ஒருமாதிரி இன்னொரு பதிவு இடவேண்டும் என்ற ஆசை நிறைவேறுது எண்டு சொல்லலாம். கிட்டத்தட்ட 4மாதங்களுக்கு பிறகு அடுத்த பதிவு. பதிவு இடத்தான் நேரம் இல்லை என்றாலும் அனைத்துப்பதிவர்களின் பதிவுகளையும் வாசிக்கிறம் என்பதையே பெருமையா சொல்லலாம் தானே....
சரி விசயத்துக்கு வருவம். நான் நேற்று பார்த்த விசயம். காசி பற்றிய விசயங்கள்;. பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வியக்க வைத்தன எண்டுதான் சொல்லணும். இந்துக்களை பொறுத்த வரையில் சிவனின் இடமாகத்தான் கொள்ளப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் காசி என்பது புனிதமான மயானம் எண்டு சொல்லலாம். இங்கு காசியில் அதிகமாக முனிவர்களும் சித்தர்களும் தான் எங்கு பார்த்தாலும் இருப்பார்கள். காசியை சுத்தி கங்கை நதி செல்கிறது. காசியில் கொண்டு வந்து எரிக்கப்படும் பிணங்களுக்கு மறுபிறவி என்பது இல்லையாம். நேரே முக்தி என்ற நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 1000 பிணங்கள் எரிக்கப்படுகிறதாம். 24 மணிநேரமும் பிணங்கள் எரிந்துகொண்டே இருக்கும். அதிலும் அகோரிகள் எனப்படுவோர் பிணங்கள் எரிந்து கொண்டு இருக்கும் போது அவற்றை எடுத்து உடனேயே சாப்பிடுகின்றனர் என்பது வித்தியாசமாகவே இருந்தது.
பிணங்களை கொண்டு வந்து பல முறைகளில் அடக்கம் செய்கின்றனர். அக்னி சமாதி, ஜல சமாதி என பலமுறைகளைச் சொல்லலாம். அதிலும் ஜல சமாதியும் இன்னும் வித்தியாசமானது. கொண்டுவரும் பிணங்களை நன்றாக கயிற்றால் சுற்றி கட்டி பெரிய கல்லை ஒன்றையும் சேர்த்து கட்டி படகு மூலம் ஆழ்கடல் வரை சென்று ஆழ்கடலில் வீசி விடுகின்றனர். ஜலசமாதியின் முக்கியத்துவமே இன்னொரு பிறப்பு இல்லை என்பதே. ஆழ்கடலில் வீசிவிடப்படும் பிணங்களை மீன் மற்றும் வேறு கடல்வாழ் உயிரினங்கள் சாப்பிட்டு கட்டப்பட்ட கயிறுகள் எல்லாம் அரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களின் பின் கடல் மேல் மிதந்து பிணங்கள் கரைசேருமாம். கரை சேரும் பிணங்களை நாய், கரடி போன்ற விலங்குகளுக்கு இரையாகின்றன. மிகுதி ஆங்காங்கே எலும்புகளும் தோலுகளுமாக கரையிலே இருக்குமாம். இக் ஜலசமாதியில் படகு செலுத்துவர்களும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தானாம். வேறு எவரும் செய்யமுடியாது. அதுபோல ஜலசமாதியில் தற்கொலை செய்தவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் ,கற்பிணிபெண்கள் ,விபத்தில் இறந்தவர்கள் என்போர்களின் பிணங்கள் மட்டுமே வீசப்படுமாம்.
இப்படி வித்தியாசமான காசியிலே சுத்தம் சுகாதாரம் என்ன ஆகும்? என்ற கேள்விதான் அனைவரையும் ஆட்கொள்ளும் என்பது தெளிவானது. புனிதமான கங்கை நீரில் வீசப்படும் பிணங்களால் நீர் அசுத்தமாகாதா?? அதற்கான அவர்களது விளக்கம் நீர் எப்போதும் அசுத்தமாகாது. அசுத்தத்தை நாம் நீரால்தான் கழுவுகிறோம். ஆனபடியால் நீர் அசுத்தமாகாதாம். இவ்விளக்கம் எவ்வளவுக்கு உண்மையானது என்பது தெரியாது. உண்மை என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அங்கு மக்கள் இந் நீரையே குடிதேவைக்கு இவ்வளவு காலமும் பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்கமுடியாது. அவர்களுக்கு இந் நீரால் ஒருபிரச்சனையும் ஏற்படவில்லை.
உண்மையில் காசி ஒரு புரியாத புதிராகவே எனக்குபடுகிறது.