எனக்கு கடுப்பு இந்த ஊடகம் என்று சொல்லும் மூஞ்சி பக்கத்தில் தான். ஒருவரை புகழ வேண்டும் என்பதற்காக ஒருவரை குறை கூற கூடாது. இவர்கள் எல்லாம்.............
அன்புள்ள இந்த பக்கத்தின் உரிமையாளரே..
உங்கள் நோக்கங்கள் அறிந்தோம். உங்கள் நடவடிக்கைகள் நாம் அறிவோம். என் பார்வைக்கு நீங்கள் உங்கள் பாதையில் இருந்து சற்று விலகுவதாக தோன்றுது.
உங்கள் நோக்கம் - எமது இந்த தளத்தினது ஒரே நோக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய நிகழ்வுகளையும்
யாழ் மண்ணின் நிகழ்வுகளையும் சங்கமிக்கவைப்பதே..அது தவிர வேறு எந்த குறுகிய எண்ணமும் இல்லை...பல்வேறு நாடுகளில் வசிக்கும் எங்கள் உறவுகளே உங்கள் நிகழ்வுகளை காட்சிப்படுத்த முன்வாருங்கள்...வேற்றுமைகள் பேதங்களைக் களைவோம் தமிழராய் ஒன்றிணைவோம்... ( உங்கள் பக்கத்தில் இருந்து )
இப்படியாக இருக்கும் நீங்கள் ...
"இன்று முளைத்த காளான்கள் சரியான தமிழ் உச்சரிக்கக் கூட முடியாதவர்கள் இன்று மேகாபிளாஸ்ற் வைக்கினமாம். "
நானும் லோஷன் அண்ணா ரசிகன் தான். அதற்காக இவ்வாறு இந்த பக்கத்தில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் என்றும் தனி ஸ்டைல். வெற்றி தனி ஸ்டைல். உங்கள் விளம்பரத்துக்காக இதில் தேவை இல்லாத கதை வேண்டாம். ஒருவரும் இங்கே இருந்த போது ஒன்றுமே செய்தது இல்லை.புலம்பெயர்ந்த நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தால் உங்கள் கிரமாத்தை வளருங்கள். இதில் சும்மா கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஊடகத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் ஊடகத்தை வளர்ப்பார்கள். நீங்கள் ஒன்றும் பண்ண தேவை இல்லை . குத்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒரு ஊடகமாக இருங்கள். ஊடக தர்மம் தெரியும் என்று நம்புறன்.
புலம்பெயர்ந்து சென்று விட்டு எங்கள் மண் என்று கத்துவதில் பயனில்லை. அனைவருக்கும் நாட்டு நிலமை தெரியும். கையில் பேனா கிடைத்தவுடன் எதுவம் எழுதலாம் என்று நினைத்துவிடாதையுங்கோ????