நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Wednesday, December 16, 2009

காதலைக் கட்டிலில்
கட்டிப் போட்டு
கால்கள் விரைந்தன

காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..

இன்னொரு பனிக்காலம்
இலைகளின் நுனியிலிருந்து
கண் சிமிட்டியது..
காத்திருந்து...காத்திருந்த

அலுத்த எனக்கு
கன்னத்தில் ஒரு முத்தம்
கயவனடா நீ.
கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க
கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம்.
மீசை குத்தாமல்

இந்தக் காதலர் தினத்திலாவது!!!

Tuesday, December 15, 2009

PRINCIPLE OF OUR LIFE 5



PRINCIPLE OF OUR LIFE 4



PRINCIPLE OF OUR LIFE 3


PRINCIPLE OF OUR LIFE 2


PRINCIPLE OF OUR LIFE 1



Friday, December 4, 2009

தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது


மதம்
பிடிக்காத
மதம்
பிடிக்கும்
மதம்
இல்லாத
மதம்
இருக்கிறதா ?


செல்லமே.....



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய்....

நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்

எனக்கு ஒரு சந்தேகம் செல்லம
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?

Thursday, December 3, 2009

அம்மா

நான் சொல்லி முதலில்

அழுத மூச்சொலியே -அம்மா தான்
என்னை பிரசவிக்கும் வரை - என் உயிர் அவளிடம் தான்
அவள் என்னை சுமந்து
களைத்தபோது
எனக்கும் மூச்சு வாங்கியது!
அவளின் கருவறையை - நான்
கால்களால் உதைத்து
கைகளால் பிறண்டிய போது
அவளின் வயிறு வலித்ததை
சந்தோசம் - என நினைத்தவள் அன்னை!
எனக்கொரு மகன்பிறக்க மாட்டானா?
என ஏங்கிய போது என்னம்மா? எனக்கேட்கத்தூண்டியது
என்மனம் வெளிவர முடியாத நிலையில்
எப்படி பேசமுடியும் - ஆனால் உணர்ந்திருக்கிறேன்


என் முனியம்மா..



பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.


காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.


ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.


எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.


இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.


முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..


முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.