நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Friday, December 30, 2011

2011 GOOD BYE

2011 ஆம் ஆண்டு முடிவடைந்து 2012 பிரவேசிக்க காத்து இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கிறது. பார்ப்பம் என்ன மாதிரி அமையப்போகுது என்று..??
2011 உண்மையில் பல ஏற்றங்கள் அதைவிட எதிர்பார்காத ஏமாற்றங்கள். கடந்து செல்லும் ஆண்டு எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு படிப்பினையை தந்ததிருந்தது. இந்த வருடம் தை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பமாகியிருந்தது. தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை யாழ்ப்பாணம் கட்டிடவியல் திணைக்களத்தில் கள பயிற்சிக்காக பணியாற்றியமை ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். பயிற்சியில் நிறைய படிப்பினைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என நிறையவே தந்திருந்தன. அனைத்தும் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள். எனது பாதையில் எனக்கான பாதையில் ஒரு தைரியத்தை தந்திருந்தன.





அதைவிட சென்ற வருடம் நிறைய சந்தோசங்களை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மிக முக்கிய விடயம் என்றால் 2 வது  அண்ணாவின் திருமணம் மற்றும் 1 வது அண்ணாவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம், அப்பாவின் பதவிஉயர்வு என நிறையவே சந்தோசங்களை தந்திருந்தன. இரண்டு நிகழ்வுகளும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். அண்ணாவின் திருமணம் நிறைய சந்தோசத்தை தந்திருந்ததுடன் உறவுகளின் சின்ன உதைப்பை தருவதிலும் அந் நிகழ்வு குறைந்து விடவில்லை. எனினும் அண்ணாவின் திருமணம் மூலம் எமக்கான மிகத் தெளிவான பயணத்தை காட்டி இருக்கிறது என்றால் மிகையாகது.
அப்பம்மாவின் மரணம் சென்ற ஆண்டு அனைவரையும் கலங்க வைத்தது. அதைவிட வாழ்க்கையில் இன்னுமொரு இழப்பு சென்ற ஆண்டு தந்து விட்டு செல்லுகிறது என்றால் மிகையில்லை. இன்னும் வலிக்கிறது. என்றுதான் புரியுமோ?? அவ்விழப்பு மனிதர்கள் எப்படி என்று காட்டியது. இன்னும் ஏமாளியாக இருக்காதே?? என தெளிவு படுத்தியது.

hp://www.youtube.com/watch?v=JGkTI0fdGXA&feattture=share

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு அனுபவமாக இருந்தது நான் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் அறிவிப்பு செய்ய கிடைத்த சந்தர்ப்பம் தான். எனது வாழ்க்கையில் எதிர்பார்க்காத சந்தர்ப்பம்.
சந்தோசமான மொக்கை நிகழ்வுகள் பல நடந்துள்ளன. பதிவர்களோடு கிரிக்கெட் விளையாடியது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நண்பர்களுடன் மலையகத்துக்கு ஒரு சுற்றுலா என பல நிகழ்வுகள்.
2011 சொல்லிச் சென்ற படிப்பினைகள் பல
     -உறவுகளை விட நண்பர்கள் மேல்....
     - உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய். வேறு எவனுக்கும் பயப்பிடாதே.
     -என்றும் கூட இருப்பது சகோதரர்களும் நண்பர்களும் தான்.

2011 சினிமா நான் பார்த்ததில் சிறந்தவை
 படங்கள் - தெய்வதிருமகள்  , எங்கேயும் எப்போதும் , கோ
 நடிகர் - விக்ரம்
 நடிகை- அஞ்சலி ,   ரிச்சா
 நகைச்சுவை நடிகர் -  சந்தானம்
 இயக்குனர் - விஐய்
 இசைமைப்பாளர்- ஜி.வி பிரகாஷ்
 பாடல் -காதல் என் காதல் அது ( மயக்கம் என்ன)


அரசியல்  ஐயோ வேண்டாம் ஐயா வீண் வம்பு.

