நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Monday, November 30, 2009


காதலி
மணமாகிப்போனால்
காதலனின் உறவு
முட்டாள்தனமாய்!


வசதி இல்லாதவர்களின்
உறவு
வசதியானவர்களுக்கு
பைத்தியக்காரத்தனமாய்!


தடுக்கி விழுந்த
நண்பனின் உறவு
ஓடி ஜெயித்தவர்களுக்கு
உதவாக்கரையாய்!


அதிர்ஷ்டக்கார மகளின் உறவு
விதவையான பின்பு
எதிரில் வந்தால்
சகுனத் தடங்கலாய்!


அண்ணன் தம்பி உறவு
வரப்புத் தகராறில்
வன்முறையாய்!


செல்ல மகனின் உறவு
முதியோர் இல்லத்தில்
பெற்றோருக்குக் கதைகளாய்!


தாய் தந்தை உறவு
அரவாணிக்கு
ரயில் கானங்களாய்!


தெரியவில்லை
எதனால்
தீர்மானிக்கப்படுகி‎ன்றன
உறவுகள்......!






அதுவும் இதுவும்

அது என்னவென்று
இதைக் கேட்கிறேன்

இது என்னவென்று
அதைக் கேட்கிறேன்

அதை அதனிடமும்
இதை இதனிடமும்
கேட்டறியும் துப்பு
வாய்க்கவில்லை இன்னும்
ஆயினும்

அது இதுவாகவும்
இது அதுவாகவும்
ஆகிடும் தருணம்
இருக்கவும்கூடும்
எது எதுவாயினும்

அதுவே அது!
இதுவே இது!

Wednesday, November 25, 2009

OUR SCHOOL DAYS........


விடியல் பொழுதில் திறக்கும்சொர்க்க வாசலைப் போல,
கல்லூரி வாசல் நோக்கி,
ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள்நானும் அடக்கம்..

முதல் நாள்,

முதல் வகுப்பேதாமதமாய் நுழைந்த ஞாபகம்,
பரிச்சயம் இல்லாத முகங்கள்,
இருக்கை தேடி,அறிமுகம் நாடிபிள்ளையார் சுழி போட்ட,
முதல் கல்லூரி நட்பு,இன்றும் தொடரும் இன்ப இன்னல்...
இடைவெளியின்றி,
ஒவ்வொரு இடைவேளையும்அடித்த லூட்டி,
கண்ணைச் சொருகும்,

வகுப்பு நேரங்களில்,

குறும்புடன் படித்ததுண்டு சீட்டு பாடங்கள்,
ஒரே நிற ஆடை அணிந்த நாட்களில்,
ஓயாமல் ஒட்டிய ஞாபகங்கள்,
வெள்ளை சேட்டில்தேநீர் கறையாகிய நினைவுகள்,
பரிட்சை நேரங்களில்படிக்க மறந்த பாடங்களும்,
பிட் அடிப்பதற்கு எடுத்துச் சென்றஎண்ணற்ற
பேப்பர்களும்தேர்வு
முடிவு முன் தோன்றும் திகிலும்,
பின் தோன்றிய வேதாந்தமும்,
விடுமுறை நாட்களில்மஞ்சவனப்பதி வீதியில்
விளையாடியகிரிக்கெட்டும் சண்டைகளும்தேடிய விழிகளுக்கு கிடைத்தபார்வை பரிசுகள்,

எத்தனை முறை கேட்டாலும்புத்தியில் ஏறாத,
ஆசிரியரின் கடுஞ்சொர்க்களும் பாடங்களும்,
ஒன்றாய் உணவருந்திய உல்லாசங்களும்,
அன்பு,நட்பு,கோபம்ஊடல்,கூடல்,பிரிவுமௌனம்,வலி,
குறும்புஎன்றுமரக்கிளை முளைத்த இலைகளை போல,
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமாய்,
ஆயிரம் கோடி நினைவுகள்,என்றாலும்..
ஒரு துளி கண்ணீரால்,முற்றுப்புள்ளி வைக்கலாம்,
கல்லூரி வாழ்க்கைக்கும்,இந்த கவிதைக்கும்,
என் நினைவுகளுக்கு அல்ல..