிற்சியில் நிறைய படிப்பினைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என நிறையவே தந்திருந்தன. அனைத்தும் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள். எனது பாதையில் எனக்கான பாதையில் ஒரு தைரியத்தை தந்திருந்தன.





அதைவிட சென்ற வருடம் நிறைய சந்தோசங்களை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மிக முக்கிய விடயம் என்றால் 2 வது  அண்ணாவின் திருமணம் மற்றும் 1 வது அண்ணாவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம், அப்பாவின் பதவிஉயர்வு என நிறையவே சந்தோசங்களை தந்திருந்தன. இரண்டு நிகழ்வுகளும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். அண்ணாவின் திருமணம் நிறைய சந்தோசத்தை தந்திருந்ததுடன் உறவுகளின் சின்ன உதைப்பை தருவதிலும் அந் நிகழ்வு குறைந்து விடவில்லை. எனினும் அண்ணாவின் திருமணம் மூலம் எமக்கான மிகத் தெளிவான பயணத்தை காட்டி இருக்கிறது என்றால் மிகையாகது.
அப்பம்மாவின் மரணம் சென்ற ஆண்டு அனைவரையும் கலங்க வைத்தது. அதைவிட வாழ்க்கையில் இன்னுமொரு இழப்பு சென்ற ஆண்டு தந்து விட்டு செல்லுகிறது என்றால் மிகையில்லை. இன்னும் வலிக்கிறது. என்றுதான் புரியுமோ?? அவ்விழப்பு மனிதர்கள் எப்படி என்று காட்டியது. இன்னும் ஏமாளியாக இருக்காதே?? என தெளிவு படுத்தியது.

hp://www.youtube.com/watch?v=JGkTI0fdGXA&feattture=share

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு அனுபவமாக இருந்தது நான் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் அறிவிப்பு செய்ய கிடைத்த சந்தர்ப்பம் தான். எனது வாழ்க்கையில் எதிர்பார்க்காத சந்தர்ப்பம்.
சந்தோசமான மொக்கை நிகழ்வுகள் பல நடந்துள்ளன. பதிவர்களோடு கிரிக்கெட் விளையாடியது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நண்பர்களுடன் மலையகத்துக்கு ஒரு சுற்றுலா என பல நிகழ்வுகள்.
2011 சொல்லிச் சென்ற படிப்பினைகள் பல
     -உறவுகளை விட நண்பர்கள் மேல்....
     - உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய். வேறு எவனுக்கும் பயப்பிடாதே.
     -என்றும் கூட இருப்பது சகோதரர்களும் நண்பர்களும் தான்.

2011 சினிமா நான் பார்த்ததில் சிறந்தவை
 படங்கள் - தெய்வதிருமகள்  , எங்கேயும் எப்போதும் , கோ
 நடிகர் - விக்ரம்
 நடிகை- அஞ்சலி ,   ரிச்சா
 நகைச்சுவை நடிகர் -  சந்தானம்
 இயக்குனர் - விஐய்
 இசைமைப்பாளர்- ஜி.வி பிரகாஷ்
 பாடல் -காதல் என் காதல் அது ( மயக்கம் என்ன)


அரசியல்  ஐயோ வேண்டாம் ஐயா வீண் வம்பு.

2011 மிகவும் சந்தோசமான வருடம் தான். சில உறவுகளை மேலும் வளர்த்திருக்கிறது. நட்புகள் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. என்னை யார் என்று உணாத்தியிருக்கிறது.
2012 ஆம் ஆண்டை சந்தோசமாக வரவேற்போம். 2012 ஆம் ஆண்டும் சந்தோசமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
 

2 comments:

Mohamed Faaique said...

வாழ்த்துக்களும் அனுதாபங்களும்...

Mohamed Faaique said...

Please remove Word Varification

Post a Comment