2011 மிகவும் சந்தோசமான வருடம் தான். சில உறவுகளை மேலும் வளர்த்திருக்கிறது. நட்புகள் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. என்னை யார் என்று உணாத்தியிருக்கிறது.
2012 ஆம் ஆண்டை சந்தோசமாக வரவேற்போம். 2012 ஆம் ஆண்டும் சந்தோசமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
 

Sunday, November 27, 2011

கிரிக்கெட் போட்டியும் மயக்கம் என்ன படமும்

கிரிக்கெட் போட்டி

நேற்று வலைப்பதிவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் கிடைச்சது. உண்மையில் இதை ஒழுங்குபடுத்திய அஸ்வினுக்கு நன்றிகள். மீண்டும் எனக்கு நிறைய நாட்களின் பின் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பமும் கிடைத்தது. உண்மையில் சந்தோசமாக இருந்தது. வலைப்பதிவர்கள் சேர்ந்து ஒரு பிரிவாகவும், அஸ்வின் நண்பர்கள் இன்னொரு அணியாகவும், அத்தோடு மது அண்ணாவின் ( ஐயோ இது நான் இல்லை இன்னொரு மது) நண்பர்கள் என இன்னொரு அணியாகவும் விளையாட தீர்மானித்து அணிக்கு 8 பந்து பரிமாற்றம் என தீர்மானித்து விளையாடினோம். காலநிலையும் நேற்று எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. எனினும் இடையில் மழை வந்து வெருட்டி விட்டு சென்றது.
9.30 க்கு அனைவரையும் ஒன்று கூட அழைப்பு விடப்பட்டு இருந்தது. அதே போல நேரகாலத்துக்கு எல்லாரும் வந்திருந்தாங்க. சொன்னா நம்புங்ககையா!!!! ஒரு மாதிரி எமது வலைப்பதிவு அணியில் நான், மாலவன் அண்ணா, கோபி அண்ணா, அஸ்வின், நிருஜன், கோபி, பகி அண்ணா என எமது அணி நீண்டு கொண்டே சென்றது. ஒரு மாதிரி எமது அணி 11 பேரை சேர்த்துவிட்டது. எனினும் லோசன் அண்ணாவும், மருதமூரான் அண்ணாவும் தான் தாங்கள் முதலாவதாக வரவுதாக அறிவித்ததாக கூறி இருந்ததாக கதைத்தார்கள். ஆனால்........... பகீ அண்ணாவை நாஙகள் மறக்க முடியாது. அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு உள்ளம். இடையில் குளிர்பான உதவிகளை நேரில் வந்து தந்து சென்று இருந்தார் லோசன் அண்ணா. இருவருக்கும் நன்றிகள். அனைத்துப் போட்டிகளிலும் வெல்லுவோம் என்று களமிறங்கிய எமது அணி சிறப்பாக விளையாடிய போதிலும் கிடைத்தது..........................
நேற்றைய போட்டி மூலம் வலைப்பதிவர்கள் தமக்கிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தார்கள். என்றும் வலைப்பதிவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இப்படியே சந்தோசமாக மொக்கை போட்டுட்டே இருக்கனும்................

மயக்கம் என்ன


நேற்று ஈரோஸில் மயக்கம் என்ன படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது. தனுஸ், ரிச்சா நடிப்பில் ஜிவி பிரகாஸின் இசையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி வித்தியாசமாக இருந்தது. தனுஸ் ஒரு புகைப்பிடிப்பாளர். தனக்கென்றொரு நிலையை அடைய துடிக்கும் இளைஞன். தனுஸின் தாய் தந்தை சிறுவயதிலே இறந்துவிட நண்பர்களின் அரவணைப்பிலேயே வளர்கிறான். நடிகை ரிச்சா நண்பனின் DATING GIRL ஆக அறிமுகமாகிகிறாள். அதன் பின் எப்படி தனுஸ்க்கு ஜோடி சேருகிறது என்பது தான் படத்தின் முதல் பாதி கதை. முதல்பாதியில் இருந்து மிக தெளிவாக சில விடயங்களை இயக்குனர் தெளிவுபடுத்துகிறார்.
பெண்கள் மிக தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் நாம் தான் DATING , LOVE என்று வித்தியாசம் தெரியாமல் குழப்பித் திரியிறம். தனுஸ்க்கு ஜோடியாக மாறும்போது சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி இருந்தார் இயக்குனர். படத்தின் மீதி கதையில் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் எவ்வாறு உதவுகிறாள் என்று நகருகிறது. இடையில் பைத்தியமாக மாறும் தனுஸ் நடிப்பில் ஒரு ஜே போட்டே ஆக வேண்டும். சில இடத்தில் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று புரியவே இல்லை. படத்தில் பாடல்களும் பாடல் அமைப்பும் பிரமாதம். ஓட ஓட ஓட தூரம் குறையெல்ல என்ற பாடலும் காட்சி அமைப்பும் பிரமாதம். அத்தோடு பிறைதேடும் .... என்று ஆரம்பிக்கும் மெலடி பாடலும் பிரமாதம் ஜிவி பிரகாஸ் இசை பிரமாதம். உண்மையில் மயக்கம் என்ன படம் மயக்கம் தான்..........

