இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.
கலந்து களித்த நாட்களை
களவாடிப் போனது யார்?
களைத்து போனேனடி சகியே...
அன்று உன்னோடு அத்வைதமான
அந்த நல்ல நாட்களை - இன்று
அழித்தெறிந்து போனது யார்?
என் கோபுரக் கனவுகளை
கொல்லியிட்டு
இன்னொரு இதயம் தொட்டு நிற்பவளே.
கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.
கொடிநடையாய் என் நினைவுகளை
போகவிடு
என்னை மறக்கவிடு........