நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Sunday, April 22, 2012

யாழ் கம்பன் விழா 2012

யாழ்ப்பபாண கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழா 2012 நேற்று (21.04.2012 சனிக்கிழமை) நல்லூர் பரமேஸ்வரி மண்டபத்தில் அரங்கேறியிருந்தது. நிறைய நாட்களுக்கு பின் நல்ல தமிழ்சுவையை நல்லூரிலே ருசிக்க முடிந்தது என்றால் மிகையாகது. உண்மையில் 17 வருடங்களுக்கு பின் இக் கம்பன் விழா யாழ்ப்பாணத்திலே அரங்கேறியுள்ளது.  தனிப்பட்ட சிலரின் காரணங்களுக்காகவும் அரசியல் பிரச்சனையாலும் கம்பன் விழா யாழில் இடம்பெறாமல் இருந்தது. உண்மையில் சிலரின் அவ் நடவடிக்கையால் நாம் வெட்கப்படவேண்டியே உள்ளது.
நடந்தேறிய கம்பன் விழா காலை, மாலை என இரு அமர்வுகளாக நடந்தது. காலை அமர்வில் "பேரழகனான இராமன்" என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் இடம்பெற்றிருந்தது. மாலை நிகழ்வில் " கம்பநாடன் கவிதையோடு காலமெல்லாம் வாழ்ந்திடலாம்" என்ற கவிதையரங்கும் "தவறிழைத்த தந்தையர் குற்றக்கூண்டில்" என்ற வழக்காடு மன்றமும் இடம்பெற்றது. எம் மண் தந்த பேச்சாளர்கள் கவிஞர்களை இம்மேடை மீண்டும் தூசி தட்டி புதுப்பித்துள்ளது என்றால் மிகையாகது. திரு.கம்பவாரிதி, திரு.பாலசண்முகன், திரு.லலீசன், திரு.பிரசாந்தன், திரு.சோ.ப, திரு.மணிமாறன், திரு.ஜெயசீலன், திரு.சிவசிதம்பரம், என எம் பேச்சாளர்களோடு திரு.இராமலிங்கம் மற்றும் திரு.சண்முகவடிவேல் என இந்திய பேச்சாளர்களோடு விழா சூடு பிடித்திருந்தது.
அளவான கூட்டம் அமைதியான அவை என வித்தியாசமான ஒரு உலகத்துக்கே அங்கிருப்பவர்களை அழைத்துச் சென்றிருந்தது. ஆனால் இன்னும் அவை நிறைந்திருக்கும் விழா பற்றிய விளம்பரம் சரியாக செய்யப்படவில்லை. அது ஏன் என்றுதான் தெரியவில்லை??? இனி நாம் கம்பன் கழகத்தால் நிறைய விழாக்களை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இப்படி நடைபெறும் தமிழ் விழாக்களை அரசியல் ஆக்காதீர்கள். கம்பன் விழா போன்ற விழாக்கள் தமிழ் விழாக்கள். இது அரசியல் நிகழ்வுகள் அல்ல. எனவே இப்படியான விழாக்கள் மூலம் தமிழை வளருங்கள்.. அத்தோடு ஏன் இவ்வளவு நாளும் கம்பன் விழா நடைபெறவில்லை என்ற வீண் விதண்டாவாதமும் வேண்டாம். இனியாவது நாம் தமிழர் என்ற ரீதியில் ஒற்றுமையாக தமிழை வளர்ப்போம்.. வெட்டிப்பேச்சுக்களை தவிர்ப்போம்.
மீண்டும் தமிழை அதுவும் நல்ல அழகான தமிழை ருசிக்கத் தந்தமைக்காக அனைவருக்கும் நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.
எனினும் எம் தூய தமிழில் இந்திய தமிழ் கலப்பதை கூடியளவுக்கு தவிர்ப்பது சிறப்பு...

Monday, February 13, 2012

என்னை மறக்கவிடு........


கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.

