தை பிறந்தால் வழி பிறக்கும் எண்டு சொல்லுவாங்க. பார்ப்பம் இண்டைக்கு தை பிறந்திருக்கு. இனியாவது நம்மளுக்கு வழி பிறக்குமா??? எண்டு. என்னத்துக்கு என்டு கேட்கிறியளோ??? எல்லாத்துக்கும் தான். பிறந்திருக்கின்ற ஆண்டாவது எமக்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்க வேண்டியது தான்.
இப்படியே ஒவ்வொரு வருடமும் பிரார்த்தனையுடன் எமது காலம் செல்லுதுங்கோ! என்று நோவது தெரியுது. என்ன செய்யிறது பாருங்கோ! எமக்கு இப்பிடித்தான் என்று இறைவன் எழுதி வைச்சிட்டான் போல. போர் ஓஞ்சு காயங்களோ மாறாத நிலையில் இயற்கை தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. பாவம் நம்ம மக்கள். எவ்வளவு தான் அடி வாங்குவது. எழுந்து நிற்கிறவனை மாடு ஏறி மிதிச்சது போல மழை வாட்டி எடுத்திருக்கிறது. என்ன செய்ய?? மாறி மாறி உதவி செய்ய வேண்டியது தான். அடக் கடவுளே.. எம் மக்களை இனியாவது வாழ விடப்பா?? எத்தனை முறைதான் எவ்வளவு பேரிடம் அடி வாங்குவது. கடவுளே.. இப்ப நீயும் அவங்க கூட்டணி போல அதுதான் நீயும் இயற்கை மூலம் நியும் அடிக்கிறாய்!!! கடவுளே நிறுத்து...இனியாவது எங்களை நிம்மதியா வாழவிடு... பிறந்திருக்கின்ற ஆண்டிலாவது நிம்மதியும் அமைதியும் கிடைக்க வேண்டும் எண்டு பிரார்த்தியுங்கோ.....
தைப்பொங்கலுக்கு 3 பெரிய படம் ரிலுஸ் ஆகுது போல. தலயின் காவலன்
( பார்ப்பம் இனியாவது விடிவா எண்டு.. அல்லது இதுவம் மொக்கையோ தெரியலே???) தனுஸின் ஆடுகளம் ( மீண்டும் பொல்லதவன் கூட்டணி அதோட சன் பிக்ஸர்ஸ் படம் சொல்ல தேவையில்லை) நம்ம கார்த்தியின் சிறுத்தை
( மீண்டும் தம்மன்னா!!!! ஓகே ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்). பார்ப்பம் எந்த படம் பொங்குது எண்டு. இம்;முறை நம்ம பதிவர்களுக்கு பரவாயில்லை. நல்ல மொக்கைக்கு 3 படம். ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ.......
எப்படியோ நம்ம பாடும் இப்படியோ எதோ போகுது.. அனைவருக்கும் பிந்திய புது வருட வாழ்த்துக்கள். அத்தோடு தைத்திருநாள் வாழ்த்துக்கள்..
தை பிறந்தாவது நமக்கு வழி பிறக்கட்டும்.............