நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Thursday, December 9, 2010

கொக்குவில் இந்துவின் பழையமாணவர் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளை தமது கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை கடந்த மாதம் 27 ஆம் திகதி கொண்டாடியிருந்தமை அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்பிக்கையில் ( ஆமாங்க! விழாவுக்கான அழைப்புகள் ஒழுங்காக சென்றஅடையவில்லையோ!!! அல்லது அழைக்கப்படவில்லையோ தெரியவில்லை??? விழா நடந்தது பழைய மாணவருக்கு பெரிதாக தெரியாதாம்) நடந்த விடயங்களை பகிரலாம் தானே!!!! நம்ம பாடசாலைதானே... நம்ம முன்னவர்கள், இன்றையவர்கள், எம்முடன் பழகியவர்கள், நம்ம ஆசிரியர்கள் அனைவரையும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்துள் நுழைகிறேன். உண்மையில் பார்க்க சந்தோஷமாகவே இருந்தது. வரவேற்பு வாயிலில் வாழைமரம் அதனோடு கூடிய பழக்குலை பார்க்கும் போது எமது கலாச்சாரங்களுக்கு எமது கல்லூரி என்றும் மறக்காது. என்றும் பின்பற்றும் என்பதற்கு ஒரு அடையாளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனோடு கூடிய நூற்றாண்டு விழாவுக்கான அறிவித்தல் சுவரொட்டி காணப்பட்டது.








மிகவும் மகிழ்ச்சியுடன் உள்நுழையும் போது வாயிலில் மங்களகரமாக நிறைகுடத்துடன் பழையமாணவர் சங்கத்தினர் வரவேற்றனர்.
சந்தோசமாக உள்நுழைந்து மண்டபத்தை பார்த்தேன். . கூடுதலாக வந்திருந்தவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள்தான். ஆனால் மண்டபம் நிறையவில்லையே என்று கவலையாகத்தான் இருந்தது. அனைத்தும் மட்டுபடுத்தப்பட்ட அழைப்புகளா?? அல்லது ஒருவருக்கும் விழா நடைபெறுவது தெரியாதா? உண்மையில் பழைய மாணவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தான். நூற்றாண்டு விழா ஒருமுறைதான் வரும். கொண்டாடும் போது அனைவருக்கும் சொல்லி கொண்டாடுங்களையா??? நிறையப்பேர் எங்கே? எப்ப நடந்தது என்டு கேட்கிறாங்கப்பா???? இவ்விழா அமைதியாக கொண்டாட வேண்டிய விழா இல்லை. ஆடம்பரமாக எமது கல்லூரித்தாயின் மைந்தர்கள் சளைத்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய விழா!. மிக மிக எளிமையாக நடந்தேறிவிட்டது  என்ற கவலை........





                     


நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டபடி சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.
( நம்ம ஆட்கள் நேரம் எண்டால் ம்ம்ம்ம்). மங்கள இசையுடன் ஆரம்பமாகியது. அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதன்பின்னர் பழையமாணவர் சங்க தலைவரின் வரேபேற்புரை இடம்பெற்றது. தலைவர் வரவேற்புடன் தனது ஆதங்கங்களையும் தமது பழைய மாணவர்சங்க வளர்ச்சி பற்றியும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வாத்திய பிருந்தா இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. உண்மையில் பார்வையாளர்களின் அபிமானத்தை பெற்ற நிகழ்ச்சியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அவர்களின் திறமையை பார்த்தவுடன் நிகழ்ச்சிநிரலில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அவர்களின் திறமைக்கு நேரம் அதிகரிக்கப்பட்டது மகிழ்ச்சி தான். பங்குபற்றிய கலைஞர்களை குறிப்பிடும் போது அவர்களில் கூடுதலானோர் வேறு துறை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் என்று கூற முடியாத அளவுக்கு தமது இசையில் உள்ள திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். அவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவிக்கதான் வேண்டும். அவர்களின் பயணம் இத்தோடு நிறைவு பெறாமல் தொடரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்க வேண்டும். அத்தோடு அவர்கள் அனைவரும் எம் பழையமாணவர்கள் என்று கூறுவதில் பெருமை அடையவேண்டும். இவர்களும் எம்மவர்கள்தான் என்பதில் புன்னகையில் புன்னகைப்பதில் மகிழ்ச்சிதான்.
அதனைத் தொடர்ந்து எங்தல அதுதான் நம்ம அதிபர் திரு.அகிலததாஸ் பிரதமவிருந்தினர் உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தமது கல்லூரியில்  வளர்ச்சியில் பழைய மாணவர்களின் பங்களிப்பு மகத்தானது என வாழ்த்தினார். தொடர்ந்தும் அவர்களின் உதவி தேவை என்றும் தெரிவித்தார். உண்மையில் எமது கல்லூரியை பொறுத்தவரையில் பழைய மாணவர்களின் உதவிதான் இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அதனைத் தொடர்ந்து கௌரவ விருந்தினராக வருகை தந்த திரு. பஞ்சலிங்கம் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் தனது மன ஆதங்கத்தை
பழைய மாணவர்கள் முன் கொட்டித்தீர்தார். அவர் கூறியதை கூறுகிறேன்.. " அன்புள்ள மாணவர்களே எமது கல்லூரி நினைவுச் சின்னங்கள் அழிவடைந்தோ அல்லது காணமலோ போய்விட்டதாம். கொஞ்சம் அதை தேடியோ அல்லது பராமரித்தோ தாருங்கள்" என்று குறிப்பிட்டார். உண்மையில் இவ் விடயம் பற்றி தகுதியடையவர்கள் சிந்தியுங்கள். ஏதாவது வழி சொல்லுங்கள்....... அதனை தொடர்ந்து பழைய மாணவர்சங்க செயலாளர் திரு.ஜெகநாதன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இறுதி நிகழ்வாக கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவர்களினால் நடனம் இடம்பெற்றது. உண்மையில் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க நிகழ்வில் எதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது?? இது ஒரு புரியாத புதிராக தான் இருகக்கிறது. நடனத்துறை சார்பாக கொழும்பு மாநகரில் எமது கல்லூரி அன்னையின் மைந்தர்கள் எத்தனை அரங்கேற்றங்களை செய்துள்ளனர் என்று விழா ஒழுங்கு செய்தவர்களுக்கு தெரியவில்லையா?? அல்லது சந்தர்ப்பம் வழங்ப்படவில்லையா?? என்று தெரியவில்லை. உண்மையில் இவ்வாறான நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் தான் பிழை விடுவது வழக்கம். அதுபோலவே நடந்துள்ளது. அதைபோல நிகழ்ச்சி தொகுப்பு கூட வேறு ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளது. எத்தனை திறமையானவர்கள் எமது கல்லூரி சார்ந்தவர்கள் உள்ளனர் என்று தெரியவில்லை போலும். உண்மையில் விழா ஒழுங்கமைப்பாளர்களே! உங்களுக்கு இவ்வாறான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையா?? நீங்களும் மற்றவர்கள் போலும் எம்மவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மறுக்ககிறீர்களா??? (ஏன்பா?? நீங்களுமா???)
அன்புள்ள பழையமாணவர் சங்க கொழும்புக் கிளையினரே!! உங்கள் பணி சிறப்பானது. உங்கள் பணி தொடர்ந்தும் எம் கல்லூரிக்கும் அதாவது உங்கள் கல்லூரிக்கும் தேவை. எனினும் கொஞ்சம் உங்களில் மாற்றம் தேவை. இளைஞர்களுக்கும் உங்கள் இடங்களில் கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுத்துதான் பாருங்களேன். இப்பவும் அந்தக்காலங்களில் இருக்காமல் கொஞ்சம் மாற்றம் தேவை. மாறித்தான் பாருங்களேன்.
அதுபோல கல்லூரியின் பழையவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அதில்நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எமது கால அதிபர் திரு. கமலநாதன் அவர்கள் ( புரியுது சேர் கஸ்டப்பட்டு வீடு கட்டினது  யாரோ!!! வர்ணம் ப+சியவர்களுக்கு பெயர். என்ன செய்ய இதுதான் காலம்) வருகை தந்திருந்தார். அவரை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மகிழ்ச்சிதான்.




அன்புள்ள பழைய மாணவர்களே!! கொஞ்சம் பாடசாலை பக்கமும் எட்டி பாருங்கள். குறை சொல்வது மிக சுலபம் என்று எனக்கும் தெரியும். ஆனால் சுட்டிக்காட்டுவதும் எனது கடமை என நான் அறிவேன். அதை தொடர்ந்துதான் என் புன்னகை புன்னகைத்துள்ளது. இதில் தவறு இல்லை என்றும் நான் அறிவேன். நீங்களும் தான்.