கலந்து களித்த நாட்களை
களவாடிப் போனது யார்?
களைத்து போனேனடி சகியே...

அன்று உன்னோடு அத்வைதமான
அந்த நல்ல நாட்களை - இன்று
அழித்தெறிந்து போனது யார்?

என் கோபுரக் கனவுகளை
கொல்லியிட்டு
இன்னொரு இதயம் தொட்டு நிற்பவளே.

கொல்லும் உன் நினைவுகளுடன்
இனியும் குடித்தனம் நிகழ்த்த
முடியாது எனக்கு.

கொடிநடையாய் என் நினைவுகளை
போகவிடு
என்னை மறக்கவிடு........

Friday, January 20, 2012

நாங்களும் ஊடகம்தான்


 
 
இந்த பக்கத்தில் வந்த பதிவை பாருங்க. நான் லோஷன் அண்ணா கு  எதிரானவன் இல்லை. அவர் நல்ல அறிவிப்பாளர், நல்ல ஊடகத்தில் இருப்பவர். அதை விட நல்ல பதிவர். LOSHAN ANNA you are GREAT...
எனக்கு கடுப்பு இந்த ஊடகம் என்று சொல்லும் மூஞ்சி பக்கத்தில் தான். ஒருவரை புகழ வேண்டும் என்பதற்காக ஒருவரை குறை கூற கூடாது. இவர்கள் எல்லாம்.............


அன்புள்ள இந்த பக்கத்தின் உரிமையாளரே..
உங்கள் நோக்கங்கள் அறிந்தோம். உங்கள் நடவடிக்கைகள் நாம் அறிவோம். என் பார்வைக்கு நீங்கள்  உங்கள் பாதையில் இருந்து சற்று விலகுவதாக தோன்றுது.
உங்கள் நோக்கம் -  எமது இந்த தளத்தினது ஒரே நோக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய நிகழ்வுகளையும்
யாழ் மண்ணின் நிகழ்வுகளையும் சங்கமிக்கவைப்பதே..அது தவிர வேறு எந்த குறுகிய எண்ணமும் இல்லை...பல்வேறு நாடுகளில் வசிக்கும் எங்கள் உறவுகளே உங்கள் நிகழ்வுகளை காட்சிப்படுத்த முன்வாருங்கள்...வேற்றுமைகள் பேதங்களைக் களைவோம் தமிழராய் ஒன்றிணைவோம்... ( உங்கள் பக்கத்தில் இருந்து )

இப்படியாக இருக்கும் நீங்கள் ...
"இன்று முளைத்த காளான்கள் சரியான தமிழ் உச்சரிக்கக் கூட முடியாதவர்கள் இன்று மேகாபிளாஸ்ற் வைக்கினமாம். "
நானும் லோஷன் அண்ணா ரசிகன் தான். அதற்காக இவ்வாறு இந்த பக்கத்தில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் என்றும் தனி ஸ்டைல். வெற்றி தனி ஸ்டைல். உங்கள் விளம்பரத்துக்காக இதில் தேவை இல்லாத கதை வேண்டாம். ஒருவரும் இங்கே இருந்த போது ஒன்றுமே செய்தது இல்லை.புலம்பெயர்ந்த நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தால் உங்கள் கிரமாத்தை வளருங்கள். இதில் சும்மா கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஊடகத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் ஊடகத்தை வளர்ப்பார்கள். நீங்கள் ஒன்றும் பண்ண தேவை இல்லை . குத்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒரு ஊடகமாக இருங்கள். ஊடக தர்மம் தெரியும் என்று நம்புறன்.
 புலம்பெயர்ந்து சென்று விட்டு எங்கள் மண் என்று கத்துவதில் பயனில்லை. அனைவருக்கும் நாட்டு நிலமை தெரியும். கையில் பேனா கிடைத்தவுடன் எதுவம் எழுதலாம் என்று நினைத்துவிடாதையுங்கோ????