Monday, October 10, 2011

விருதுகளும் விம்மல்களும்………

நிறைய நாட்களின் பின் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
என்னையா??? ஓரே கவிதை வெளியீட்டு நிகழ்வுகளும் விருது வழங்கல் நிகழ்வுகளும் நிறைந்து போய்விட்டன… இது தமிழின் வளர்ச்சியா?? இல்லை வீழ்ச்சியா??? தெரியவில்லை. கடைசி 6 மாத காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுகளை பார்த்தாலே விளங்கும். இப்போது கவிதை வெளியீட்டு நிகழ்வில் விருது வழங்குவது சகஐம் ஆகிட்டு…. சும்மா சும்மா சும்மா எல்லாம் விருது கொடுக்கிறாங்கப்பா????விருது வழங்குவது நல்ல விடயம். ஆனால் அவ் விருது யாருக்கு ? யார் வழங்குவது என்பது தான் முக்கியம். விருது வழங்குவது என்பது மிகவும் எளிமையான விடயம் அல்ல. இப்படியான விடயங்களால் விருதுக்குரிய மதிப்பு குறைந்து போவதை நாம் காணமுடியும். விருதுக்குரிய மதிப்பை நாங்கள்தான் காப்பாற்றவேண்டும்.
அன்புள்ள கவிஞர்களே நீங்கள் எத்தனை கவிதை புத்தகங்களையும் வெளியிடுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் விருது கொடுக்கிறம் என்று சொல்லி விருதின் பெயரை பாழாக்கி விடாதீர்கள். விருதை பெறுபவர்களும் சற்று யோசிக்கவேண்டும்?? இவ்விருது எனக்கு ஏற்றதா?? இல்லையா?? நான் தகுதியா?? ஏன சிந்தியுங்கள். இதனால் சிலவேளை தங்கள் பெயரை தாங்களே பழுதாக்குகிறார்கள்.
இப்போது கவிதைப்புத்தகங்கள் வெளியிடுவது மலிந்து போய்விட்டது. இது கவிதைக்கு வந்த சாபக்கேடா??? அல்லது வளர்ச்சியா?? தெரியவில்லை. உண்மையில் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.
கவிஞர்களே தயவு செய்து கவிதையை பாழாக்கிவிடாதீர்கள். கவிதை என்பது ஒரு கவிஞனின் உணர்வு. உணர்வு ரசிக்கபடவேண்டுமே தவிர கடுப்பேற்றக் கூடாது………

Tuesday, June 21, 2011

காசி ஒரு புரியாத புதிர்

ஒருமாதிரி இன்னொரு பதிவு இடவேண்டும் என்ற ஆசை நிறைவேறுது எண்டு சொல்லலாம். கிட்டத்தட்ட 4மாதங்களுக்கு பிறகு அடுத்த பதிவு. பதிவு இடத்தான் நேரம் இல்லை என்றாலும் அனைத்துப்பதிவர்களின் பதிவுகளையும் வாசிக்கிறம் என்பதையே பெருமையா சொல்லலாம் தானே....


