நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, February 7, 2010

காதல் காதல் காதல்


பெப்ரவரி 14 வந்தால் சரி. நம்ம ஆட்களுக்கு சொல்ல வேண்டுமா? எங்கு பார்த்தலும் நான் உன்னை காதலிக்கிறேன். I LOVE YOU . மம உயட்ட ஆதரிய...... என்ற வாசகங்கள் தான். காதல் வாசகங்களால் கறுப்பு நிற தார் வீதி வண்ணமயமாக ஜொலிக்குதய்யா! அதுபோலத்தான் SMS, MMS மற்றும் FACEBOOK போன்றவையை சொல்லவா வேண்டும்!


"எங்கும் காதல். எதிலும் காதல்.
             காதல் இல்லையே     சாதல்"
          என்ற வரி தான் ஞபாகம் வருகிறது. நீங்கள் நினைப்பது புரிகிறது. மது காதலை பற்றி எழுதுகிறானே இவனும் காதலில் சிக்கி கொண்டானோ? என்று புலம்புவது தெரிகிறது. எனினும் நான் ஏன் நண்பர்களுக்கு பொய் சொல்ல வேண்டும். உண்மையை கூறுகிறேன் உண்மையில் நான் ஒருவரையும் காதலிக்கவில்லை.

காதல் ஒரு இனிமையான விடயம். காதல் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்தியும் இருக்கிறது. அது போல தாழ்த்தியும் இருக்கிறது.(ஆமாம். காதலிக்கும் போது பணக்கார பையனையோ அல்லது பொண்ணையோ பார்த்தால் வாழ்க்கையில் உயரலாம் தானே. என்ன? )

இன்றைய பலரின் காதல் கேள்விக் குறியாகியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம் சரியான அதாவது தக்க வயதில் காதல் கொள்ளாமை. இது தான் பலரின் பிரச்சனை. பாடசாலைக் காலத்தில் தொடங்கி விடும் காதல். இக் காலத்தில் வரும் காதல் நிலைத்தது என்று வரலாறு இல்லை. எங்காயவது ஒன்றிரண்டு வென்றிருக்கலாம். புரியாத வயதில் வரும் காதல் புரியாத புதிர் ஆகிவிடும். நண்பர்களே ஜாக்கிரதை. நிறைய பேரின் வாழ்க்கை இவ்வாறு தான் அழிந்து போய் நிற்கிறது. புரியாத வயதில் காதல் கொண்டு அது தோல்வியில் முடிந்தவுடன் காதல் என்னை அழித்துவிட்டது என்று புலம்புவது. என்ன நியாயம் ஐயா! எனவே காதல் கொள்பவர்களுக்கும் காதல் தோல்வி என்று புலம்புவர்களுக்கும் இது ஒரு அறிவுரையாக இருக்கட்டும்.

அடுத்த பிரதான காரணம் காதலர்கள் தம்மிடையே புரிந்துணர்வு இல்லாமையே காரணம். இந்த புரிந்துணர்வு என்ற விடயத்துக்குள்ளேயே சந்தேகம் என்பதை இணைக்கலாம். அன்புள்ள காதலர்களே! நீங்கள் உங்கள் காதலில் சந்தேகம் கொள்ளாதீர்கள். நீங்கள் நல்ல புரிந்துணர்வுடன் காதலியுங்கள். நிச்சயம் உங்கள் காதல் வெல்லும்.

அன்புள்ள காதலர்களே! நீங்கள் உங்கள் காதலில் நம்பிக்கை வையுங்கள்.
 நீங்கள் வாழ்க்கையில் காதல் வைத்திருங்கள்.
ஆனால் காதலே வாழ்க்கை ஆக்காதீர்கள்.
( இது எப்படி இருக்கு!!!!!! சும்மா அதிருதில்ல!!)

காதல் தோல்வி என்று புலம்பும் நண்பர்களே! உங்கள் காதலில் நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் இல்லாது போயிருக்கலாம். திருத்த முடிந்தால் திருத்துங்கள். காதல் கை நழுவி சென்று இருந்தால் இருந்து யோசிக்காமல் உங்கள் வாழ்க்கையை மேலே கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை காதலிலே முடிவடைவதில்லை. அதை விட வாழ்க்கையில் அழகான நிறைய தருணங்கள் உண்டு. அவற்றை அனுபவியுங்கள்.

அதை விட பெரிய கொடுமை காதலர்கள் படும்பாடு இருக்குதே! அப்பா தாங்கவே முடியாது!!!!!!. அவங்க அடிக்கிற லூட்டியும் லொள்ளும் முடியல. நிம்மதியாக இருக்கலாம் என்று BEACH க்கு போன முடியல. கொஞ்சம் சுத்தி பாருங்கையா! ஆட்கள் நடமாட்டம் இருக்கு. Beach, Park என்று ஆரம்பிச்சு இப்ப பஸ்ஸையும் விடுறாங்க இல்ல. முடியல்லை உங்க லொள்ளு தாங்க முடியல ஐயா.

அதைவிட பெரிய கொடுமை handphone. யார் ஐயா இந்த handphone  கண்டு பிடிச்சது? கண்டு பிடிச்சவனுக்கு கூட இத்தனை calls வந்திராதுப்பா. வந்திராது. அதை விட sms பெரிய கொடுமை. ஒருவர் காதலிக்கிறாரோ? இல்லையோ என்று phone message type pad  இல் வைச்சு பிடிச்சிடலாம். என்ன கேவலாம இருக்கோ அவ்வளவுக்கு அவரது காதலின் ஆழம். ஐயோ! ஐயோ! நீங்கள் நினைப்பது புரிகிறது. காதலித்து பாரு அதன் அருமை புரியும்? என்று. சரி சரி. நிச்சயம் சந்தர்ப்பம் கிடைச்சா உங்களோட அந்த இனிய உணர்வையும் பகிர்ந்துக்கிறேன். நம்புங்க ஐயா நம்புங்க.

இன்னும் கொஞ்சப்பேர் நம்மிடையே இருக்கினம். கட்சித்தாவல்களையே தம் வாழ்க்கையாக கொண்டவர்கள். ( கட்சித்தாவல் என்று குறிப்பிடுவது உங்களுக்கு விளங்கும் தானே!) இவர்கள் எப்போதும் திருந்தப் போவதில்லை.

" காதல் கூடாது என்று சொல்ல
       அது கெட்ட செயல் ஒன்றும் இல்லை"

அன்புள்ள காதலர்களுக்கு இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.

அனைவரது காதலும் வெற்றியில் முடிய வாழ்த்துக்கள்.
 
 
நன்றி வலைப்பதிவு நண்பர்களே. நன்றி. எனக்கும் எங்கள் பதிவில் இடம் தந்ததுக்கு நன்றி