என்ன தலைப்பை பார்த்து யோசிக்கிறீர்களோ? என்னடா இது என்று? ஆனால் யோசிச்சு பார்க்க வேண்டிய விடயம் என்பதால் புன்னகையில் புன்னகைக்கிறது. காதல், காமம் இரண்டுக்கும் இன்றைய காலகட்டத்தில் வித்தியாசம் இருக்கா? அல்லது காதலுக்காக காமமா?? காமமத்துக்காக காதலா? என்று சிலவேளைகளில் சிந்திக்க தோன்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது சகஐமாகி விட்டது. எந்த வயதிலும் காதல். எவரும் காதல். எங்கும் காதல். எதிலும் காதல் என்றாகி விட்டது. ஆனால் ஜெயிக்கும் காதல் ஒரு சிலவே. உண்மைக் காதல். புனிதமான காதல் ஜோடிகளையும் கண்டு இருக்கிறோம்.
ஆனால் இன்று சிலபேர் காமப்பசியை தீர்க்க காதல் என்ற பாதையை தெரிந்தெடுத்திருப்பது தான் மிகவும் கவலையாக இருக்கு. இப்ப சிலபேருக்கு வயது வரம்பின்றி காமலீலைகளில் ஈடுபடுவதும், ஈடுபட தூண்டுவதும் சகஐமாகி விட்டது. என்ன செய்ய??? நம்ம நாடும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதோ?? அல்லது நம்ம தமிழ் மக்கள் கட்டி காத்த கலாச்சாரம் எங்கு செல்கிறது என்று வருந்துவதோ தெரியவில்லை.
இதிலே சில இளம் வயதினர்தான் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுவது மிகவும் மனம் வருந்துற செயல் பாருங்கோ??
காதலா?, காமமா? ,அல்லது ஒருவர் மீது ஏற்படும் ஒரு வித ஈர்ப்போ??, இவற்றை பிரித்து அடையாளம் காண தெரியாதவர்களே இவ்வாறான பிரச்சனையில் சிக்குகிறார்கள் என்பதில் ஐயமில்லை. சின்ன வயதில் ஏற்படுவது காதல் என்று சொல்லலாமா? 4 வருட கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்டு 4 வது வருடத்திலே காணாமற் போவதை காதல் என்பதா?? அல்லது தவறிய அழைப்புகள் மூலம் காதலாகி தவறுவதை காதல் என்பதா? பேஸ்புக் மூலம் ஏற்படும் காதலை காதல் என்பதா? உண்மையில் தெரியவில்லை. காதல் ஜோடிகளுக்கு இடையில் இருக்கும் நல்ல புரிந்துணர்வே சிறந்த காதலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவன் தனது வாழ்க்கைப் பாதையை தீர்மானித்த பிறகு ஏற்படும் காதல் சிறந்ததாக இருக்கும் என் நான் நம்புகிறேன்.
காதல் ஒரு அழகான விடயம். காதலையும் காமமத்தையும் இணைக்காதீர்கள். காமப்பசியை தீர்க்க காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்.
" காதல் கூடாது என்று சொல்ல அது கெட்ட செயல் ஒன்றும் இல்லை"
அன்புள்ள காதலர்களுக்கு இனிய காதலர்;தின வாழ்த்துக்கள்.
அனைவரது காதலும் வெற்றியில் முடிய புன்னகையின் புன்னகையான வாழ்த்துக்கள்