Wednesday, January 11, 2012

வவுனியா - யாழ்ப்பாணம் Route No 87/3

வவுனியா - யாழ்ப்பாணம் பஸ் பயணம். வாழ்க்கையில் இனியும் அனுபவிக்க நினைக்காத ஒரு துன்பம். கொழும்பிலிருந்து ஒருநாள் காலையில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். 10 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து வவுனியா பஸ் ஏறி ஒருமாதிரி ஒரு இருக்கையை பிடித்து பஸ் பயணம் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் பஸ்ஸில் செல்வது என்றால் ஒரு வெறுப்பான விடயம். இதற்காகவே நிறையநாட்கள்  வீடு  செல்லாமல் இருந்தது உண்டு. எனினும் 7 மணித்தியால பயணம் வவுனியா வரை. இடையில் உணவுக்காக ஒரு நிறுத்தம் என்று வவுனியாவரை சுமுகமாகவே இருந்தது.
வவுனியா போய் சேர கிட்டத்தட்ட 4 மணி ஆகிவிட்டது. போய் இறங்கியவுடன் யாழ்ப்பாண பஸ் "வாங்க வாங்க என்று யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தது. பஸ்க்குப் போனால் ஏறி நிற்க கூட இடமில்லை. மந்தையில் ஆடு மாடுகளை அடைத்தது போல்  அடைத்திருக்கிறார்கள். பஸ் கிளினர் " தம்பி வாங்க தம்பி வாங்க இடம் இருக்கு. ஏறுங்க ஏறுங்க" என்ற நச்சரிப்புடன் நானும் கெதியாக போய் சேர வேண்டிய அவசரத்தில் ஒரு மாதிரி மற்றவங்களின் கால்களை மிதிச்சு ஏறியாச்சு. பஸ்ஸில் பாட்டுக்கு மட்டும் குறைவில்லை. யாழ்ப்பாணம் அச்சுவேலி பஸ்ஸில் ஒலிப்பது போல் ஒலித்தது. நான் நின்ற நிலைக்கு பாட்டு பயங்கர கடுப்பாய் இருந்தது. ஒரு மாதிரி பஸ் பயணிக்க ஆரம்பித்தது. இன்னும் 4 மணித்தியாலம் பயணிக்க வேண்டுமே என்று நினைக்க அலுப்பாய் இருந்தது. 7 மணித்தியால பயணம் மிக சந்தோசமாக இருந்தது. இந்த 4 மணித்தியால பயணம் .............

உண்மையில் எங்கட ஆட்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்ய தெரியாது என்பது வெளிப்படை உண்மை.   பஸ்ஸில் ஏறத் தெரியாது. பஸ்ஸில் நிற்கத் தெரியாது. இறங்குபவர்களுக்கு இடம் விட்டுத்தர தெரியாது. என்று பலவற்றை சொல்லலாம். பயணிகளோ ஒருவரின் கால் மேல் ஒருவர் என மிதிச்சப்படி நிற்கிறார்கள். ஆனால் இடம் இருக்கு ஏறுங்க என்ற கிளினரின் சத்தத்தை கேட்கும் போது போய் அறைய வேண்டும் போல் இருந்தது. பலபேர் காலை மிதிச்சு செல்வது தெரிகிறது. மிதிப்பவர்களும் ஒன்றுமே தெரியாது போல் செல்வதும் வேடிக்கையாக இருந்தது. அதோடு பஸ்க்குள் சில பெண்கள் போடும் மொக்கை இருக்கே... ஐயோ.. தாமும் பஸ்க்குள் இருக்கம் என்று காட்ட... அதோடு கிளினர் ஏதாவது சொல்ல அவர்கள் ஏதாவது சொல்ல என்று... கொழும்பு - வவுனியா பஸ் பிரயாணத்தையும் வவுனியா யாழ்ப்பாணம் பஸ் பிரயாணத்தையும் ஒப்பிடும் போது கடுப்பாக இருக்கும் எப்பதான் நாம் திருந்தப்போறம் எண்டு தெரியாது????????