சரி விசயத்துக்கு வருவம். நான் நேற்று பார்த்த விசயம். காசி பற்றிய விசயங்கள்;. பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வியக்க வைத்தன எண்டுதான் சொல்லணும். இந்துக்களை பொறுத்த வரையில் சிவனின் இடமாகத்தான் கொள்ளப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் காசி என்பது புனிதமான மயானம் எண்டு சொல்லலாம். இங்கு காசியில் அதிகமாக முனிவர்களும் சித்தர்களும் தான் எங்கு பார்த்தாலும் இருப்பார்கள். காசியை சுத்தி கங்கை நதி செல்கிறது. காசியில் கொண்டு வந்து எரிக்கப்படும் பிணங்களுக்கு மறுபிறவி என்பது இல்லையாம். நேரே முக்தி என்ற நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 1000 பிணங்கள் எரிக்கப்படுகிறதாம். 24 மணிநேரமும் பிணங்கள் எரிந்துகொண்டே இருக்கும். அதிலும் அகோரிகள் எனப்படுவோர் பிணங்கள் எரிந்து கொண்டு இருக்கும் போது அவற்றை எடுத்து உடனேயே சாப்பிடுகின்றனர் என்பது வித்தியாசமாகவே இருந்தது.



பிணங்களை கொண்டு வந்து பல முறைகளில் அடக்கம் செய்கின்றனர். அக்னி சமாதி, ஜல சமாதி என பலமுறைகளைச் சொல்லலாம். அதிலும் ஜல சமாதியும் இன்னும் வித்தியாசமானது. கொண்டுவரும் பிணங்களை நன்றாக கயிற்றால் சுற்றி கட்டி பெரிய கல்லை ஒன்றையும் சேர்த்து கட்டி படகு மூலம் ஆழ்கடல் வரை சென்று ஆழ்கடலில் வீசி விடுகின்றனர். ஜலசமாதியின் முக்கியத்துவமே இன்னொரு பிறப்பு இல்லை என்பதே. ஆழ்கடலில் வீசிவிடப்படும் பிணங்களை மீன் மற்றும் வேறு கடல்வாழ் உயிரினங்கள் சாப்பிட்டு கட்டப்பட்ட கயிறுகள் எல்லாம் அரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களின் பின் கடல் மேல் மிதந்து பிணங்கள் கரைசேருமாம். கரை சேரும் பிணங்களை நாய், கரடி போன்ற விலங்குகளுக்கு இரையாகின்றன. மிகுதி ஆங்காங்கே எலும்புகளும் தோலுகளுமாக கரையிலே இருக்குமாம். இக் ஜலசமாதியில் படகு செலுத்துவர்களும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தானாம். வேறு எவரும் செய்யமுடியாது. அதுபோல ஜலசமாதியில் தற்கொலை செய்தவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் ,கற்பிணிபெண்கள் ,விபத்தில் இறந்தவர்கள் என்போர்களின் பிணங்கள் மட்டுமே வீசப்படுமாம்.

இப்படி வித்தியாசமான காசியிலே சுத்தம் சுகாதாரம் என்ன ஆகும்? என்ற கேள்விதான் அனைவரையும் ஆட்கொள்ளும் என்பது தெளிவானது. புனிதமான கங்கை நீரில் வீசப்படும் பிணங்களால் நீர்  அசுத்தமாகாதா?? அதற்கான அவர்களது விளக்கம் நீர் எப்போதும் அசுத்தமாகாது. அசுத்தத்தை நாம் நீரால்தான் கழுவுகிறோம். ஆனபடியால் நீர் அசுத்தமாகாதாம். இவ்விளக்கம் எவ்வளவுக்கு உண்மையானது என்பது தெரியாது. உண்மை என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அங்கு மக்கள் இந் நீரையே குடிதேவைக்கு இவ்வளவு காலமும் பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்கமுடியாது. அவர்களுக்கு இந் நீரால் ஒருபிரச்சனையும் ஏற்படவில்லை.

உண்மையில் காசி ஒரு புரியாத புதிராகவே எனக்குபடுகிறது.

Sunday, February 13, 2011

காதலா?? காமமா??

