எப்ப வரும்? எப்ப வரும்? என்று கேட்டவர்களுக்கு எல்லாம் ஆறுதல் கூறுவதாக ஓக்டோபர் 01 ஆம் திகதி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸாடர் மற்றும் ஐஸ் நடிப்பில் எந்திரன் திரைக்கு வந்தது. படம் வர முதலே ஏகப்பட்ட வரவேற்பு. எதிர்பார்ப்பு. காரணம் சங்கர் இசைப்புயல் சூப்பர்ஸாடர் மற்றும் கலாநிதி மாறன் கூட்டணி. எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா? என்றால் கொஞ்சம் கேள்விக்குறிதான். ஆனால் பிரமாண்டத்துக்கு குறைவில்லை. கொலிவுட் தரத்துக்கு படத்தை கொண்டு சென்றதுக்கு சங்கருக்கு வாழ்த்துக் கூறியே ஆக வேண்டும்.
அதுபோல இசைப்புயலை சொல்லத் தேவையே இல்லை. வழமைபோலவே படத்தில் இசை விளையாடியிருக்கிறது. பிண்ணனி இசை பிரமாதம்.
எந்திரன் படத்தை பற்றி சொல்லவேண்டுமேனில் கதை பரவாயில்லை என்றுதான் சொல்லலாம். ஆனால் பிரமாண்டத்துக்கு குறைவில்லை. சூப்பர்ஸாடர் பற்றி சொல்ல வேண்டுமேனில் வழமைபோல ஸைடல் ஒன்றும் இல்லாமல் ஒரு எளிமையான திறமையான விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். ஐஸ் பற்றி சொல்ல பெரிதாக இல்லை. வழமையான நடிப்பு. பாடல் நடனக் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். எந்திரனில் சில காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ரோபோ வை பரிசோதித்து அனைவரும் கேள்வி கேட்கும் போது ஒருவர் எழுந்து கடவுள் இருக்கிறரா? என்று கேட்கும் போது ரோபா பதில் சொல்லும் நேரம் பார்த்த அனைவருக்கும் உடல் மெய் சிலிர்த்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே ரோபோ வின் காதல் காட்சிகள் அருமை. கருணாஸ் சந்தானம் நகைச்சுவை வாய்க்கவே இல்லை.அதுபோல பட முடிவில் ரோபோவை அழிக்கும் காட்சி நீண்;டு விட்டது என்றுதான் கூறவேண்டும். கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் படம் பிரமாண்டம் தான் என்று சொல்லாம். அதைவிட பாடல்கள் ஒவ்வோன்றும் அருமை. வைரமுத்து வைர வரிகளில் விளையாடியிருக்கிறார்.
எந்திரன் படத்தை பார்த்து விட்டு வரும் போது சுட்டி டிவி பார்க்கிற ஞபாகம் தான் வருகிறது. ஏன்எனில் இப்படி ஒரு பார்வையில் நாங்கள் தமிழ்படங்கள் பார்த்ததில்லை. கார்ட்ன் தான் பார்த்திருக்கிறோம். அதுதான் சுட்டி டிவி பார்த்தது போல் இருந்தது. எனினும் படம் பிரமாண்டம் தான் என்று கூறலாம். கதை என்று பெரிதாக இல்லை. அதுசரி இப்போது எங்கே சினிமாபடங்கள் கதையுடன் வருகிறது?
எந்திரன் பிரமாண்டம்.