Friday, December 30, 2011

2011 GOOD BYE

2011 ஆம் ஆண்டு முடிவடைந்து 2012 பிரவேசிக்க காத்து இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கிறது. பார்ப்பம் என்ன மாதிரி அமையப்போகுது என்று..??
2011 உண்மையில் பல ஏற்றங்கள் அதைவிட எதிர்பார்காத ஏமாற்றங்கள். கடந்து செல்லும் ஆண்டு எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு படிப்பினையை தந்ததிருந்தது. இந்த வருடம் தை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பமாகியிருந்தது. தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை யாழ்ப்பாணம் கட்டிடவியல் திணைக்களத்தில் கள பயிற்சிக்காக பணியாற்றியமை ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். பயிற்சியில் நிறைய படிப்பினைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என நிறையவே தந்திருந்தன. அனைத்தும் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள். எனது பாதையில் எனக்கான பாதையில் ஒரு தைரியத்தை தந்திருந்தன.





அதைவிட சென்ற வருடம் நிறைய சந்தோசங்களை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மிக முக்கிய விடயம் என்றால் 2 வது  அண்ணாவின் திருமணம் மற்றும் 1 வது அண்ணாவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம், அப்பாவின் பதவிஉயர்வு என நிறையவே சந்தோசங்களை தந்திருந்தன. இரண்டு நிகழ்வுகளும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். அண்ணாவின் திருமணம் நிறைய சந்தோசத்தை தந்திருந்ததுடன் உறவுகளின் சின்ன உதைப்பை தருவதிலும் அந் நிகழ்வு குறைந்து விடவில்லை. எனினும் அண்ணாவின் திருமணம் மூலம் எமக்கான மிகத் தெளிவான பயணத்தை காட்டி இருக்கிறது என்றால் மிகையாகது.
அப்பம்மாவின் மரணம் சென்ற ஆண்டு அனைவரையும் கலங்க வைத்தது. அதைவிட வாழ்க்கையில் இன்னுமொரு இழப்பு சென்ற ஆண்டு தந்து விட்டு செல்லுகிறது என்றால் மிகையில்லை. இன்னும் வலிக்கிறது. என்றுதான் புரியுமோ?? அவ்விழப்பு மனிதர்கள் எப்படி என்று காட்டியது. இன்னும் ஏமாளியாக இருக்காதே?? என தெளிவு படுத்தியது.

hp://www.youtube.com/watch?v=JGkTI0fdGXA&feattture=share

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு அனுபவமாக இருந்தது நான் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் அறிவிப்பு செய்ய கிடைத்த சந்தர்ப்பம் தான். எனது வாழ்க்கையில் எதிர்பார்க்காத சந்தர்ப்பம்.
சந்தோசமான மொக்கை நிகழ்வுகள் பல நடந்துள்ளன. பதிவர்களோடு கிரிக்கெட் விளையாடியது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நண்பர்களுடன் மலையகத்துக்கு ஒரு சுற்றுலா என பல நிகழ்வுகள்.
2011 சொல்லிச் சென்ற படிப்பினைகள் பல
     -உறவுகளை விட நண்பர்கள் மேல்....
     - உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய். வேறு எவனுக்கும் பயப்பிடாதே.
     -என்றும் கூட இருப்பது சகோதரர்களும் நண்பர்களும் தான்.

2011 சினிமா நான் பார்த்ததில் சிறந்தவை
 படங்கள் - தெய்வதிருமகள்  , எங்கேயும் எப்போதும் , கோ
 நடிகர் - விக்ரம்
 நடிகை- அஞ்சலி ,   ரிச்சா
 நகைச்சுவை நடிகர் -  சந்தானம்
 இயக்குனர் - விஐய்
 இசைமைப்பாளர்- ஜி.வி பிரகாஷ்
 பாடல் -காதல் என் காதல் அது ( மயக்கம் என்ன)


அரசியல்  ஐயோ வேண்டாம் ஐயா வீண் வம்பு.