என்ன தலைப்பை பார்த்து யோசிக்கிறீர்களோ? என்னடா இது என்று? ஆனால் யோசிச்சு பார்க்க வேண்டிய விடயம் என்பதால் புன்னகையில் புன்னகைக்கிறது. காதல், காமம்  இரண்டுக்கும் இன்றைய காலகட்டத்தில் வித்தியாசம் இருக்கா? அல்லது காதலுக்காக காமமா?? காமமத்துக்காக காதலா? என்று சிலவேளைகளில் சிந்திக்க தோன்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது சகஐமாகி விட்டது. எந்த வயதிலும் காதல். எவரும் காதல். எங்கும் காதல். எதிலும் காதல் என்றாகி விட்டது. ஆனால் ஜெயிக்கும் காதல் ஒரு சிலவே. உண்மைக் காதல். புனிதமான காதல் ஜோடிகளையும் கண்டு இருக்கிறோம்.



ஆனால் இன்று சிலபேர் காமப்பசியை தீர்க்க காதல் என்ற பாதையை தெரிந்தெடுத்திருப்பது தான் மிகவும் கவலையாக இருக்கு. இப்ப சிலபேருக்கு வயது வரம்பின்றி காமலீலைகளில் ஈடுபடுவதும், ஈடுபட தூண்டுவதும் சகஐமாகி விட்டது. என்ன செய்ய??? நம்ம நாடும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதோ?? அல்லது நம்ம தமிழ் மக்கள் கட்டி காத்த கலாச்சாரம் எங்கு செல்கிறது என்று வருந்துவதோ தெரியவில்லை.
இதிலே சில இளம் வயதினர்தான் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுவது மிகவும் மனம் வருந்துற செயல் பாருங்கோ??




காதலா?, காமமா? ,அல்லது ஒருவர் மீது ஏற்படும் ஒரு வித ஈர்ப்போ??,  இவற்றை பிரித்து அடையாளம் காண தெரியாதவர்களே இவ்வாறான பிரச்சனையில் சிக்குகிறார்கள் என்பதில் ஐயமில்லை. சின்ன வயதில் ஏற்படுவது காதல் என்று சொல்லலாமா? 4 வருட கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்டு 4 வது வருடத்திலே காணாமற் போவதை காதல் என்பதா?? அல்லது தவறிய அழைப்புகள் மூலம் காதலாகி தவறுவதை காதல் என்பதா? பேஸ்புக் மூலம் ஏற்படும் காதலை காதல் என்பதா? உண்மையில் தெரியவில்லை. காதல் ஜோடிகளுக்கு இடையில் இருக்கும் நல்ல புரிந்துணர்வே சிறந்த காதலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவன் தனது வாழ்க்கைப் பாதையை தீர்மானித்த பிறகு ஏற்படும் காதல் சிறந்ததாக இருக்கும் என் நான் நம்புகிறேன்.

காதல் ஒரு அழகான விடயம். காதலையும் காமமத்தையும் இணைக்காதீர்கள். காமப்பசியை தீர்க்க காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்.
                " காதல் கூடாது என்று சொல்ல அது கெட்ட செயல் ஒன்றும் இல்லை"

அன்புள்ள காதலர்களுக்கு இனிய காதலர்;தின வாழ்த்துக்கள்.
அனைவரது காதலும் வெற்றியில் முடிய புன்னகையின் புன்னகையான வாழ்த்துக்கள்

Tuesday, February 8, 2011

என்ன கொடுமை சரவணா????

அடக் கடவுளே! ஏன் தொடர்ந்தும் இப்படி இயற்கை மூலம் நம் மக்களை கஸ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறாய்??????  எம் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும் நினைத்து விட்டான் போலும்!
மழை தொடர்ந்தும் மக்களை விட்டபாடில்லை. தொடர் மழை,  வெள்ளம். என்று மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். தொடர்ந்தும் மக்கள் பாடசாலைகள்,கோவில்கள் என்று பொது இடங்களில் தங்கி இருக்கின்றனர். எனினும் மக்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பது தொடர்ந்தும் மந்த கதியில் தான் இடம்பெறுவது யோசிக்க வேண்டிய விடயம் தான்.