2011 மிகவும் சந்தோசமான வருடம் தான். சில உறவுகளை மேலும் வளர்த்திருக்கிறது. நட்புகள் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. என்னை யார் என்று உணாத்தியிருக்கிறது.
2012 ஆம் ஆண்டை சந்தோசமாக வரவேற்போம். 2012 ஆம் ஆண்டும் சந்தோசமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
 

Sunday, November 27, 2011

கிரிக்கெட் போட்டியும் மயக்கம் என்ன படமும்

கிரிக்கெட் போட்டி

நேற்று வலைப்பதிவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் கிடைச்சது. உண்மையில் இதை ஒழுங்குபடுத்திய அஸ்வினுக்கு நன்றிகள். மீண்டும் எனக்கு நிறைய நாட்களின் பின் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பமும் கிடைத்தது. உண்மையில் சந்தோசமாக இருந்தது. வலைப்பதிவர்கள் சேர்ந்து ஒரு பிரிவாகவும், அஸ்வின் நண்பர்கள் இன்னொரு அணியாகவும், அத்தோடு மது அண்ணாவின் ( ஐயோ இது நான் இல்லை இன்னொரு மது) நண்பர்கள் என இன்னொரு அணியாகவும் விளையாட தீர்மானித்து அணிக்கு 8 பந்து பரிமாற்றம் என தீர்மானித்து விளையாடினோம். காலநிலையும் நேற்று எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. எனினும் இடையில் மழை வந்து வெருட்டி விட்டு சென்றது.
9.30 க்கு அனைவரையும் ஒன்று கூட அழைப்பு விடப்பட்டு இருந்தது. அதே போல நேரகாலத்துக்கு எல்லாரும் வந்திருந்தாங்க. சொன்னா நம்புங்ககையா!!!! ஒரு மாதிரி எமது வலைப்பதிவு அணியில் நான், மாலவன் அண்ணா, கோபி அண்ணா, அஸ்வின், நிருஜன், கோபி, பகி அண்ணா என எமது அணி நீண்டு கொண்டே சென்றது. ஒரு மாதிரி எமது அணி 11 பேரை சேர்த்துவிட்டது. எனினும் லோசன் அண்ணாவும், மருதமூரான் அண்ணாவும் தான் தாங்கள் முதலாவதாக வரவுதாக அறிவித்ததாக கூறி இருந்ததாக கதைத்தார்கள். ஆனால்........... பகீ அண்ணாவை நாஙகள் மறக்க முடியாது. அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு உள்ளம். இடையில் குளிர்பான உதவிகளை நேரில் வந்து தந்து சென்று இருந்தார் லோசன் அண்ணா. இருவருக்கும் நன்றிகள். அனைத்துப் போட்டிகளிலும் வெல்லுவோம் என்று களமிறங்கிய எமது அணி சிறப்பாக விளையாடிய போதிலும் கிடைத்தது..........................
நேற்றைய போட்டி மூலம் வலைப்பதிவர்கள் தமக்கிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தார்கள். என்றும் வலைப்பதிவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இப்படியே சந்தோசமாக மொக்கை போட்டுட்டே இருக்கனும்................