இலங்கையிலே மட்டக்களப்பு மக்கள் என்ன பாவம் செய்தார்களா??? தெரியவில்லை. இயற்கை அழிவுக்கு குறைவே இல்லை. பாவம் அந்த மக்கள். அதே போல் இம்முறை வவுனியா மற்றும் அநுராதபுர மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



நிவாரண பணிகள் இடம்பெற்றாலும் மிகவும் மந்த கதிதான். தேர்தல் காலம் நெருங்குவதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசியல் தலைவர்களின் வருகைக்கும் குறைவில்லையாம். ஆனால் அவர்களும் மற்ற மக்களிடம் பிச்சை கேட்டு பொருட்களைப் பெற்று கொண்டு போய் மக்களிடம் கொடுக்கிறறார்களாம். பின் மறுநாள் பத்தரிகைகளில் பெரிய எழுத்துகளில் செய்தி. இவர் அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார் என்று. ஏன் ஐயா??? இப்படி ஒரு வேலை. இதிலும் உங்களுக்கு ஒரு ........................ விடுங்கையா.... தமிழ் சிங்கள மக்கள் என்று வேறுபாடு இன்றி அனைவரும் உதவி செய்யுங்கள்.
மழை தொடர்ந்த வண்ணமே உள்ளது. வெள்ளம் நிறைகிறது........

Saturday, January 15, 2011

தை பிறந்தால் வழி பிறக்கும்????

தை பிறந்தால் வழி பிறக்கும் எண்டு சொல்லுவாங்க. பார்ப்பம் இண்டைக்கு தை பிறந்திருக்கு. இனியாவது நம்மளுக்கு வழி பிறக்குமா??? எண்டு. என்னத்துக்கு என்டு கேட்கிறியளோ??? எல்லாத்துக்கும் தான். பிறந்திருக்கின்ற ஆண்டாவது எமக்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்க வேண்டியது தான்.


இப்படியே ஒவ்வொரு வருடமும் பிரார்த்தனையுடன் எமது காலம் செல்லுதுங்கோ! என்று நோவது தெரியுது. என்ன செய்யிறது பாருங்கோ! எமக்கு இப்பிடித்தான் என்று இறைவன் எழுதி வைச்சிட்டான் போல. போர் ஓஞ்சு காயங்களோ மாறாத நிலையில் இயற்கை தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. பாவம் நம்ம மக்கள். எவ்வளவு தான் அடி வாங்குவது. எழுந்து நிற்கிறவனை மாடு ஏறி மிதிச்சது போல மழை வாட்டி எடுத்திருக்கிறது. என்ன செய்ய?? மாறி மாறி உதவி செய்ய வேண்டியது தான். அடக் கடவுளே.. எம் மக்களை இனியாவது வாழ விடப்பா?? எத்தனை முறைதான் எவ்வளவு பேரிடம் அடி வாங்குவது. கடவுளே.. இப்ப நீயும் அவங்க கூட்டணி போல அதுதான் நீயும் இயற்கை மூலம் நியும் அடிக்கிறாய்!!! கடவுளே நிறுத்து...இனியாவது எங்களை நிம்மதியா வாழவிடு... பிறந்திருக்கின்ற ஆண்டிலாவது நிம்மதியும் அமைதியும் கிடைக்க வேண்டும் எண்டு பிரார்த்தியுங்கோ.....

தைப்பொங்கலுக்கு 3 பெரிய படம் ரிலுஸ் ஆகுது போல. தலயின் காவலன்
( பார்ப்பம் இனியாவது விடிவா எண்டு.. அல்லது இதுவம் மொக்கையோ தெரியலே???) தனுஸின் ஆடுகளம் ( மீண்டும் பொல்லதவன் கூட்டணி அதோட சன் பிக்ஸர்ஸ் படம் சொல்ல தேவையில்லை) நம்ம கார்த்தியின் சிறுத்தை
( மீண்டும் தம்மன்னா!!!! ஓகே ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்). பார்ப்பம் எந்த படம் பொங்குது எண்டு. இம்;முறை நம்ம பதிவர்களுக்கு பரவாயில்லை. நல்ல மொக்கைக்கு 3 படம். ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ.......












எப்படியோ நம்ம பாடும் இப்படியோ எதோ போகுது.. அனைவருக்கும் பிந்திய புது வருட வாழ்த்துக்கள். அத்தோடு தைத்திருநாள் வாழ்த்துக்கள்..

தை பிறந்தாவது நமக்கு வழி பிறக்கட்டும்.............