மயக்கம் என்ன


நேற்று ஈரோஸில் மயக்கம் என்ன படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது. தனுஸ், ரிச்சா நடிப்பில் ஜிவி பிரகாஸின் இசையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி வித்தியாசமாக இருந்தது. தனுஸ் ஒரு புகைப்பிடிப்பாளர். தனக்கென்றொரு நிலையை அடைய துடிக்கும் இளைஞன். தனுஸின் தாய் தந்தை சிறுவயதிலே இறந்துவிட நண்பர்களின் அரவணைப்பிலேயே வளர்கிறான். நடிகை ரிச்சா நண்பனின் DATING GIRL ஆக அறிமுகமாகிகிறாள். அதன் பின் எப்படி தனுஸ்க்கு ஜோடி சேருகிறது என்பது தான் படத்தின் முதல் பாதி கதை. முதல்பாதியில் இருந்து மிக தெளிவாக சில விடயங்களை இயக்குனர் தெளிவுபடுத்துகிறார்.
பெண்கள் மிக தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் நாம் தான் DATING , LOVE என்று வித்தியாசம் தெரியாமல் குழப்பித் திரியிறம். தனுஸ்க்கு ஜோடியாக மாறும்போது சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி இருந்தார் இயக்குனர். படத்தின் மீதி கதையில் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் எவ்வாறு உதவுகிறாள் என்று நகருகிறது. இடையில் பைத்தியமாக மாறும் தனுஸ் நடிப்பில் ஒரு ஜே போட்டே ஆக வேண்டும். சில இடத்தில் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று புரியவே இல்லை. படத்தில் பாடல்களும் பாடல் அமைப்பும் பிரமாதம். ஓட ஓட ஓட தூரம் குறையெல்ல என்ற பாடலும் காட்சி அமைப்பும் பிரமாதம். அத்தோடு பிறைதேடும் .... என்று ஆரம்பிக்கும் மெலடி பாடலும் பிரமாதம் ஜிவி பிரகாஸ் இசை பிரமாதம். உண்மையில் மயக்கம் என்ன படம் மயக்கம் தான்..........

Monday, October 10, 2011

விருதுகளும் விம்மல்களும்………

நிறைய நாட்களின் பின் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
என்னையா??? ஓரே கவிதை வெளியீட்டு நிகழ்வுகளும் விருது வழங்கல் நிகழ்வுகளும் நிறைந்து போய்விட்டன… இது தமிழின் வளர்ச்சியா?? இல்லை வீழ்ச்சியா??? தெரியவில்லை. கடைசி 6 மாத காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுகளை பார்த்தாலே விளங்கும். இப்போது கவிதை வெளியீட்டு நிகழ்வில் விருது வழங்குவது சகஐம் ஆகிட்டு…. சும்மா சும்மா சும்மா எல்லாம் விருது கொடுக்கிறாங்கப்பா????விருது வழங்குவது நல்ல விடயம். ஆனால் அவ் விருது யாருக்கு ? யார் வழங்குவது என்பது தான் முக்கியம். விருது வழங்குவது என்பது மிகவும் எளிமையான விடயம் அல்ல. இப்படியான விடயங்களால் விருதுக்குரிய மதிப்பு குறைந்து போவதை நாம் காணமுடியும். விருதுக்குரிய மதிப்பை நாங்கள்தான் காப்பாற்றவேண்டும்.
அன்புள்ள கவிஞர்களே நீங்கள் எத்தனை கவிதை புத்தகங்களையும் வெளியிடுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் விருது கொடுக்கிறம் என்று சொல்லி விருதின் பெயரை பாழாக்கி விடாதீர்கள். விருதை பெறுபவர்களும் சற்று யோசிக்கவேண்டும்?? இவ்விருது எனக்கு ஏற்றதா?? இல்லையா?? நான் தகுதியா?? ஏன சிந்தியுங்கள். இதனால் சிலவேளை தங்கள் பெயரை தாங்களே பழுதாக்குகிறார்கள்.
இப்போது கவிதைப்புத்தகங்கள் வெளியிடுவது மலிந்து போய்விட்டது. இது கவிதைக்கு வந்த சாபக்கேடா??? அல்லது வளர்ச்சியா?? தெரியவில்லை. உண்மையில் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.
கவிஞர்களே தயவு செய்து கவிதையை பாழாக்கிவிடாதீர்கள். கவிதை என்பது ஒரு கவிஞனின் உணர்வு. உணர்வு ரசிக்கபடவேண்டுமே தவிர கடுப்பேற்றக் கூடாது………